Thursday, January 1, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

கொஞ்ச நாளா வேலை ஜாஸ்தி அதான் எழுத
முடிவதில்லைனு சொல்லி வந்தாலும்
இன்னொரு காரணம்...
சட்டில இருந்தா தானே அகப்பைல வரும் :)


கடந்த ஒரு வாரமாக சென்னையில்...

கேஷவ் என்னை ஏர்போர்டில் பார்த்ததும் ஒன்றும் பேசவில்லை...
கொஞ்ச நேரம் கழித்து காரில் சொன்னான் எனக்கு உன்னை
பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு அதான் வெட்கம்...
எனக்கு அவனை பார்த்ததும் சொர்கதிற்கே போனது போல்
உணர்ந்தேன்...

கேஷவ் என்னை ஒரு வாரமாக என்னை எங்கேயும்
போக விடவில்லை, நான் உனக்காக காத்துண்டிருந்தேன்
இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
இரண்டு நாட்கள் மைசூர் போயிருந்தோம்,
அங்கே அவனுக்கு ஒரு துப்பாக்கி பொம்மை வாங்கி தந்தேன்...
அதை என்னை பார்த்து அவன் சுட, அதில் இருந்த
குச்சி என் மேல் பட்டது , நான் இன்னொரு முறை
சுட்டால் அந்த பொம்மையை தூக்கி வீசிடுவேன்
என்று சொல்ல , அதற்கு அவன் சொன்ன பதில்,
அம்பு தானே உன் மேல் பட்டது,
எதற்கு நீ துப்பாக்கியை தூக்கி போடுவேன்னு சொல்ற..
இதை கேட்டதும் எனக்கு நாம் அடிக்கடி
எங்கோ இருக்கும் கோபத்தை இனி
வீட்டில் காட்ட கூடாது என்று
புத்தாண்டிற்கான தீர்மானமாக
முடிவெடுத்து விட்டேன்...

மேல்கோட்டை நரசிம்மர் கோவிலுக்கு போயிருந்தோம்...
ரொம்ப நல்ல தரிசனம்...அங்கு நிறைய குரங்குகள்...
நான் கையில் ஒரு கம்போடு தான் போனேன்..
போகும் வழியில் ஒரு சிறுவன் கையில்
லட்டு வைத்து கொண்டு குரங்கிடம்
காண்பித்து ஏமாற்றினான்.. நான் அவனை
பார்த்து சொன்னேன், இப்போ நீ சும்மா இல்லன்னா
அது வந்து உன்னை கடிக்கும்.. அவன் நான்
சொன்னதை கேட்கவில்லை,
மீண்டும் ஒரு முறை அவனை நான் திட்ட,
அதற்கு அவன் கன்னடத்தில் சொன்னது
(எந்த பாஷையில் என்னை திட்டினாலும் புரியும்)
நான் குரங்கை தானே ஏமாற்றுகிறேன்,
உனக்கு என்ன வந்தது?

என் இரண்டாவது தீர்மானம்:
எப்போதும் மற்றவர் விஷயத்தில் தலையிட கூடாது...

24 comments:

Karthik said...

wish you happy new year!

enjoy your stay with keshav. :)

Divyapriya said...

//அம்பு தானே உன் மேல் பட்டது,
எதற்கு நீ துப்பாக்கியை தூக்கி போடுவேன்னு சொல்ற..//

எவ்வளவு பெரிய தத்துவத்த சொல்லிட்டான் இந்த குட்டிப் பையன் :)

இரண்டுமே நல்ல தீர்மானங்கள் தான்...wish u n ur family a very happy new year

முகுந்தன் said...

Thanks Karthik

முகுந்தன் said...

//எவ்வளவு பெரிய தத்துவத்த சொல்லிட்டான் இந்த குட்டிப் பையன் :)//

சிறுவர்களிடம் பெரியவர்கள்(வயதில் மட்டுமே!!) கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது :)

முகுந்தன் said...

இது என் ஐம்பதாவது பதிவு.....

இதுவரை என் பதிவுகளை படித்து நான் எவ்வளோ கொடுமையா எழுதி இருந்தாலும் அதை படித்து எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி........

தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

முகுந்தன் said...

நன்றி திகழ்மிளிர்.

மேவி... said...

"எனக்கு நாம் அடிக்கடி
எங்கோ இருக்கும் கோபத்தை இனி
வீட்டில் காட்ட கூடாது என்று
புத்தாண்டிற்கான தீர்மானமாக
முடிவெடுத்து விட்டேன்..."
nice thought...
watta an intelligent boy...

congrats for 50th post

have an colorful 2009

Raghav said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் முகுந்தன்... 50 வது பதிவிற்கும்.

அதை விட முக்கியமா கேஷவனுக்கு சிறப்பு வாழ்த்து. :)

Raghav said...

//எங்கோ இருக்கும் கோபத்தை இனி
வீட்டில் காட்ட கூடாது என்று
புத்தாண்டிற்கான தீர்மானமாக
முடிவெடுத்து விட்டேன்...//

சூப்பர்.. கேஷவா... :)

Raghav said...

//மேல்கோட்டை நரசிம்மர் கோவிலுக்கு போயிருந்தோம்...
ரொம்ப நல்ல தரிசனம்... //

அற்புதம் அண்ணா.. பெருமாள் சம்பத்குமாரன் என்கிற செல்வப் பிள்ளை. உற்சவர் சம்பத்குமாரர், எம்பெருமானார் இராமானுஜருக்கு மிகவும் உகந்த பெருமாள்.

பக்கத்திலுள்ள மிகப்பெரிய ஏரியை பார்த்தீர்களா ? இராமானுஜர் காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்த ஏரி, இரண்டு மலைகளுக்கிடையில் இருக்கும். இராமானுஜர் வாழ்ந்த குடிலும் அருகிலேயே இருக்கும். மேல்கோட்டை பயணத்தை பத்தி ஒரு பதிவு எழுதுங்களேன்.

பெங்களூர் வழியா போனீங்களா ?

முகுந்தன் said...

//nice thought...
watta an intelligent boy...

congrats for 50th post

have an colorful 2009
//

Thanks MayVee , Happy new year to you too..

முகுந்தன் said...

//அதை விட முக்கியமா கேஷவனுக்கு சிறப்பு வாழ்த்து. :)
//

Thanks and wish you a wonderful new year Raghav!!

முகுந்தன் said...

//அற்புதம் அண்ணா.. பெருமாள் சம்பத்குமாரன் என்கிற செல்வப் பிள்ளை. உற்சவர் சம்பத்குமாரர், எம்பெருமானார் இராமானுஜருக்கு மிகவும் உகந்த பெருமாள்.

பக்கத்திலுள்ள மிகப்பெரிய ஏரியை பார்த்தீர்களா ? இராமானுஜர் காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்த ஏரி, இரண்டு மலைகளுக்கிடையில் இருக்கும். இராமானுஜர் வாழ்ந்த குடிலும் அருகிலேயே இருக்கும். மேல்கோட்டை பயணத்தை பத்தி ஒரு பதிவு எழுதுங்களேன்.

பெங்களூர் வழியா போனீங்களா ?
//

சதாப்தியில் மைசூர், பெங்களூர் ஹால்ட் இல்லை ...கோவில் அருகில் இருந்த ஏரி பார்த்தேன்...
ஆனால் எதுவும் விபரம் தெரியவில்லை,மைசூரில் இருந்து ஒரு காரில் போய்விட்டு உடனே திரும்பி விட்டோம்.
கீழே செல்லபிள்ளை,
மலை மேல் யோக நரசிம்மர், கொள்ளை அழகு!!

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

முகுந்தன் said...

//இனியவள் புனிதா said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி புனிதா

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

50வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

உங்க புத்தாண்டு தீர்மானங்கள் ரெண்டுமே நல்ல தீர்மானம்தான். எல்லோருமே கண்டிப்பா ஃபாலோ செய்ய வேண்டியது. அதிலும் முதல் தீர்மானம் நான் கண்டிப்பா பாலோ செய்ய வேண்டியது.

கேஷவ் யோசிக்கும் விதம் ஆச்சரியப்படுத்துகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கும் என்னோட special wishes சொல்லிடுங்க.

முகுந்தன் said...

நன்றி தாரணிப்ரியா...

Vijay said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முகுந்தன்.
கேஷவ் கூட நிறைய நேரம் கழியுங்கள். மைசூர் எப்படியிருந்தது? மேல்கோட்டை நரசிம்மர், நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் போனதில்லை. ஒரு தரம் போகணும்.

முகுந்தன் said...

விஜய்,
கேஷவ் கூடவே தான் இருந்தேன் ஆனால் நேற்று முதல் மீண்டும் சிங்கப்பூர்:(

இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து தான் கேஷவ் இங்கே வர முடியும்..
அது வரை ரொம்ப கொடுமை...

Anonymous said...

முகுந்தன், புத்தாண்டு வாழ்த்துக்கள்.
௫0 தாவது பதிவிற்கு கூடுதல் வாழ்த்துக்கள்.
கேஷவ் தான் பாவம், ரெம்ப miss பண்ணியிருக்கான் அப்பாவை .

//நான் குரங்கை தானே ஏமாற்றுகிறேன்,
உனக்கு என்ன வந்தது?
அதானே குரங்கிற்கு அல்லவா கோபம் வரவேண்டும் உங்களுக்கு ஏன் வந்தது?

முகுந்தன் said...

நன்றி குந்தவை,உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

//அதானே குரங்கிற்கு அல்லவா கோபம் வரவேண்டும் உங்களுக்கு ஏன் வந்தது?
//

புத்தாண்டில் எனக்கு ஆப்பா ? நல்லா இருங்கமா :-)

anujanya said...

Belated happy new year to you, Keshav and all your family members.

Anujanya

முகுந்தன் said...

//Belated happy new year to you, Keshav and all your family members.

Anujanya//

Thank you sir, Wish you the same. have read couple of your posts
but could not post comments..
will soon be a regular visitor :)