Wednesday, November 19, 2008

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

போன பதிவில் நான்காம் கேள்வி தான் இந்த பதிவின் தலைப்பு...

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

தமிழ் சினிமா நம்மை நேரடியாக தாக்குதோ இல்லையோ,
அதை பார்த்து நாம் நடந்து கொள்ளும் விதத்தால் ,
நம்மால் பாதிக்கபடும் யார் வேண்டுமானால்
நம்மை தாக்கலாம்... ஆகவே உஷார்....

போனவாரம் ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்....அங்கே
விநாயகர் சன்னதிக்கு அருகில் போகும் போது ஒரு குரல் ....

ஹலோ யார் பேசறது? திரும்பி பார்த்தால் ஒரு பக்தர்
போனில் இந்த கேள்வியை கேட்டார்... நாம தான்
எப்பவும் சினிமாவால் பாதிக்க பட்டிருக்கோமே, உடனே
நீதாண்டா பேசறது என்று சட்டென்று சொல்லிவிட்டேன் :)
சொன்னதும் தான் உணர்ந்தேன்,நான் இருப்பது
ஒரு பொது இடத்தில்,நான் பதில் சொன்னது
என் நண்பனுக்கு இல்லை,எனக்கு தெரியாத ஒருவருக்கு....

நல்ல வேளை நான் சொன்னது அவர் காதில் விழவில்லை,
ஆனால் சொல்லிவிட்டு திரும்பினால் என் அருகில் இருந்த
வேறு ஒருவர் என்னை பார்த்து முறைத்துவிட்டு,
போனில் பேசியவர் அருகில் சென்று ஏதோ சொன்னார்.

நான் இன்னிக்கு ரத்தகளரி தான் என்று வடிவேலு ஸ்டைல்லில்
(திரும்ப பாதிப்பு)நினைக்க அவர்கள் இருவரும் வேறு ஏதோ
பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்...
நான் விட்டால் போதும் என்று எஸ்கேப்...

நீங்க யாராவது இப்படி மாட்டி மாட்டி இருக்கீங்களா?

24 comments:

Vijay said...

ஒரு பொது இடத்தில், அதுவும் ஒரு கோயிலில் இன்னொருவர் டிஸ்டர்ப் ஆகும் படி பேசுவதே மஹா குற்றம். அப்படியிருக்க நீங்க செய்தது மிகவும் சரி. இதுல பயப்படுவதற்கு என்ன இருக்கு?
ஆனா, இதையே நீங்க எங்க ஊர் பக்கம் சொல்லிருந்தீங்க, "எலேய் என்னிய ஒருத்தன் மருவாத இல்லாம ஏசிப்புட்டாம்லே. எடுறா அந்த அரிவாள"ன்னு அதகளம் பண்ணியிருப்பாங்க. ஏதோ சிங்கப்பூர்ன்றதுனால பிழைச்சீங்க. LOL :-)

முகுந்தன் said...

விஜய்,

நம்ம ஊர்ல சீவி இருப்பாங்க.. அங்கேயாவது ஒருவேளை கால்ல விழுந்தா மன்னிச்சிடுவாங்களோ என்னமோ, ஆனா இந்த ஊர்ல ஏதாவது நியூசென்ஸ்
கேஸ்ல புக் பன்னிருந்தாங்கன்னா
கத கந்தல் ஆகியிருக்கும் :))

Karthik said...

புதுப்பேட்டை படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால், பைக் எடுக்கும்போது யாரோ ஒருவர் ஏதோ சொல்லப் போக பயங்கரமாக கோபம் வந்தது.

நல்லவேளை அன்னிக்கு சனிக்கிழமை என்பதால் தப்பித்தார்.
:)

முகுந்தன் said...

//நல்லவேளை அன்னிக்கு சனிக்கிழமை என்பதால் தப்பித்தார்.
:)//

ஏன் சனிக்கிழமை நீங்க
அடி(வாங்க)க்க மாட்டீங்களா? :)

தாரணி பிரியா said...

விடுங்க முதலாளி
இது எல்லாம் சர்வ சாதாரணம். நான் எல்லாம் டி.ஆர் படம் பார்த்துட்டு அதே எபெக்ட்ல பேசி எங்க வீட்டுல எல்லாரையும் அழ வெச்சு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நானும் ராகவ்வும் காப்பாத்த எப்படியும் வந்துருவோம். அதனால நீங்க இதுக்கெல்லாம் பயப்படாதீங்க.

(உங்க படத்துக்கு நான் டைரக்டர் ஆகலாமின்னு ஒரு யோசனை)

ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் தயாரிப்பளாரை காப்பத்தற தவிர வேற வேலை இருக்கா என்ன?

முகுந்தன் said...

////நான் எல்லாம் டி.ஆர் படம் பார்த்துட்டு அதே எபெக்ட்ல பேசி எங்க வீட்டுல எல்லாரையும் அழ வெச்சு இருக்கேன். //

நான் வீட்டில் பேசியிருந்தால் பரவாயில்லையே :)//


//விடுங்க முதலாளி
இது எல்லாம் சர்வ சாதாரணம். //

//(உங்க படத்துக்கு நான் டைரக்டர் ஆகலாமின்னு ஒரு யோசனை)

//

என்னால முடியலை:)

Divyapriya said...

நிஜமாவே படு பயங்கரமான experience தான், எப்படியோ கடவுள் புன்னியத்துல தாக்குதல் நடக்காம தப்பிச்சிட்டீங்க ;)

Raghav said...

//தாரணி பிரியா said...
விடுங்க முதலாளி //

ஆஹா.. தாரணியால் தரணிக்கே நீங்க தான் முதலாளின்னு தெரிஞ்சுரும் போலிருக்கே.. :)

Raghav said...

உங்க அனுபவம் எனக்கு நிறையவே ஆகிருக்கு.. எல்லா நேரங்கள்லயும் காமெடியாவே முடிஞ்சுரும். :)

Raghav said...

//உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நானும் ராகவ்வும் காப்பாத்த எப்படியும் வந்துருவோம். அதனால நீங்க இதுக்கெல்லாம் பயப்படாதீங்க. //

யக்கா.. நான் அப்பாவி.. சண்டைக்கு போய் என்ன கூப்புடுறீங்களே... சாப்புட கூப்புடுங்க (கூப்புடாட்டாலும்) முத ஆளா வந்து நிப்பேன்..

முகுந்தன் said...

// எப்படியோ கடவுள் புன்னியத்துல தாக்குதல் நடக்காம தப்பிச்சிட்டீங்க ;)
/
/

ஆமாம்...

முகுந்தன் said...

//யக்கா.. நான் அப்பாவி..


//

நம்பிட்டேன் .....

Raghav said...

தல.. நாளைக்கு உங்க ஊருக்கு வர்றேன்.. சென்னையில இருக்கீகளா இல்ல சிங்கையா?

முகுந்தன் said...

Raghav,

I am in Singapore..

ச.பிரேம்குமார் said...

ஹா ஹா ஹா! Great Escape :)

முகுந்தன் said...

வாங்க பிரேம்குமார்,

ரொம்ப சரியா சொன்னீங்க....

Anonymous said...

ஆகா...பெரிய படையோட இருக்கீங்க , அப்புறம் எதுக்கு பயப்படுறீங்க முகுந்தன்?
இப்படி திடீரென்று பயங்கர பிசியாகிவிட்டீர்களே, எங்களை யார் எழுதுறதுக்கு உசுப்பேத்திவிடுறது?

முகுந்தன் said...

//அப்புறம் எதுக்கு பயப்படுறீங்க முகுந்தன்?
இப்படி திடீரென்று பயங்கர பிசியாகிவிட்டீர்களே, எங்களை யார் எழுதுறதுக்கு உசுப்பேத்திவிடுறது?
//

நீங்க எழுத ஒருத்தர் உசுபேத்தனுமா? உசுபேத்தாமலே உங்கள் கணவரை இப்படி தாக்கறீங்க :))

Anonymous said...

//உசுபேத்தாமலே உங்கள் கணவரை இப்படி தாக்கறீங்க :))

ஒண்ணும் சொல்றதுக்கில்ல.......ம்...
பாவப்பட்ட பெண்பிள்ளைகளின் பேச்சு எங்குமே செல்லாது.

Unknown said...

:))சினிமா எல்லாம் என்னைத் தாக்கினதில்ல.. ஆனா சினிமாக்கு போயி நான் தான் தாக்கப்பட்டிருக்கேன் ஹி ஹி ஹி..;)) அம்மா கையால தான்.. ஆனா, அதெல்லாம் சும்மா லுல்லுல்லாய் தான்.. :))))

மேவி... said...

s. i have been in the situation like this.

that was like typical banana comedy of gounda mani / senthil.

முகுந்தன் said...

mayvee,
thanks for ur first visit

Gurunathan said...

முகுந்தா... நேத்திக்கி கோயில் போகும்போது யாராவது வேல்கம்பு வீச்சறிவாளோட நின்னுட்டு இருந்தாங்களா? எதுக்கும் ஒரு body-gaurd வச்சிக்கறது நல்லதுன்னு தோணுது :)

முகுந்தன் said...

//எதுக்கும் ஒரு body-gaurd வச்சிக்கறது நல்லதுன்னு தோணுது //

My body gaurd will be back on
20 Dec :))