Saturday, November 1, 2008

சினிமா...

என்னை மாட்டிவிட்டது கார்த்திக்....
சாரி ரொம்ப லேட்டா எழுதறேன்...

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட
முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து சினிமா தான்,
எங்க அம்மாவும் அது தான் பார்ப்பாங்க...அப்படின்னு சொன்னா
அம்மா டின்னு கட்டிடுவாங்க (நான் சொன்னது எங்க அம்மாங்க :)).

1982 னு நினைக்கறேன்... நாங்க இருந்த ப்ளாட்ல மாடிவீட்டுல
டீவீல தூர்தர்ஷன்ல படம் பாத்திருக்கிறேன்.. அதை பார்த்த
எங்க அப்பா பையன் வேற வீட்டுக்கு போகனுமானு யோசிச்சு
டிவி வாங்கிட்டாரு(அப்போ வசதி கம்மி) இருந்தாலும்
எனக்காக எங்கப்பா டிவி வாங்கி அதுல படம் பார்த்தேன்.
படம் ஞாபகம் இல்லை.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த
தமிழ் சினிமா?ரொம்ப நாள் ஆச்சு.. ரொம்ப சுத்திட்டு இருக்கேன்.
கடைசியா அரங்கில் பார்த்த படம் சிவாஜி...
சும்மா அதிருதுல்ல....

3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ்
சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


குசேலன்...
கேஷவ் கேட்டது... ரஜினி படம்னு எதுக்கு பொய் சொன்ன?

நான் நினைத்தது...
வாசுவிடம் கேட்கவேண்டியது... இதெல்லாம் ஒரு படமா?

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தவமாய் தவமிருந்து,அஞ்சலி,குணா, நாயகன்,மௌன ராகம்,
கிழக்கு வாசல்,சம்சாரம் அது மின்சாரம்,
மூன்றாம் பிறை,தளபதி,வேதம் புதிது,முதல் மரியாதை,
ஆறிலிருந்து அறுபது வரை,தேவர் மகன்

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-
அரசியல் சம்பவம்?


பாஷா... தலைவா கோட்டை விட்டுட்டீங்க ...
மக்களே தப்பிச்சிட்டீங்க


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-
தொழில்நுட்ப சம்பவம்?


தசாவதாரம்,சிவாஜி,ஜீன்ஸ்

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்படி கேட்டால் என்ன செய்யறது... டெய்லி ஒரு தபா yahoo தமிழ்,
sify,தினமலர் படிப்பேன், வாரம் ஒருமுறை வாரமலர்,
குமுதம் படிப்பேன் கடந்த இருபது நாட்களாக ரொம்ப பிஸி:(

7)தமிழ்ச்சினிமா இசை?

எம்.எஸ்.வி, இளையராஜா ...
P.B.S, எஸ்.பி.பி, யேசுதாஸ்


8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி
சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?எப்போதாவது...
Taare zameen par


9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


நேரடி,மறைமுக,கள்ள மற்றும் எந்த தொடர்பும் கிடையாது :-)


10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?


ரொம்ப முக்கியம்... எல்லாரும் வேலைய பாருங்கப்பா
படிச்சு முன்னேறி ,குடும்பத்த காப்பாத்துங்க,
சினிமாகாரர்களுக்கு அது தொழில், பிழைப்பு ஓடும்,
நமக்கு அது பொழுதுபோக்கு ரொம்ப பார்த்தால்
பிழைப்பு கெடும்..

11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது,
மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள்
எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட
ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?
உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்


தமிழர்கள் பாவம் , மெகா சீரியல் பார்த்து சாவார்கள்...


நான் யாரை அழைப்பது?

1) விஜய் - கலக்குவார்

2) ராகவ் - இவரும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சிட்டாருங்கோ

18 comments:

தாரணி பிரியா said...

hi me the first

தாரணி பிரியா said...

10வது பதில் சூப்பர்+ நச் .

நீங்களும் கலக்கியிருக்கிங்க முகுந்தன்

முகுந்தன் said...

// தாரணி பிரியா said... //

hi me the first

ஆமாம் நீங்க தான் first..

//10வது பதில் சூப்பர்+ நச் .

நீங்களும் கலக்கியிருக்கிங்க முகுந்தன்//

thank you thank you

Divyapriya said...

short and sweet aa mudichiteengalaa? super :)

Karthik said...

//சாரி ரொம்ப லேட்டா எழுதறேன்...

No need to be Sry. I know you guys are busy. Keep yourself like that.

//இருந்தாலும்
எனக்காக எங்கப்பா டிவி வாங்கி அதுல படம் பார்த்தேன்.

Take that Keshav. Now waht you want from your Dad?

//நேரடி,மறைமுக,கள்ள மற்றும் எந்த தொடர்பும் கிடையாது :-)

No college mates in Kollywood?
:)

முகுந்தன் said...

//short and sweet aa mudichiteengalaa? super :)//

Thankyou Divyapriya.

முகுந்தன் said...

Karthik,

//Take that Keshav. Now waht you want from your Dad?//

only car,car,car....
இப்போ பொம்மை கார்,
அப்புறம் நிஜ கார் ....


//No college mates in Kollywood?
:)//

விஜய், சூர்யா ரெண்டு பேரும் லயோலா தான்...
ஆனா அவங்களுக்கு என்னை தெரியாது :(

Vijay said...

\\எங்க அப்பா பையன் வேற வீட்டுக்கு போகனுமானு யோசிச்சு
டிவி வாங்கிட்டாரு(அப்போ வசதி கம்மி) இருந்தாலும்
எனக்காக எங்கப்பா டிவி வாங்கி அதுல படம் பார்த்தேன். \\
இப்படிப்பட்ட அப்பாவுக்கு ஒரு கட்-அவுட் வைக்க வேணாமா?

\\ரொம்ப நாள் ஆச்சு.. ரொம்ப சுத்திட்டு இருக்கேன்.
கடைசியா அரங்கில் பார்த்த படம் சிவாஜி...
சும்மா அதிருதுல்ல...\\
அரங்குல போய் பார்க்கற மாதிரி படங்களும் ஒண்ணும் இல்லையே!!!
தில்லு ஜாஸ்தியா இருந்தா, ஏகன் பாருங்க. யாம் பெற்ற இன்பம் பெற வேண்டாமோ இவ்வையகம்!!!

\\தவமாய் தவமிருந்து,அஞ்சலி,குணா, நாயகன்,மௌன ராகம்,
கிழக்கு வாசல்,சம்சாரம் அது மின்சாரம்,
மூன்றாம் பிறை,தளபதி,வேதம் புதிது,முதல் மரியாதை,
ஆறிலிருந்து அறுபது வரை,தேவர் மகன்\\
அச்சச்சோ, தமிழ் சினிமாவால் ரொம்பவே அதிகமா தாக்கப்பட்டிருக்கீங்க!!

\\ரொம்ப முக்கியம்... எல்லாரும் வேலைய பாருங்கப்பா\\
This is hilarious :-)

\\தமிழர்கள் பாவம் , மெகா சீரியல் பார்த்து சாவார்கள்... \\
என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தான் இருப்போம்னு தமிழகத் தாய்க்குலங்கள் சொல்வது காதில் விழவில்லையா?

Raghav said...

//எனக்காக எங்கப்பா டிவி வாங்கி அதுல படம் பார்த்தேன். //

ம்.. கலக்கல்..

//அம்மா டின்னு கட்டிடுவாங்க (நான் சொன்னது எங்க அம்மாங்க :)). //

நிறைய டின்னு வாங்கி கட்டிருப்பீங்க போலிருக்கே.. :)

Raghav said...

//குசேலன்...
கேஷவ் கேட்டது... ரஜினி படம்னு எதுக்கு பொய் சொன்ன?//

தலைவருக்கு அனுப்புங்க.. என்ன சொல்றாருன்னு பாப்போம்..

//,தினமலர் படிப்பேன் //
நானும் அதே.. அதுலயும் நானு டவுட் தனபாலு ரசிகன்..

Raghav said...

//தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடி,மறைமுக,கள்ள மற்றும் எந்த தொடர்பும் கிடையாது :-)
//

நாம ஒவ்வொரு படம் பாக்குறதுக்கும் கொடுக்குற காசு சினிமா அல்லது சினிமா கலைஞர்கள் மேம்பட உதவுதே..

Raghav said...

// - இவரும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சிட்டாருங்கோ//

ம்.. சரிதான்.. முயற்சி பண்றேன்.. உங்க அளவுக்கு சுவாரசியமா எழுத முடியாட்டாலும் என் அளவுக்கு ஐ மீன் உண்மையான உலக நாயகன் ரேஞ்சுக்கு எழுத்வேன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.. :)

முகுந்தன் said...

//இப்படிப்பட்ட அப்பாவுக்கு ஒரு கட்-அவுட் வைக்க வேணாமா?//

கோவிலே கட்டனும்...

முகுந்தன் said...

//என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தான் இருப்போம்னு தமிழகத் தாய்க்குலங்கள் சொல்வது காதில் விழவில்லையா?//

அதனால் தான் இன்னும் பல மெகா சீரியல்கள் ஓடிட்டு இருக்கு....

முகுந்தன் said...

Raghav,

//நிறைய டின்னு வாங்கி கட்டிருப்பீங்க போலிருக்கே.. :)//

சீ சீ எங்க அம்மா ரொம்ப நல்லவங்க :))

//தலைவருக்கு அனுப்புங்க.. என்ன சொல்றாருன்னு பாப்போம்..
//

அட நீங்க வேற ... அவருக்கு ஐஸ்வர்யா ராய் கூட கடலை போட சாரி நடிக்கவே டைம் பத்தலையாம்


//உண்மையான உலக நாயகன் ரேஞ்சுக்கு எழுத்வேன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.. :)
//

அதானே பார்த்தேன் ..

Divya said...

\\
2) ராகவ் - இவரும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சிட்டாருங்கோ\\

Raghav ப்ளாக் எழுத ஆரம்பிச்சிருக்கார்னு உங்க பதிவு பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி!!

Divya said...

\\நான் யாரை அழைப்பது?

1) விஜய் - கலக்குவார் \\என்ன கலக்குவார் விஜய்??

சாம்பாரா?
ரசமா???

[just kidding Vijay!!]

முகுந்தன் said...

//என்ன கலக்குவார் விஜய்??
சாம்பாரா?
ரசமா???
//

அதை அவர் மனைவியிடம் தான் கேட்கணும்...


என்ன அம்மணி வேலை ரொம்ப ஜாஸ்தியா?