Tuesday, September 16, 2008

திண்ணை.....

விஜய் திண்ணை பற்றி எழுத சொல்லி இருந்தார்.

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால திண்ணை
வீட்டில் இருந்த அனுபவம் இல்லை. ஆனால் மாம்பலத்தில்
எங்க பாட்டி வீட்டுல திண்ணை மாதிரி ஒரு அமைப்பு இருந்தது.
அதுல உட்கார்ந்து நான்,என் தங்கை,பெரியப்பா பசங்க எல்லாரும்,
எங்க பாட்டி சாதம் கையில் உருட்டி போட அதை வாங்கி
சாப்பிடுவோம்,மாம்பழ சீசன் வந்தால் அதுல தான் உக்காந்து
மாம்பழம் சாப்பிடுவோம்.அதெல்லாம் ஒரு சுகம்...

இன்னிக்கு நான் ஆபீஸ் கிளம்பும் போது தான் கவனிச்சேன்,
நாங்க இருக்கும் அபார்ட்மென்டில் திண்ணை இருக்கு.
அதில் தான் கேஷவ் ஸ்கூல் போறதுக்கு முன்னாடி
அவன் அம்மாவுடன் உக்காந்திருப்பான்..

அதனால ஒரு ஐடியா.அவன் கொஞ்சம் பெரியவனா
ஆன உடனே அவனையே திண்ணை அனுபவம்
எழுத சொல்லிடறேன் :-)

வர்ட்டா ....

25 comments:

Raghav said...

//அதனால ஒரு ஐடியா.அவன் கொஞ்சம் பெரியவனா
ஆன உடனே அவனையே திண்ணை அனுபவம்
எழுத சொல்லிடறேன் :-)
//

சென்னை தமிழன எழுதச் சொன்னா சின்னத் தமிழன விட்டு எழுதச் சொல்றீக.. இது பதிவுலக சட்டப்படி கண்டிக்கப்பட வேண்டியது.

Raghav said...

//இன்னிக்கு நான் ஆபீஸ் கிளம்பும் போது தான் கவனிச்சேன்,
நாங்க இருக்கும் அபார்ட்மென்டில் திண்ணை இருக்கு.//

இத்தனை நாள் திண்ணை இருக்குறத கவனிக்கவே இல்ல.. வேற என்னத்த கவனிச்சீங்கன்னு அப்புடின்னு உங்க வீட்டுக்காரம்மா கேட்டா என்ன பதில் சொல்வீங்க முகுந்தன்..

Raghav said...

//திண்ணை மாதிரி ஒரு அமைப்பு//

அதுக்கு ஒரு பேர் கூடவா கிடையாது ???

Divyapriya said...

செம நல்லா ஐடியாவ போட்டுடீங்க ;-)

//Raghav said...
சென்னை தமிழன எழுதச் சொன்னா சின்னத் தமிழன விட்டா எழுதச் சொல்றீக.. இது பதிவுலக சட்டப்படி கண்டிக்கப்பட வேண்டியது..//

ஹா ஹா ஹா :-D ரிப்பீட்டேய் ;-)

Divyapriya said...

//Raghav said...
இத்தனை நாள் திண்ணை இருக்குறத கவனிக்கவே இல்ல.. வேற என்னத்த கவனிச்சீங்கன்னு அப்புடின்னு உங்க வீட்டுக்காரம்மா கேட்டா என்ன பதில் சொல்வீங்க முகுந்தன்..//

அதானே?

முகுந்தன் said...

//சென்னை தமிழன எழுதச் சொன்னா சின்னத் தமிழன விட்டு எழுதச் சொல்றீக.. //

அட நெஜமாவே அவன் என்னை விட நல்லா யோசிக்கறான், அதான்...

முகுந்தன் said...

//இத்தனை நாள் திண்ணை இருக்குறத கவனிக்கவே இல்ல.. வேற என்னத்த கவனிச்சீங்கன்னு அப்புடின்னு உங்க வீட்டுக்காரம்மா கேட்டா என்ன பதில் சொல்வீங்க முகுந்தன்..//

எங்க வீட்டு பக்கத்து பில்டிங் ஒரு ஸ்கூல், நான் கிளம்பும்போது அங்க வர சத்த சமாளிக்க ஜூட் விட்டுடுவேன்...

என்ன சிக்க வெக்கலாம்னா பாக்கறீங்க ? பிச்சு புடுவேன் பிச்சி :-)

முகுந்தன் said...

//அதுக்கு ஒரு பேர் கூடவா கிடையாது ???//

திண்ணைனே வெச்சிப்போம் ...

முகுந்தன் said...

//இது பதிவுலக சட்டப்படி கண்டிக்கப்பட வேண்டியது.
//
//ஹா ஹா ஹா :-D ரிப்பீட்டேய் ;-)//

சின்னவருக்கு தெரிஞ்சா கோச்சிப்பார்

Divya said...

\\அதனால ஒரு ஐடியா.அவன் கொஞ்சம் பெரியவனா
ஆன உடனே அவனையே திண்ணை அனுபவம்
எழுத சொல்லிடறேன் :-) \\


:)))

'கொஞ்சம்' பெரிய கேஷவன் திண்ணை பதிவு எழுதனும்னா.......இன்னும் எத்தனை வருஷம் நாங்க வெயிட் பண்ணனும் சார்???

முகுந்தன் said...

திவ்யா,
ரொம்ப நாள் இல்லை...
இன்னும் ஒன்னு ரெண்டு மாசம். அப்புறம் அவன் சொல்ல ,
அதை நான் இப்படிக்கு கேஷவ் சொல்படி முகுந்தன் அப்படீன்னு எழுதிடறேன்.

Ramya Ramani said...

ஹா ஹா ஹா :)

\\திவ்யா,
ரொம்ப நாள் இல்லை...
இன்னும் ஒன்னு ரெண்டு மாசம். அப்புறம் அவன் சொல்ல ,
அதை நான் இப்படிக்கு கேஷவ் சொல்படி முகுந்தன் அப்படீன்னு எழுதிடறேன்.
\\

ஏதேது பா பா ப்ளாக் ஷீப் தமிழாக்கம் எல்லாம் போடாதீங்க :P

Vijay said...

என்னது சென்னை வீட்டுல திண்ணையா. அதையும் நீங்க கவனிக்கலையா?

சரி சங்கிலியைத் தொடர்வதற்கு உங்கள் மகனையே அழைத்திருப்பது கொஞ்சம் ஓவர்

anujanya said...

திண்ணை பற்றிக் கேட்டால்
சென்னையிலே சின்ன திண்ணை;
சின்னப் பையனைக் கேள் என்னும்
உன்னை என்ன செய்ய?

ஷப்பா, இந்த வாரக் கவிதை (!?*&^%) எழுதியாச்சு. நோ பின்னூட்டம்ஸ் ப்ளீஸ்.

அனுஜன்யா

முகுந்தன் said...

Ramya,

//ஏதேது பா பா ப்ளாக் ஷீப் தமிழாக்கம் எல்லாம் போடாதீங்க :P
//

இது நல்ல ஐடியாவா இருக்கே ..

முகுந்தன் said...

Sorry Vijay,

எனக்கு திண்ணை அனுபவம் இல்லை. சும்மா கேஷவ் பேர சொல்லி எஸ்கேப் ஆக பாத்தேன்.

இதை தொடர அனுஜன்யாவை அழைக்கிறேன்...

முகுந்தன் said...

அனுஜன்யா,

//
ஷப்பா, இந்த வாரக் கவிதை (!?*&^%) எழுதியாச்சு. நோ பின்னூட்டம்ஸ் ப்ளீஸ். //

மேல இருக்கற பின்னூட்டத்தை பார்க்கவும். திண்ணை தொடரவும்...

Unknown said...

நல்லா இருக்கு அண்ணா நீங்க பண்றது.. இப்போவே கேஷவ மாட்டி விடறீங்களா..?? கேஷவ் அப்பாவ கடிடா அத்தை நானிருக்கேன்..!! :P

Unknown said...

//அனுஜன்யா said...
திண்ணை பற்றிக் கேட்டால்
சென்னையிலே சின்ன திண்ணை;
சின்னப் பையனைக் கேள் என்னும்
உன்னை என்ன செய்ய?

ஷப்பா, இந்த வாரக் கவிதை (!?*&^%) எழுதியாச்சு. நோ பின்னூட்டம்ஸ் ப்ளீஸ். //

இலக்கிய குடும்பத்துல இருந்து வந்தத நிரூபிச்ச அனுஜன்யா அண்ணா வாழ்க.......!! :)) பின்னுட்டம் வேண்டாம்ன்னு பெருந்தன்மையா சொன்ன அனுஜன்யா அண்ணா வாழ்க..!! :))
இந்தக் கவிதைக்கெல்லாம் முனைவர் பட்டம் கிடைக்காதா?? :((

முகுந்தன் said...

//கேஷவ் அப்பாவ கடிடா அத்தை நானிருக்கேன்..!! :P
//

:))

Shwetha Robert said...

Keshav mativitu neenga escape-aa??


--------------
ரொம்ப நாள் இல்லை...
இன்னும் ஒன்னு ரெண்டு மாசம். அப்புறம் அவன் சொல்ல ,
அதை நான் இப்படிக்கு கேஷவ் சொல்படி முகுந்தன் அப்படீன்னு எழுதிடறேன்.
---------------

will wait for Keshav to rock in ur blog:)))

முகுந்தன் said...

Shwetha,

கேஷவ மாட்டி விட்டுட்டா? உங்கள எல்லாம் அவன் கிட்ட மாட்டி விட்டுட்டேன் ?

//will wait for Keshav to rock in ur blog:)))//

எவ்வளவு நாள் எங்களை பிரிச்சு மேய்வான் ? கொஞ்ச நாளில் இந்த ப்ளாக்ஐயும் பிரிச்சு மேயட்டும் :))

Karthik said...

//அவனையே திண்ணை அனுபவம்
எழுத சொல்லிடறேன்

முகுந்தன்,

அப்பா சொல்றத கேட்கிற பையனா இருப்பான் போல இருக்கே!

என்ன கொடுமை கேஷவ் இது?
:)

முகுந்தன் said...

//என்ன கொடுமை கேஷவ் இது?
:)//

வாய்யா நல்லவனே :))

தாரணி பிரியா said...

அந்த திண்னையிலிருந்து கேஷவ் என்ன செய்யறார் அப்படின்னு எழுதிட வேண்டியதுதானே.