திருவாளர் விஜய் என்னை வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்..
என்ன விஜய் , என்னை போய் ஹிஹி ...
வழக்கொழிந்த சொற்கள்... என்னவோ போங்க ,
நான் கேள்விப்பட்ட ஒன்னு ரெண்டு சொற்கள் இருக்கு..
சுளுந்து- சுள்ளி, காய்ந்த இலைகள் முதலியவற்றால் ஆன தீப்பந்தம்
(முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் சொன்னார்)
ஆக பெரிய - இருப்பதிலேயே பெரிய ...
(இது சிங்கப்பூர் நியூஸ் சானல்களில் வருவது..
பின்னர் தான் தெரிந்து கொண்டேன் இது தமிழ்நாட்டில் புழக்கத்தில்
ஒரு காலத்தில் இருந்தது என்று...)
சென்னை தமிழில் முன்பு நிறைய கேள்வி பட்ட சொல்...
இப்பொழுது இருக்கிறதா என்று தெரிய வில்லை...
கஸ்மாலம் - அர்த்தம் எல்லாம் கேட்க கூடாது ரொம்ப தப்பு :-)
நான் இதை பற்றி மேலும் எழுத அழைப்பது மூவரை
(அட மூவரை என்பதே வழக்கொழிந்த சொல் போல தான் இருக்கிறது :)
1) தாரணிப்ரியா
2) திவ்யப்ரியா
3) Mayvee
16 comments:
ஆக சிறந்த பதிவு அப்படின்னு சொல்லலாமா?
:)
சரி சரி வழக்கொழிந்த சொற்களை இனிஎண்டாலும் தேடிப்பிடியுங்க.க க
//ஆக சிறந்த பதிவு அப்படின்னு சொல்லலாமா?
:)//
கார்த்திக்,
எனக்கு ரொம்ப குளுருது :)
தோ ... போடுகுறேன் என் பதிவை.... பாஸ் நாங்க எல்லாம் திருநீலகண்டன் ஐயவின் மாணவர்கள்......
பதிவு போடசுங்க ..... சென்னை தமிழரே....
ஆஹா...என்னையும் மாட்டி விட்டுடீங்களா? சூப்பர்...நான் வழக்கில் இருக்கற தமிழ் சொற்களையே ஒழுங்கா பேசுறது இல்ல...இருந்தாலும் கூகிள் பண்ணியாவது போட்டுடறேன் ;)
கஸ்மாலம்...இது வழக்கில் இல்லையா? ;)
//கஸ்மாலம்...இது வழக்கில் இல்லையா? ;)//
எனக்கு தெரியலை திவ்யப்ரியா....
அது சரி நீங்க கஸ்மாலம் என்ற சொல் வழக்கில் இல்லையா
என்று கேட்டீர்களா? இல்லை, கஸ்மாலம் இது வழக்கில் இல்லையா என்று
என்னை திட்டினீங்களா அவ்வ்...... :)
Mayvee,
நேத்து நீங்க போஸ்ட் போட்டவுடனே படிச்சிட்டேன் :)
சென்னைத் தமிழனுக்கு தமிழிலிருந்து இரண்டு வார்த்தை கண்டு பிடிக்க இவ்வளவு கஷ்டமா?
இருந்தாலும் நல்ல attempt. சுளுந்தெல்லாம் எங்க ஊர் பக்கம் இன்னும் புழக்கத்திலுள்ள வார்த்தைதான் மக்கா :-)
பதிவு திவ்யமாயிருக்கு!!(இதுவும் வழக்கொழிந்த சொல்தானோ:)
திவ்யமாயிருக்குன்னா சிறப்பா இருக்குன்னு அர்த்தம்
//சென்னைத் தமிழனுக்கு தமிழிலிருந்து இரண்டு வார்த்தை கண்டு பிடிக்க இவ்வளவு கஷ்டமா?//
நீங்க வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுத சொன்னால் நான் எங்கே போவேன்:)
சென்னை தமிழன் அப்படின்னா ஏதோ உலக தமிழர் தலைவன் மாதிரின்னு நினைக்க வேண்டாம். சென்னையை சேர்ந்த ஒரு தமிழன் அவ்வளவு தான் :)
//திவ்யமாயிருக்குன்னா சிறப்பா இருக்குன்னு அர்த்தம்//
ஷைலஜா ,
உங்கள் கமெண்ட் பேஷா இருக்கு ...
முகுந்தன் said...
//திவ்யமாயிருக்குன்னா சிறப்பா இருக்குன்னு அர்த்தம்//
ஷைலஜா ,
உங்கள் கமெண்ட் பேஷா இருக்கு ...
January 19, 2009 7:11
>>>>>>>>>>>>>>>
முகுந்தன்! பேஷ் மட்டும் 2தட்வை சொன்னாதான் அந்த சொல்லுக்கே சிறப்பாம்!(மாட்டிட்டீங்களா:)))
ஆஹா இந்த பதிவை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன் முதலாளி :(
மன்னிச்சுடுங்க. இதோ இன்னிக்கு தொடர் பதிவு போட்டுடறேன் :)
முதலாளி பதிவு போட்டாச்சுங்க :)
Post a Comment