கேஷவ் எப்போதும் சொல்வது ...
நான் அப்பா செல்லம். அப்பாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
என் மனைவி ஒருநாள் அவனிடம் கேட்டது...
ஏன்டா நீ என் வயிற்றில் தான் பத்து மாசம் இருந்த.
அப்பா செல்லம்னா என்ன அர்த்தம்?
அதற்கு அவன் சொன்ன பதில்...
நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)
***************************************************************
சர்வம் படம் பார்த்துகொண்டிருந்தோம் , பாதி படத்தில்
கேஷவ்: வீட்டுக்கு போலாம்
நான் : படம் முடியட்டும் போலாம்.
கேஷவ்: நான் கதை சொல்றேன், ஹீரோ கெட்டவனை கொன்னுடுவான்
அது தான் கதை எனக்கே தெரியுமே இதை எதுக்கு பார்க்கனும்...
நான் : ?????
***************************************************************
கேஷவ்: அப்பா என் கூட விளையாடு..
நான் : ஆபீஸ் வேலை இருக்கு,நீ அம்மா கூட விளையாடு.
கேஷவ் : நீ என் கூட விளையாடு. எப்ப பார்த்தாலும்
ஆபீஸ் வேலை எதுக்கு?
நான் : ஆபீஸ் வேலை பண்ணால் தான் சம்பளம் வரும், அப்போ தான்
உனக்கு பொம்மை வாங்க முடியும்.
கேஷவ் : நீ ஒன்னும் வேலை பண்ண வேண்டாம்.நீ என் கூட
இருந்தாலே போதும்.எனக்கு பொம்மையே வேண்டாம்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை....
***************************************************************
சிங்கப்பூர் வந்த புதிதில் கேஷவ் ஊருக்கு போக வேண்டும் என்று
சொல்லி விட்டான்.எனக்கு சிங்கப்பூர் பிடிக்கவில்லை,
நான் சென்னை போகணும்.
நான் அவனை சமாதான படுத்த முயன்றேன்,அதற்கு அவன்...
நான் அம்மாவை விட்டு இருந்ததே இல்லை,
உனக்கு ஊருக்கு போகணும்,பாட்டி கூட இருக்கணும்னு தோணாதா?
என்ன சொல்வது?
25 comments:
Wow.......Keshav kalakuran:))
\\அதற்கு அவன் சொன்ன பதில்...
நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)\\
கேஷவின் பதிலை கண்டு பிரமித்து போனேன்......!!
Really I thank God for Keshav.....who is such a great blessing in your life Mukundan!
God bless him more!!
\\\\ஏன்டா நீ என் வயதில் தான் பத்து மாசம் இருந்த. \\
வயதில்-> வயித்தில் [typo]
BTW, Keshav looks so adorable in the photo slide show in your blog's front page.
பசங்க பொதுவா அப்பாகிட்ட ஒட்டவே மாட்டாங்க. கேசவ் உங்க மேல எவ்வளவு பாசம் வெச்சு இருக்கான். நீங்க நிஜமாவே குடுத்து வெச்சவர் முகுந்தன் சார். கேசவ் அம்மாகிட்ட சொல்லி ரெண்டுபேருக்கும் சுத்தி போட்டுக்கோங்க.
சூப்பர் பதிவு அண்ணா..
உங்க பையன் சான்ஸே இல்ல... :)
/*நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)*/
LOL :)
/*நான் கதை சொல்றேன், ஹீரோ கெட்டவனை கொன்னுடுவான்
அது தான் கதை எனக்கே தெரியுமே இதை எதுக்கு பார்க்கனும்...
நான் : ????*/
நிறைய படம் பார்த்துட்டான்னு நினைக்கிறேன் :)
/*நீ ஒன்னும் வேலை பண்ண வேண்டாம்.நீ என் கூட
இருந்தாலே போதும்.எனக்கு பொம்மையே வேண்டாம்.*/
படிப்பதற்கே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு :)
/*நான் அம்மாவை விட்டு இருந்ததே இல்லை,
உனக்கு ஊருக்கு போகணும்,பாட்டி கூட இருக்கணும்னு தோணாதா?*/
கண்டிப்பாக பதில் சொல்ல முடியாது...
\\அதற்கு அவன் சொன்ன பதில்...
நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)\\
//who is such a great blessing in your life Mukundan!
//
Yes Divya, I cannot ask anything more.i am so much blessed.
//வயதில்-> வயித்தில் [typo]//
Yes, changed now.
//BTW, Keshav looks so adorable in the photo slide show in your blog's front page.//
Thank you.
தாரணி பிரியா,
//பசங்க பொதுவா அப்பாகிட்ட ஒட்டவே மாட்டாங்க. கேசவ் உங்க மேல எவ்வளவு பாசம் வெச்சு இருக்கான்.//
இதனாலேயே என்னால் அவனை விட்டு ஒரு நாள் கூட இருக்க முடிவதில்லை.
// நீங்க நிஜமாவே குடுத்து வெச்சவர் முகுந்தன் சார். //
ஆமாம்.
//சூப்பர் பதிவு அண்ணா..
//
நன்றி கனகு....
//நிறைய படம் பார்த்துட்டான்னு நினைக்கிறேன் :)
//
தியேட்டர் போவது ரொம்ப கம்மி. சர்வம் தான் அவன் பார்த்த மூன்றாவது படம்.
டி.வியில் சில படங்கள் பார்ப்பதுண்டு.
பையன் பின்றான். :)
//கேஷவின் பதிலை கண்டு பிரமித்து போனேன்......!!
ரிப்பீட்டேய்!!!
//பசங்க பொதுவா அப்பாகிட்ட ஒட்டவே மாட்டாங்க. கேசவ் உங்க மேல எவ்வளவு பாசம் வெச்சு இருக்கான்.
ரிப்பீட்டேய்!!!
//படிப்பதற்கே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு :)
ரிப்பீட்டேய்!!!
\\நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)
\\
ஹா ஹா ஹா
ரொம்ப இரசிச்சேன்ப்பா
\\நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)
\\
ஹாஹா :-)
\\கேஷவ்: நான் கதை சொல்றேன், ஹீரோ கெட்டவனை கொன்னுடுவான்
அது தான் கதை எனக்கே தெரியுமே இதை எதுக்கு பார்க்கனும்...
நான் : ?????
\\
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குழந்தைகளுக்குக் கூட அந்தப் படம் பிடிக்கலியா? :-)
Keshav Rocks!!
சுத்தம்...ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாது போல இருக்கு? :))
keshav looks smart in all the snaps...ரொம்ப tall ஆ வருவான் போல இருக்கு...
கேஷவ் ........
சொல்ல வார்த்தைகள் இல்லை .....
இதை எல்லாம் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்
//பையன் பின்றான். :)
//
கார்த்திக்,
ஆமாம், முடியலை :-)
//ஹா ஹா ஹா
ரொம்ப இரசிச்சேன்ப்பா//
நன்றி ஜமால்..
//என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குழந்தைகளுக்குக் கூட அந்தப் படம் பிடிக்கலியா? :-)
//
அட ஆமாம் , நான் இதை யோசிக்கவே இல்லையே :)
//இதை எல்லாம் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்
//
Mayvee,
ரொம்ப சரியாய் சொன்னீர்கள் ..
//நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)
யம்மாடி கேஷவ் அப்படியே உங்களை மாதிரின்னு நினைக்கிறேன். உங்க மனைவியை ரெம்ப ஓட்டாதீங்க. இருந்தாலும் ரெம்ப ரசித்தேன்.
//நான் கதை சொல்றேன், ஹீரோ கெட்டவனை கொன்னுடுவான்
அது தான் கதை எனக்கே தெரியுமே இதை எதுக்கு பார்க்கனும்...
இந்த மாதிரி லொள்ளு படத்துக்கெல்லாம் கூட்டிட்டு போகாதீங்க முகுந்தன்.
//நீ என் கூட
இருந்தாலே போதும்.எனக்கு பொம்மையே வேண்டாம்.
கண்மணிக்கும் அப்படித்தான் அப்பா, அம்மா பக்கத்தில் இருந்தாலே போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.
எதற்காகவும் உறவுகளை விட்டுக்கொடுக்காத குணம் வளர வளர நம்மை விட்டு விலகிவிடுகிறதோ... அல்லது வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிரதோ தெரியல..... ஒரு வேளை அது தான் இயற்கையின் நியதியாகக் கூட இருக்கலாம்.
//யம்மாடி கேஷவ் அப்படியே உங்களை மாதிரின்னு நினைக்கிறேன். உங்க மனைவியை ரெம்ப ஓட்டாதீங்க. இருந்தாலும் ரெம்ப ரசித்தேன்.//
நான் ஓட்டறது கிடையாது , அவன் சொந்த கருத்து இது :)
//இந்த மாதிரி லொள்ளு படத்துக்கெல்லாம் கூட்டிட்டு போகாதீங்க முகுந்தன்.
//
ஆமாம் நீங்க சொல்வது சரி, நன் வருடத்தில் ஒன்றிரண்டு படங்களே தியேட்டரில் பார்ப்பது உண்டு. இனி கொஞ்சம் நல்ல படமாக பார்க்க வேண்டும் .
//
எதற்காகவும் உறவுகளை விட்டுக்கொடுக்காத குணம் வளர வளர நம்மை விட்டு விலகிவிடுகிறதோ... அல்லது வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிரதோ தெரியல..... ஒரு வேளை அது தான் இயற்கையின் நியதியாகக் கூட இருக்கலாம்.
//
ரொம்ப சரியாக சொன்னிர்கள் குந்தவை.
//நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)//
So nice :)
இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
//நான் பத்து மாசமும் யோசிச்சிண்டே இருந்தேன்...
எப்படி நம்ப இந்த வயத்த விட்டு குதிச்சு அப்பா வயத்துக்குள்
போய் உட்கார்றதுனு.. :)//
So nice :)
//
Thank you..
முகுந்த்,
யாவரும் நலந்தானே? ரொம்ப நாளா ஆளக் காணும்? கேஷவ் எப்படி இருக்கிறான்?
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா,
எல்லோரும் நலம், இரண்டு மாதமாக வேலை ரொம்ப ரொம்ப ஜாஸ்தி,
எப்போதும் படிக்கும் ஒரு சில பதிவுகளை படிக்க முடிவதில்லை,
இன்னும் ஓரிரு மாதம் இப்படி தான் போலிருக்கிறது.
கேஷவ் பற்றியே நிறைய பதிவெழுதலாம் அவ்வளவு பேச்சு.
Post a Comment