Sunday, January 11, 2009

அபியும் நானும்

ஒரு பாசமுள்ள அப்பா தன் பெண்ணிடம் உள்ள அபரிமிதமான
பாசத்தினால் படு(த்து)ம் பாடு தான் கதை. பிரகாஷ்ராஜ் ரொம்ப
இயல்பாக நடித்திருக்கிறார்.முதலில் வரும் அந்த ஊஞ்சல் காட்சி
குழந்தை நிறுத்தாமல் ஆட்டு என்று சொல்வதும் அதற்கு
ப்ரித்விராஜ் என்னால் முடியாது நீ சறுக்குமரம் விளையாடு என்று
சொல்வதும் நான் அடிக்கடி அனுபவிப்பது :)

ஐஸ்வர்யா தன் மகளை ஸ்கூலில் சேர்க்க வேண்டும்
என்று சொல்வதும் மூன்று வயதே ஆன குழந்தையை
ஸ்கூலில் சேர்பதா என்று பிரகாஷ்ராஜ் செய்யும் அலப்பரையும்
கேஷவை ஸ்கூல் சேர்க்க வேண்டும் என்று என் பெற்றோரும்
மனைவியும் சொன்ன போது நான் போட்ட கூச்சலை
நினைவு படுத்துகிறது :)

வெந்நீர் கையில் கொட்டிவிட்டது என்று குழந்தை அழ ,
என்ன ஏது என்று விசாரிக்காமல், குழந்தை கையில்தான்
கொட்டிவிட்டது என்று நினைத்து தன் மனைவியை(ஐஸ்வர்யா)
அறைவதும், பின்னர் வெந்நீர் கொட்டியது
ஐஸ்வர்யா கையில் என்று தெரிந்ததும் வழிவது என்று
பிரகாஷ்ராஜ் பின்னிவிட்டார்.

குழந்தை ஒரு பிச்சைகாரரை கூட்டி வருவதும் அவருக்கு
பெயர் வைக்கும் காட்சிகளும் நமக்கு சிரிப்பு வரவழைக்கின்றது..
அந்த பிச்சைகாரர்(குமரவேலு) தன் வீட்டில் வேலைக்கு சேர்ந்து
பின்னர் ஏதோ பார்டிக்கு போகும் போது அவரும் ஹோட்டலுக்கு
வரவேண்டும் என்று குழந்தை சொல்வதும் பின்னர் அங்கு
சாப்பிடும் போது அவர் முதல் முறை ஹோட்டலுக்கு
உள்ளே சாப்பிடுகிறேன் என்று சொல்வதும்,
அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :(

த்ரிஷா சைக்கிள் ஓட்டும் போது பிரகாஷ்ராஜ் பின்னாலேயே
செல்வதும் ,சைக்கிளை நிறுத்தி த்ரிஷா அவரிடம் வீட்டு
செல்லுமாறு சொல்லிவிட்டு அப்பா I know what iam doing
என்று சொல்லும்போது, நாம் எல்லோரும் நம்
அப்பா அம்மாவிடம் எதற்காவது இதே போல்
சொல்லியிருப்போம் என்று தோன்றுகிறது....

தான் காதலிப்பது பிரகாஷ்ராஜிற்கு தெரிந்த பிறகு ,
மற்றொரு சமயம் த்ரிஷா மீண்டும் அப்பா I Know ..
என்று சொல்ல வருவதும் அதற்கு பிரகாஷ்ராஜ்
தெரியும் அபி, I know what i am doing ன்னு
சொல்ல போற , இதை நீ 16 இருக்கும்போதே
சொல்லிட்ட என்று சொல்லும் காட்சி நெகிழ்ச்சி.

த்ரிஷா ஒரு சர்தார்ஜியை காதலிப்பது தெரிந்ததும்
பிரகாஷ்ராஜ் reaction அட்டகாசம். தலைவாசல் விஜய்
பிரகாஷ்ராஜிடம் தான் ஒருமுறை டெல்லி
போயிருந்ததாகவும் அப்போது சர்தார்ஜி டாக்சியில் போய்
அவரையே கிண்டல் செய்ததும் பின்னர் அந்த டாக்சி டிரைவர்
ஒரு ரூபாயை கொடுத்து நீங்கள் பார்க்கும் முதல் சர்தார்ஜி
பிச்சைகாரரிடம் போடுங்கள் என்று சொன்னதும் அந்த
ஒரு ரூபாய் இன்னும் தன்னிடமே இருப்பதாக சொல்கிறார்.
நாம் சர்தார்ஜிகளை கிண்டல் செய்கிறோமே தவிர அவர்கள்
என்றுமே பிச்சை எடுப்பதில்லை என்று சொன்ன விதம் சூபர்.
சர்தார்ஜி மாப்பிள்ளைக்கு(Independent Journalist and Economist?)
பிரதமரிடம் இருந்து போன் வருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

த்ரிஷாவின் திருமணத்திற்கு முன் பிரகாஷ்ராஜ் மனைவி
ஐஸ்வர்யாவிடம் நம் காதல் கல்யாணத்திற்கு பின் என்னோடு
வந்து விட்டாய்,நான் சொன்னதால் உன் பெற்றோரையே விட்டுவிட்டாய்
அவர்கள் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும்
என்று சொல்வது very touching...

நம்பினால் நம்புங்கள் நான் பல முறை ஊருக்கு போகும் முன்
என் மனைவியிடம் என்னால் கேஷவை விட்டு இருக்க முடியவில்லை,
அவனுக்கும் என்னை விட்டு இருக்க முடியவில்லை, நீ எப்படி
கல்யாணம் ஆன புதிதில் உன் அப்பா அம்மாவை விட்டு இருந்திருக்கிறாய்
என்று கேட்டு இருக்கிறேன்(என்னுடையது காதல் திருமணம் இல்லை )

நான் இந்த படத்தை இன்னும் சில முறை பார்ப்பேன்..

31 comments:

Vijay said...

Me the First :o-)

முகுந்தன் said...

Yes!!

Vijay said...

எனக்கும் இந்தப் படம் ரொம்ப பிடித்திருந்தது. சில நெகிழ்ச்சயான காட்சிகள் வைத்து அவ்வப்போது நெஞ்சை நக்கினாலும் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு. த்ரிஷாவுக்கு ஒரு நல்ல பிரேக். சும்மா விஜயுய்டனும் அஜீத்துடனும் அப்படி போடு போடுன்னு ஆடாமல் நல்ல பாத்திரத் தேர்வு செய்திருக்கிறார்.
பிகாஷ் ராஜ் ராதா மோஹன் கூட்டணியல் இன்னொரு நல்ல படம். பிரகாஷ் ராஜுக்குள்ளும் இவ்வளவு நகைச்சுவையா. கமல் ஹாசனைத் தவிர வேறு better performer கிடையாது என்று நினைத்திருந்தேன். அதைப் பொய்ப்பித்து விட்டார், பிரகாஷ் ராஜ். Hats off to you Mr. Prakash Raj.
அந்தப் பிச்சைக் காரனாக வரும் பாத்திரம் சூப்பர். அவருக்கும் நகைச்சுவை இயல்பாகவே வருகிறது. வடிவேலு விவேக் காமெடியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்த நகைச்சுவை கொடுத்து அசத்தியிருக்கிறார் அந்த ரவி கதாபாத்திரம்.

கொடுமையென்னவென்றால், இம்மாதிரி நல்ல படங்களுக்கு ஜனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடையாது.

Vijay said...

முகுந்தன்,
உங்களுக்கு பின்னூட்டம் இடுவது மாதிரி இட்டு, நானே ஒரு பதிவு எழுதிட்டேன் :-)

Sorry for using a lot of your comments space :-)

/Vijay

முகுந்தன் said...

//கொடுமையென்னவென்றால், இம்மாதிரி நல்ல படங்களுக்கு ஜனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடையாது.//

இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக நம் மக்கள் இந்த மாதிரி படத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்... சிங்கப்பூரில் ஹௌஸ்புல்லாக ஓடுகிறது ..

முகுந்தன் said...

//முகுந்தன்,
உங்களுக்கு பின்னூட்டம் இடுவது மாதிரி இட்டு, நானே ஒரு பதிவு எழுதிட்டேன் :-)

Sorry for using a lot of your comments space :-)//

நான் நினைத்து , எழுதாமல் விட்டுவிட்டதை இன்னும் நிறைய சேர்த்து எழுதி இருக்கீங்க விஜய்..

மேவி... said...

அந்த படத்தில பாட்டு வரிகள் ஒன்னு வரும் ....

" பாசத்தினால் பைத்தியம் ஆனவர்கள் உண்டு"
இந்த வரிகள் என்னக்கு பொருத்தும். என் மேல பச மழை இல்லைங்க பச சுனாமி தாங்க எங்க வீடுல.
இந்த படத்தை பார்த்த பின் என்னக்கும் ஒரு பெண் பிள்ளை பெற்று கொள்ள வேண்டும் என்ற அசை வந்து உள்ளது.
அவளக்கு ஒரு பச உலகத்தை காட்ட வேண்டும்.

படம் சூப்பர் தாங்க.

Divyapriya said...

//அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :(//

நானும் தான் :)))

மேவி... said...

"அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :("
me too cried

Anonymous said...

//கமல் ஹாசனைத் தவிர வேறு better performer கிடையாது என்று நினைத்திருந்தேன். அதைப் பொய்ப்பித்து விட்டார், பிரகாஷ் ராஜ். Hats off to you Mr. Prakash Raj.

ரெம்ப படம் பார்க்காத நானே 'மொழி' படம் பார்த்ததிலேயிருந்து Prakash Raj ரசிகை ஆகிவிட்டேன்.

அபியும் நானும் முடிந்தால் பார்க்கிறேன்.

முகுந்தன் said...

//அந்த படத்தில பாட்டு வரிகள் ஒன்னு வரும் ....

" பாசத்தினால் பைத்தியம் ஆனவர்கள் உண்டு"
இந்த வரிகள் என்னக்கு பொருத்தும். என் மேல பச மழை இல்லைங்க பச சுனாமி தாங்க எங்க வீடுல.
//

ரொம்ப குடுத்து வெச்சவர் நீங்க என்னை மாதிரி :)

முகுந்தன் said...

//"அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :("
me too cried//

Mayvee,
அட என்னை மாதிரி தானா நீங்களும்?

முகுந்தன் said...

//"அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :("
me too cried//

Mayvee,
அட என்னை மாதிரி தானா நீங்களும்?

முகுந்தன் said...

// Divyapriya said...
//அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :(//

நானும் தான் :)))
//

நீங்களுமா திவ்யப்ரியா ?
த்ரிஷா கல்யாணத்தில் குமாரவேலு பேசும் காட்சியில் கூட ரொம்ப கஷ்டமா இருந்தது :(

முகுந்தன் said...

//
ரெம்ப படம் பார்க்காத நானே 'மொழி' படம் பார்த்ததிலேயிருந்து Prakash Raj ரசிகை ஆகிவிட்டேன்.

அபியும் நானும் முடிந்தால் பார்க்கிறேன்.//

கண்டிப்பா பாருங்க குந்தவை...

அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் நான் எம்.ஜி.ஆர் பார்த்திருக்கேன்,சிவாஜி பார்த்திருக்கேன் என்று விக்ரமை புகழும் காட்சி அவருக்கே பொருந்தும் ..

anujanya said...

முகுந்த்,

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. விமர்சனங்கள் நல்லா இருக்கு. போன பதிவில் வாழ்த்த மறந்தேன். ஐம்பது பதிவுகள்! சூப்பர்மா. எனக்கு இன்னும் இரண்டு மாசம் ஆகும்னு நினைக்கிறேன் :)

அனுஜன்யா

முகுந்தன் said...

கண்டிப்பா பாருங்க அனுஜன்யா,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி....

Raghav said...

முதல்ல பொங்கல் வாழ்த்துகள் முகுந்தன்.. அண்ணிக்கும், கேஷவ்க்கும் வாழ்த்துகளை சொல்லி விடுங்கள்..

Raghav said...

எனக்கென்னமோ அவ்வளவா பாதிக்கலை முகுந்தன்.. ஒருவேளை எனக்கு பெண் குழந்தை பிறந்து அதுக்கப்புறம் வேண்டுமானால் இந்த உணர்வை புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.

Raghav said...

//அபி என் அம்மா சார் என்று சொல்லும் போது
நான் அழுதேவிட்டேன் :(//

என்னை மிகவும் உருக வைத்த படம் என்று சமீபத்தில் ”தாரே ஜமீன் பர்” படத்தை சொல்லலாம்..

முகுந்தன் said...

ராகவ்,
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

முகுந்தன் said...

//எனக்கென்னமோ அவ்வளவா பாதிக்கலை முகுந்தன்.. ஒருவேளை எனக்கு பெண் குழந்தை பிறந்து அதுக்கப்புறம் வேண்டுமானால் இந்த உணர்வை புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.

//

பெண் குழந்தை வேண்டும் என்று இல்லை ராகவ், நம் பெற்றோர் கூட இந்த மாதிரி நமக்காக செய்திருக்கலாம்

முகுந்தன் said...

//என்னை மிகவும் உருக வைத்த படம் என்று சமீபத்தில் ”தாரே ஜமீன் பர்” படத்தை சொல்லலாம்..
//

எனக்கும் ராகவ் , அந்த ஓவிய போட்டி முடிவில் தர்ஷீல் அமீர்கானை கட்டிக்கொளும் காட்சியில் நான் ரொம்பவே உருகி விட்டேன்...

அபியும் நானும் படம் முழுவதும் இது போன்ற காட்சி இல்லை ,
ஆனாலும் அந்த படம் என்னை ரொம்ப உருக்கி விட்டது :)

Unknown said...

atha evvalavu iluthu sollamal irunthirukkalam mozhi thantha director film mathirai illai,

Karthik said...

வாவ், லூஸுத்தனமான விமர்சனங்களில் இருந்து விடுதலை. அனுபவம். கலக்கல்ஸ்.

i'm yet to watch the movie.
:)

முகுந்தன் said...

//
athimathura said...
atha evvalavu iluthu sollamal irunthirukkalam mozhi thantha director film mathirai illai,

//

வாங்க ஹரி...
மொழியோடு ஒப்பிட்டால் இது கொஞ்சம் நீளமா தெரியும் ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)

முகுந்தன் said...

//வாவ், லூஸுத்தனமான விமர்சனங்களில் இருந்து விடுதலை. அனுபவம். கலக்கல்ஸ்.

i'm yet to watch the movie.
:)//

ரொம்ப நன்றிங்கோ ...

கண்டிப்பா பாருங்க கார்த்திக்...

ஷைலஜா said...

முகுந்தன்
இந்தப்படத்தை இப்ப்தான் பாத்தேன்

எதார்த்தப்படம், ஒண்ணும் ஆபாசம் ரெட்டைஅர்த்தவசனம் க்ளப்டான்ஸ் எல்லாம் இல்லாத நல்லபடம்ம்தான்
ஆமா இந்த அதீத அன்பு பாசம் உரிமை- இதெல்லாம் ஒரே பெண்குழந்தை இருக்கறவஙக்ளுக்குத்தான் வரும் உணர்வாக்கும்....என்னவோ ப்ரகாஷ் ராஜ் ஐஸ்வர்யா த்ரிஷா மூவரும் ஒண்ணும் அவ்ளோ நம்மை பாதிக்கல... பழையபடம் பாசமலர்லஒரு கைவீசம்மாகைவீசுக்கு சிவாஜி நடிப்புக்கு இப்போவும் அழறேன் நான்.

முகுந்தன் said...

//ஆமா இந்த அதீத அன்பு பாசம் உரிமை- இதெல்லாம் ஒரே பெண்குழந்தை இருக்கறவஙக்ளுக்குத்தான் வரும் உணர்வாக்கும்....//

ஷைலஜா,
நான் இதை மறுக்கிறேன், சொந்த அனுபவம் இதை விட மோசம் :)
நான் பார்த்தவரையில் நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள்..

Divya said...

me too loved the movie:))

முகுந்தன் said...

Divya,
I am waiting for the DVD here.would like to see once more!!