Wednesday, November 19, 2008

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

போன பதிவில் நான்காம் கேள்வி தான் இந்த பதிவின் தலைப்பு...

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

தமிழ் சினிமா நம்மை நேரடியாக தாக்குதோ இல்லையோ,
அதை பார்த்து நாம் நடந்து கொள்ளும் விதத்தால் ,
நம்மால் பாதிக்கபடும் யார் வேண்டுமானால்
நம்மை தாக்கலாம்... ஆகவே உஷார்....

போனவாரம் ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்....அங்கே
விநாயகர் சன்னதிக்கு அருகில் போகும் போது ஒரு குரல் ....

ஹலோ யார் பேசறது? திரும்பி பார்த்தால் ஒரு பக்தர்
போனில் இந்த கேள்வியை கேட்டார்... நாம தான்
எப்பவும் சினிமாவால் பாதிக்க பட்டிருக்கோமே, உடனே
நீதாண்டா பேசறது என்று சட்டென்று சொல்லிவிட்டேன் :)
சொன்னதும் தான் உணர்ந்தேன்,நான் இருப்பது
ஒரு பொது இடத்தில்,நான் பதில் சொன்னது
என் நண்பனுக்கு இல்லை,எனக்கு தெரியாத ஒருவருக்கு....

நல்ல வேளை நான் சொன்னது அவர் காதில் விழவில்லை,
ஆனால் சொல்லிவிட்டு திரும்பினால் என் அருகில் இருந்த
வேறு ஒருவர் என்னை பார்த்து முறைத்துவிட்டு,
போனில் பேசியவர் அருகில் சென்று ஏதோ சொன்னார்.

நான் இன்னிக்கு ரத்தகளரி தான் என்று வடிவேலு ஸ்டைல்லில்
(திரும்ப பாதிப்பு)நினைக்க அவர்கள் இருவரும் வேறு ஏதோ
பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்...
நான் விட்டால் போதும் என்று எஸ்கேப்...

நீங்க யாராவது இப்படி மாட்டி மாட்டி இருக்கீங்களா?

Saturday, November 1, 2008

சினிமா...

என்னை மாட்டிவிட்டது கார்த்திக்....
சாரி ரொம்ப லேட்டா எழுதறேன்...

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட
முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து சினிமா தான்,
எங்க அம்மாவும் அது தான் பார்ப்பாங்க...அப்படின்னு சொன்னா
அம்மா டின்னு கட்டிடுவாங்க (நான் சொன்னது எங்க அம்மாங்க :)).

1982 னு நினைக்கறேன்... நாங்க இருந்த ப்ளாட்ல மாடிவீட்டுல
டீவீல தூர்தர்ஷன்ல படம் பாத்திருக்கிறேன்.. அதை பார்த்த
எங்க அப்பா பையன் வேற வீட்டுக்கு போகனுமானு யோசிச்சு
டிவி வாங்கிட்டாரு(அப்போ வசதி கம்மி) இருந்தாலும்
எனக்காக எங்கப்பா டிவி வாங்கி அதுல படம் பார்த்தேன்.
படம் ஞாபகம் இல்லை.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த
தமிழ் சினிமா?ரொம்ப நாள் ஆச்சு.. ரொம்ப சுத்திட்டு இருக்கேன்.
கடைசியா அரங்கில் பார்த்த படம் சிவாஜி...
சும்மா அதிருதுல்ல....

3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ்
சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


குசேலன்...
கேஷவ் கேட்டது... ரஜினி படம்னு எதுக்கு பொய் சொன்ன?

நான் நினைத்தது...
வாசுவிடம் கேட்கவேண்டியது... இதெல்லாம் ஒரு படமா?

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தவமாய் தவமிருந்து,அஞ்சலி,குணா, நாயகன்,மௌன ராகம்,
கிழக்கு வாசல்,சம்சாரம் அது மின்சாரம்,
மூன்றாம் பிறை,தளபதி,வேதம் புதிது,முதல் மரியாதை,
ஆறிலிருந்து அறுபது வரை,தேவர் மகன்

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-
அரசியல் சம்பவம்?


பாஷா... தலைவா கோட்டை விட்டுட்டீங்க ...
மக்களே தப்பிச்சிட்டீங்க


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-
தொழில்நுட்ப சம்பவம்?


தசாவதாரம்,சிவாஜி,ஜீன்ஸ்

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்படி கேட்டால் என்ன செய்யறது... டெய்லி ஒரு தபா yahoo தமிழ்,
sify,தினமலர் படிப்பேன், வாரம் ஒருமுறை வாரமலர்,
குமுதம் படிப்பேன் கடந்த இருபது நாட்களாக ரொம்ப பிஸி:(

7)தமிழ்ச்சினிமா இசை?

எம்.எஸ்.வி, இளையராஜா ...
P.B.S, எஸ்.பி.பி, யேசுதாஸ்


8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி
சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?எப்போதாவது...
Taare zameen par


9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


நேரடி,மறைமுக,கள்ள மற்றும் எந்த தொடர்பும் கிடையாது :-)


10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?


ரொம்ப முக்கியம்... எல்லாரும் வேலைய பாருங்கப்பா
படிச்சு முன்னேறி ,குடும்பத்த காப்பாத்துங்க,
சினிமாகாரர்களுக்கு அது தொழில், பிழைப்பு ஓடும்,
நமக்கு அது பொழுதுபோக்கு ரொம்ப பார்த்தால்
பிழைப்பு கெடும்..

11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது,
மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள்
எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட
ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?
உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்


தமிழர்கள் பாவம் , மெகா சீரியல் பார்த்து சாவார்கள்...


நான் யாரை அழைப்பது?

1) விஜய் - கலக்குவார்

2) ராகவ் - இவரும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சிட்டாருங்கோ