நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் மூன்று வாரங்கள்..
நம்ம ஊருக்கு வந்தா ஒரு தனி சுகம். சென்னைக்கு
வரும்போதே முடிவு செய்து விட்டேன் என்னவெல்லாம்
சாப்பிட வேண்டுமோ வெளுத்து கட்டுவது என்று..
மிளகாய் பஜ்ஜி,சுண்டல், பால்கோவா,தேன் மிட்டாய்
என்று வெளுத்து வாங்கி பான்ட் சைஸ் இரண்டு இன்ச்
கூடி விட்டது. சிங்கப்பூர் போய் டயட் தான்:) .
விடுமுறையை ஆண்டு இறுதியில் எடுத்து கொள்ளலாம்
என்று மூன்று வாரங்கள் சென்னையில் இருந்து வேலை.
இப்படி தான் சென்னையில் ஒரு மாதம் இருக்க முடிகிறது:(
கும்பகோணம் போயிருந்தேன்.கும்பகோணம் போகும் வழியில்
ஒரு இடத்தில,நிழலாக இருந்ததால் ஒரு வீட்டு அருகில்,
நிறுத்தி கையில் கொண்டு சென்ற எலுமிச்சை சாதமும்,
தயிர்சாதமும்(பிட்சா,பர்கர் எதுவும் இதற்கு இணை இல்லை)
கை கழுவ பாட்டில் திறந்தால் அந்த வீட்டில் இருந்தவர்,
எதுக்கு குடிக்கற தண்ணிய வீனாகுகிரீர்கள், உள்ள வந்து
சாப்பிட்டு கிணற்று நீரில் கை கழுவுங்கள் என்றார்.நகரத்தில்
உள்ள நாம் எல்லோரயும் சந்தேகமாக பார்க்கும் போது
கிராம மக்கள்,இன்னும் அன்பாக எல்லோரையும் நடத்துவதை
பார்த்தால் நகரமயமாக்கலை/தீவிரவாதிகளை நினைத்து
வெட்கமாக இருக்கிறது. நகரத்தில் இருந்து வெளி நாடு போன
எனக்கே இப்படி என்றால் கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள்
சொந்த ஊர் வர எவ்வளவு ஏங்குவார்கள்...
கேஷவ் போன வருடம் சிங்கப்பூர் வந்ததும் ஊருக்கு
போகவேண்டும் என்று அழுதான். நான் அவனை
சமாதான படுத்தி சொன்னேன்.இன்னும் கொஞ்ச நாளில்
சரியாய் போய்விடும் அழாதே. அதற்கு அவன்..
நீயும் அம்மாவும் கொஞ்ச நாளில் சமாதனன் ஆவீர்கள்
எனக்கு எப்பவுமே என் சொந்த ஊர் சென்னை தான் பிடிக்கும்.
இந்த வருடம் ஊருக்கு வருமுன் அவன் சொன்னது..
அப்பா நாம சென்னைலயே இருக்கலாம்பா...
எம்மகன் !!!!
( சில ஆண்டுகளுக்கு முன் என்னை சிங்கபூருக்கு மாற்றியதால்
வேலையே விட்டேன்... அனால் இப்போது அதே கம்பனியின்
சிங்கப்பூர் ஆபிசில்... எல்லாம் விதியின் விளையாட்டு)
10 comments:
வாங்க சென்னைத் தமிழன். இம்புட்டு நாள் சென்னையிலா. எங்க இருக்கீங்க? நான் அஷோக் நகரில் இருக்கேன். ஒரு நாள் சந்திப்போம்.
Thanks Vijay,
I am in W.Mambalam, leaving on
29 Jun.
நல்லா இருக்கிங்களா முதலாளி ?. கேஷவ் எப்படி இருக்கார். ரொம்ப கேட்டதா சொல்லவும் :)
தாரணி பிரியா,
அனைவரும் நலம். நீங்க எப்படி ருக்கீங்க மேடம்?
Enjoy பண்ணுங்க முகுந்தன்.
கண்மணிக்கும் கோவில்பட்டி தான் எப்போதும் சொர்க்கம்.... இது தான் ரத்த பாசம் என்பதோ?
//கண்மணிக்கும் கோவில்பட்டி தான் எப்போதும் சொர்க்கம்.... //
குழந்தைகள் அன்புக்காக ஏங்குகிறார்கள் ...
எப்போதும் எல்லோரும் கூடவே இருக்கவேண்டும் அவர்களுக்கு ..
தலை..நல்லாருக்கீங்களா.. பெங்களூர் பக்கம் வந்துருக்கலாம்ல.. கேஷவ் எப்புடி இருக்காரு..
நான் ரொம்ப நல்லா இருக்கேன் ராகவ், நீங்க? கேஷவ் நல்லா இருக்கான். ஒரு வாரம் தான் லீவ். அதிலேயே திருப்பதி, கும்பகோணம் பொய் வந்தாச்சு.
மெட்ராஸ்லயா இருந்தீங்க? எகொசா இது, சரியா 29த் பாக்கறேன். :( கேஷவ் எப்படி இருக்கான்?
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
Post a Comment