Sunday, October 5, 2008

திருடன்

அது பெரிய பங்களா.அங்கிருந்தவர்கள் ரொம்ப வசதியானவர்கள்.
ஒரு இரவு ராஜேஷ் எப்படியோ உள்ளே புகுந்து விட்டான்.
ராஜேஷ் அங்கே முன்னாள் சமையல்காரன். ஜன்னல் வழியாக
குதித்து உள்ளே போனான். அப்போது கட்டிலில் படுத்திருந்த
கிருஷ்ணா அவனை பார்த்து விட்டான்.ஆனால் சத்தம் போடாமல்
அமைதியாக இருந்தான்.

ராஜேஷ் மெல்ல அந்த பெட்ரூமை விட்டு நகர்ந்து அடுத்த
அறைக்கு சென்றான்,அங்கிருந்த பீரோவில் இருந்த ஐம்பதாயிரம்
பணத்தை எடுத்தான்,பின்னர் மாடிப்படி வழியாக சமையல் அறைக்கு
இறங்கி வந்தான். அங்கிருந்த அலமாரியில் அவன் ஒரு வாரத்திற்கு
முன் திருடிய செயினை வைத்த இடத்தில் இருந்து எடுத்துகொண்டான்.
வாசலில் நாய் இருந்ததால் திரும்ப மேலே சென்று வந்த வழியே
போய்விடலாம் என்று மாடி ஏறினான்.

அங்கே..கிருஷ்ணா ராஜேஷை பார்த்து கொண்டிருந்தான்.
இதை பார்த்த ராஜேஷுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவசரமாக ஓடி ஜன்னல் வழியாக குதித்துவிடலாம் என்று ஓட,
கிருஷ்ணா போட்ட சத்தத்தில் அவன் அருகே படுத்திருந்த மதனும்,
சௌம்யாவும் எழுந்து விட்டனர்...

அடுத்த நாள் காலையில், போலீஸ் ஸ்டேஷனில் மதன் இன்ஸ்பெக்டரிடம்
நன்றி சொல்ல, உங்கள் மகன் கிருஷ்ணாவிற்கு நன்றி சொல்லுங்க அவன்
கத்தவில்லை என்றால் நீங்கள் ராஜேஷை பிடித்திருக்க முடியாது என்றார்.
மதன் கிருஷ்ணாவை பார்க்க, வாயில் விரல் போட்டுகொண்டு மதனை பார்த்துகொண்டிருந்தான் ஒரு வயது கிருஷ்ணா.

24 comments:

Divyapriya said...

me the first :))

Divyapriya said...

முதல்ல அவன் ஏன் காதல? அப்புறம் கடசில எதுக்கு கத்தினான்? ஒண்ணுமே புரியல :((

முகுந்தன் said...

//முதல்ல அவன் ஏன் காதல? அப்புறம் கடசில எதுக்கு கத்தினான்? ஒண்ணுமே புரியல :((//

அதுதான் குழந்தை :))

Vijay said...

தலை ஒரு பக்கக் கதையெல்லாம் போட்டு பின்னி பெடலெடுக்கறீங்க?

முகுந்தன் said...

விஜய்,

ஏதோ one line ஐடியாவை கொஞ்சம் develop பண்ணேன். இதுக்கு மேல பெரிய கதை
தோன்றவே இல்லை :))

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

சூப்பரான டுவிஸ்ட். :)

நான் கிருஷ்ணாவும் திருடனோன்னு நினைச்சேன்.

நீங்க குமுதத்துக்கு இதை அனுப்புங்க முகுந்தன்.

Anonymous said...

கதாசிரியரா மாறிட்டீங்க.
நல்லாயிருக்கு கதை.

இந்தியாவிலிருந்து கிளம்பியாச்சு.
ஒரு மாசம் ஒரு நாள் மாதிரி ஓடிப்போயிருச்சி அதான் கவலையாக இருக்கின்றது.

Raghav said...

ம் கலக்குங்க முகுந்தன், சிறுகதை நல்லாருக்கு... ரொம்ப நாளா காணோமே.. சென்னைல தான் இருக்கீங்களா? இல்லை பறந்துட்டீங்களா?? நேத்து உங்க ஊருக்கு வந்துருந்தேன்..

முகுந்தன் said...

தாரணி பிரியா ,
//நீங்க குமுதத்துக்கு இதை அனுப்புங்க முகுந்தன்.//

இன்னும் நல்லா எழுத ஆரம்பித்ததும் அனுப்பறேன்.

முகுந்தன் said...

//கதாசிரியரா மாறிட்டீங்க.
நல்லாயிருக்கு கதை.

//

நன்றி குந்தவை...

//இந்தியாவிலிருந்து கிளம்பியாச்சு.
ஒரு மாசம் ஒரு நாள் மாதிரி ஓடிப்போயிருச்சி அதான் கவலையாக இருக்கின்றது.//


எப்பவும் நம்ம ஊர்ல நாள் பறக்குது,வெளி ஊர்ல நகருவது கூட கிடையாது :((

முகுந்தன் said...

//ம் கலக்குங்க முகுந்தன், சிறுகதை நல்லாருக்கு... ரொம்ப நாளா காணோமே.. சென்னைல தான் இருக்கீங்களா? இல்லை பறந்துட்டீங்களா?? நேத்து உங்க ஊருக்கு வந்துருந்தேன்..

//


வாங்க ராகவ்,

போன வாரம் வந்தீங்களா? நான் போன வாரம் சிங்கபூர் வந்துவிட்டேன் :((

முகுந்தன் said...

ராகவ்,

ஸ்ரீரங்கம் போயிருந்தீங்களா? நான் போகனும்னு நினைத்தேன் , அதுக்குள்ள இங்க வந்துட்டேன் :((

Raghav said...

// முகுந்தன் said...
ராகவ்,

ஸ்ரீரங்கம் போயிருந்தீங்களா? நான் போகனும்னு நினைத்தேன் , அதுக்குள்ள இங்க வந்துட்டேன் :((
//

ஸ்ரீரங்கம் ரெண்டு வாரம் முன்னால் போயிருந்தேன் முகுந்தன்.. பவித்ரோத்ஸவம், திவ்யமான தரிசனம்.. இப்பல்லாம் எந்த கெடுபிடியும் இல்ல, அதனால் அமைதியாக அரங்கனை தரிசித்தேன்..

சிங்கப்பூர் எத்தன நாள் முகுந்தன்.

முகுந்தன் said...

//ஸ்ரீரங்கம் ரெண்டு வாரம் முன்னால் போயிருந்தேன் முகுந்தன்.. பவித்ரோத்ஸவம், திவ்யமான தரிசனம்.. இப்பல்லாம் எந்த கெடுபிடியும் இல்ல, அதனால் அமைதியாக அரங்கனை தரிசித்தேன்..//

ரொம்ப நல்ல விஷயம் ராகவ்....

இங்க இருக்கும் ஸ்ரீனிவாசர் கோவில்ல புரட்டாசி மாத பூஜைகள் நல்லா இருக்கு...


//சிங்கப்பூர் எத்தன நாள் முகுந்தன்//

தீபாவளிக்கு சென்னை வந்துவிடுவேன் :))

Shwetha Robert said...

Wow!!!
Amazing story with a super good twist:))
Terrific work you have done Mukunthan.....keep up your writing skill!!

முகுந்தன் said...

Thanks Shwetha

anujanya said...

முகுந்த்,

என்னப்பா ஆளையே காணோம்! சிங்கப்பூர் போயாச்சா? Is it stop gap or permanent? கதை நல்லா இருக்கு. ஆமாம், இன்னும் கொஞ்சம் பாலிஷ் பண்ணி குமுதத்துக்கு அனுப்பலாம். கேஷவ் எப்படி இருக்கிறார்?

அனுஜன்யா

Sat said...

Oops...guess panna try panra pervazhinu krishna veetu naaya irukumonu nenachen....indha vikatan style oru pakka kathai ellame oru twist koduthu emathidunga :)

முகுந்தன் said...

Sat,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முகுந்தன் said...

அனுஜன்யா,
//ஆமாம், இன்னும் கொஞ்சம் பாலிஷ் பண்ணி குமுதத்துக்கு அனுப்பலாம். கேஷவ் எப்படி இருக்கிறார்?
//நன்றி ... கொஞ்சம் பிஸி அதான் அங்க வரவில்லை.. கேஷவ் சென்னையில் நன்றாக இருக்கிறான். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு சிங்கப்பூர் தான்....

Karthik said...

நீங்கள் பிஸி என்று தெரியும். இருந்தாலும் சினிமா தொடர் பதிவில் மாட்டி விட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது போடவும்.

:)

Raghav said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் முகுந்தன்.. நல்லபடியா சென்னை திரும்பி வந்து, அண்ணி, கேஷவனுடன் நல்லவிதமா கொண்டாடுங்க.. அண்ணிக்கும், கேஷவனுக்கும் என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

இன்னொரு சந்தோஷமான விஷயம், தீபாவளியை முன்னிட்டு நானும் பிளாக் எழுத ஆரம்பிச்சுட்டேன். முடிஞ்சா பாருங்க.. :)

Divya said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் முகுந்தன்!