Saturday, September 13, 2008

அவரு ரொம்ப நல்லவரு...

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்.....
நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன்... இது என்ன பெரிய
விஷயமான்னு கேக்கப்டாது.. மேல,சாரி கீழ படிக்கோணும்..

காலேஜ் கல்சுரல்ஸ் ஸ்பான்சர்ஷிப்காக ஏதோ எங்களால
(மூதேவிங்க மாதிரி மூதேவர்கள் என்னையும் சேர்த்து...)
முடிஞ்சத பண்ணலாம்னு ரெண்டு மூணு எடத்துல
ட்ரை பண்ணோம்.ஆனா ஒரு பய சிக்கலையே!!! கஷ்டப்பட்டு
ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில் பேசி 500 ரூபா தேத்திட்டோம்.
அதுக்காக அவங்க பான்னர் கல்லூரில வெக்கனும்னு சொன்னாங்க.
சரின்னு சொல்லி வாங்கிட்டோம். அதுக்கு அப்புறம்
அந்த அம்மா சொன்னத கேளுங்க...
எங்க பேர் எல்லாம் கேட்டுவிட்டு, இத ஒழுங்கா வெக்கணும்,
நான் வந்து பார்ப்பேன். ஒழுங்கா இத display பண்ணல,
நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.உங்க பேர்
எல்லாம் மறக்க மாட்டேன், அதுலயும் முகுந்தன்கிறது
என்னோட Husband பேரு அப்படின்னு சொல்லிட்டாங்க.
உடனே வெளில வந்ததும் பசங்க இந்த காசுல ஏதாவது
வாங்கி சாப்டா,முகுந்தன்க்கு ஆப்பு அப்படின்னு கலாய்க்க
ஆரம்பிச்சிட்டாங்க.அத ஒரு வழியா சமாளிச்சு(வேற வழி?)
நாங்க மூணு பேரும் கிளம்பிட்டோம்ல...

பஜாஜ் M-80யில் triples வந்தோம். அப்போ எதிராஜ் காலேஜ்
வாசல்ல ஒரு போலிஸ் மாமா புடிச்சிட்டாரு.triples வந்ததுக்கு
பைன் Rs200 கட்டுனு சொல்ல,எங்களுக்கு அள்ளு கழண்டுடுச்சு.
அந்த மூணு பேர்ல ஒருத்தன்,இது தான் முதல் தடவை
நாங்க ரொம்ப நல்லவங்க சார்னு சொன்னான்,

அதோட விட்டிருந்தா பரவா இல்லையே,கூடவே
என் பேர் பிரவீன்குமார்.We are from Loyola college,
please see my ID அப்படின்னு ஒரு படம் போட்டான்.

அதுக்கு அந்த போலிஸ் மாமா,I am Sadhasivam,
Circle inspector,do you want to see my ID?
அப்படின்னு கேட்டாரு. நாங்க உடனே,எங்க கிட்ட
அவ்வளோ காசில்ல சார்னு பம்மினதும்,
அம்பது ரூபா குடுத்துட்டு ஓடு அப்படின்னு சொன்னாரு.

அதுக்கப்புறம் அவரு ஒரு விஷயம் சொன்னாரு பாருங்க...
இப்போ மூணு பெரும் போங்க போற வழில யாரவது புடிச்சா,
circle inspector பாத்துட்டு வரோம்னு சொல்லுங்க விட்டுடுவாங்க
அப்படின்னு சொன்னாரு.நாங்க எஸ்கேப் ...

நீங்களே சொல்லுங்க அவரு ரொம்ப நல்லவரு தானே...

30 comments:

முகுந்தன் said...

Raghav,
கொசுவத்தி போட்டுட்டேன்...

Shwetha Robert said...

flash back nalaruku:))

Karthik said...

நாங்களும் ஒருமுறை 'மாமா'கிட்ட மாட்டினோம். அதுல எப்படி தப்பிச்சோம்கிறத சீக்கிரமே எழுதுறேன்.
:)

Karthik said...

//We are from Loyola college,
please see my ID

Ha..ha
Loyola Rocks!!!
:)

Karthik said...

//பஜாஜ் M-80யில் triples வந்தோம். அப்போ எதிராஜ் காலேஜ்
வாசல்ல ஒரு போலிஸ் மாமா புடிச்சிட்டாரு

எங்க போனாலும் எத்திராஜ் வழியாதான் போவோம், வருவோம் இல்ல...?
:)

Karthik said...

//ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில் பேசி 500 ரூபா தேத்திட்டோம்.

500?

சரி, சரி, 12 வருஷத்துக்கு முன்னால...

Karthik said...

கல்ச்சுரல்ஸ்ல என்ன நடந்ததுன்னு சீக்கிரம் எழுதுங்க. சரியா?

Karthik said...

//நீங்களே சொல்லுங்க அவரு ரொம்ப நல்லவரு தானே...

மாமாவும் Loyolaவில் படிச்சிருப்பாரோ..?

முகுந்தன் said...

//flash back nalaruku:))//

Thanks Shwetha.

முகுந்தன் said...

//நாங்களும் ஒருமுறை 'மாமா'கிட்ட மாட்டினோம். அதுல எப்படி தப்பிச்சோம்கிறத சீக்கிரமே எழுதுறேன்.
:)//

எழுதுங்க, வெயிட் பண்றேன்...

முகுந்தன் said...

//Ha..ha
Loyola Rocks!!!
:)//

Yes, it always rocks!!

முகுந்தன் said...

//எங்க போனாலும் எத்திராஜ் வழியாதான் போவோம், வருவோம் இல்ல...?
:)//

அப்படி இல்ல கார்த்திக், அந்த டிராவல்ஸ் இருந்தது எதிராஜ் காலஜ் எதிரில்...
நானும் ரொம்ப நல்லவன் :-)

முகுந்தன் said...

//கல்ச்சுரல்ஸ்ல என்ன நடந்ததுன்னு சீக்கிரம் எழுதுங்க. சரியா?//

எழுதிடலாம்...

முகுந்தன் said...

////ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில் பேசி 500 ரூபா தேத்திட்டோம்.

500?

சரி, சரி, 12 வருஷத்துக்கு முன்னால...//

Yes, It was a big amount 12 years back.

முகுந்தன் said...

//மாமாவும் Loyolaவில் படிச்சிருப்பாரோ..?//
அட ஆமாம் , எங்களுக்கு அப்போ கேக்க தோணலை

Raghav said...

கொசுவர்த்தி போட்டதுக்கு டாங்கீஸ் முகுந்தன். மாமாகிட்ட மாட்டாத மக்களே இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆனாலும் சில திறமைசாலிகள் (எ.கா: ராம்நாட் ராகவன்) தப்பிச்சுருவாங்க..

முகுந்தன் said...

//ஆனாலும் சில திறமைசாலிகள் (எ.கா: ராம்நாட் ராகவன்) தப்பிச்சுருவாங்க..//

ஜூபர் ராகவன் ...

Divya said...

அட கொசுவர்த்தி போஸ்டா??
நல்லாயிருக்கு முகுந்தன் உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்து:)))


\(மூதேவிங்க மாதிரி மூதேவர்கள் என்னையும் சேர்த்து...) \\

:))))

Divya said...

லயலோ காலேஷ் ப்ரோடக்ட் நீங்க......ஸோ கண்டிப்பா நிறைய இண்ட்ரெஸ்டிங் காலேஜ் அனுபவங்கள் இருக்குமே!!
ஒவ்வொன்னா கொசுவர்த்தி சுத்திடுங்க முகுந்தன்......:))))

முகுந்தன் said...

ரொம்ப நன்றி திவ்யா...
இது என்னால் மறக்கவே முடியாத நிகழ்ச்சி..இப்பவும் நாங்கள் சந்தித்துகொண்டால் இதை பற்றி பேசிவிட்டு தான் வேற வேலை. பள்ளி கல்லூரி நண்பர்களை சந்திப்பதில் இருக்கும் சுகம் தனி.

முகுந்தன் said...

//லயலோ காலேஷ் ப்ரோடக்ட் நீங்க......ஸோ கண்டிப்பா நிறைய இண்ட்ரெஸ்டிங் காலேஜ் அனுபவங்கள் இருக்குமே!!
ஒவ்வொன்னா கொசுவர்த்தி சுத்திடுங்க முகுந்தன்......:))))//

கொஞ்சம் கொஞ்சமா சுத்தறேன்..

Vijay said...

தலை, மாமாகிட்ட மாட்டாத மாடசாமி யாராவது இருப்பாங்களா? மாமாகிட்ட ஊர்வாரிய மாட்டினதை வச்சு நான் ஒரு தொடர் கதையே எழுதலாம்!!
மீண்டும் கொசுவர்த்தி சுத்திட வேண்டியது தான்!!

Raghav said...

//விஜய் said...
தலை, மாமாகிட்ட மாட்டாத மாடசாமி யாராவது இருப்பாங்களா? //

ஏலே நா இருக்கன்லே..

Unknown said...

ஆமாம் அண்ணா அவரு ரொம்ம்ம்ப நல்லவரு...!! ;))

முகுந்தன் said...

Raghav,
//ஏலே நா இருக்கன்லே..//

உங்கள கண்டா மாமா ஒடுராராமில்ல?

முகுந்தன் said...

//ஆமாம் அண்ணா அவரு ரொம்ம்ம்ப நல்லவரு...!! ;))//

நன்றி ,இத தான் எதிர் பார்த்தேன் ஸ்ரீமதி(பெயரில் மட்டுமே) ஆகிய ஸ்ரீ அவர்களே :-)

Anonymous said...

//இப்போ மூணு பெரும் போங்க போற வழில யாரவது புடிச்சா,
circle inspector பாத்துட்டு வரோம்னு சொல்லுங்க விட்டுடுவாங்க
அப்படின்னு சொன்னாரு//

சூப்பர் :)

Anonymous said...

நானும் கொசுவர்த்தியை பார்த்தவுடன் என்னமோ நினைத்தேன்.
(என்ன செய்ய ஊருல கொசு எங்கள அந்த பாடுபடுத்தியிருச்சி)

flashback நல்லாயிருந்துச்சி.

முகுந்தன் said...

// சேவியர் said...
//இப்போ மூணு பெரும் போங்க போற வழில யாரவது புடிச்சா,
circle inspector பாத்துட்டு வரோம்னு சொல்லுங்க விட்டுடுவாங்க
அப்படின்னு சொன்னாரு//

சூப்பர் :)
//

Thank you

முகுந்தன் said...

//நானும் கொசுவர்த்தியை பார்த்தவுடன் என்னமோ நினைத்தேன்.
(என்ன செய்ய ஊருல கொசு எங்கள அந்த பாடுபடுத்தியிருச்சி)

flashback நல்லாயிருந்துச்சி.//

இந்தியாவில் இருந்து கிளம்பிட்டீங்களா ?