Monday, September 8, 2008

செல்போன்

என்னடா இவன் செல்போன் நன்மைகள்,தீமைகள் பற்றி
அறுக்க போரானானு யோசிக்காதீங்க.....மேலே படிங்க...

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்.....

எனக்கு செல் போன் பரிச்சயம் இல்லாத சமயம்,என்னுடன் வேலை
பார்த்த ஒரிசாவை சேர்ந்த நண்பன் ஒருவன் TATA Indicom mobile
வாங்கினான்.அதை எல்லோரிடமும் காட்டிகொண்டிருந்தான்.
அவன் முகத்தில் ஒரே பெருமை... எல்லோரும் அவனிடம்
ட்ரீட் கேட்க,குடுக்காமலே டபாய்த்து விட்டான்.சிறிது நேரத்திற்கு
பிறகு,சோகமாக உட்கார்ந்திருந்தான்.என்ன விஷயம் என்றால்,
செல் போன் வேலை செய்யவில்லை. நண்பர்கள் ஓரிருவர்
என்னவென்று பார்த்து கொண்டிருந்தனர்,யாருக்கும் ஒன்றும்
புரியவில்லை!!! எனக்கு எதுவும் தெரியாததால்,சும்மா இருப்பதே
அவனுக்கு செய்யும் உதவி என்று விட்டு விட்டேன்.
அப்பொழுது ஷிப்டில் வேலை பார்த்துகொண்டிருந்ததால்
ஆபீஸ் முடிந்து car drop உண்டு. காரில் போகும்போது
வேறு ஒரு நண்பரின் செல்லில் இருந்து TATA Indicom
ஆபீசுக்கு நண்பன் கால் செய்தான். அவர்களிடம் ஏதோ கேட்க,
அவர்கள் ஏதோ சொல்ல பையனுக்கு செம காண்டு.
இது தான் அவர்களிடம் அவன் சொன்னது,
"You dont know who I am , I will teach you a lesson.
If you dont replace my handset, I will sue you and make sure
that TATA Indicom closes the mobile division".
சொல்லிவிட்டு போன் கட் பண்ணிவிட்டான்.ஷோரூமை
நெருங்கிவிட்டோம்.ஆவேசமாக உள்ளே போய் அவர்களிடம் ஹிந்தியிலும்,ஆங்கிலத்திலும் சண்டை போட்டான்.
கடையில் இருந்தவர் அந்த போனை வாங்கி பார்த்து,
ஏதோ செய்தார்.போன் வேலை செய்ய ஆரம்பித்தது....
என்னவென்று நாங்கள் விழிக்க, கடைக்காரர் சொன்னது ......

"To use the mobile, you have to switch it on first"
நண்பன் முகம் போன போக்கை நான் சொல்லவேண்டுமா????

36 comments:

Vijay said...

அந்த "நண்பன்"ங்கறது நீங்க தானே. சும்மா எனக்கு மட்டும் சொல்லுங்க. யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். :)

Raghav said...

சூப்பர் முகுந்தன்.. எனக்கு கொஞ்சம் வித்யாசமான அனுபவம்.. என்னோட கஸின் மொபைல் போன் வச்சுருந்தார். அப்போ எனக்கு மொபைல் போன் பத்தி அவ்வளவா தெரியாது. ஒரு நாள் போன் வந்தப்போ நான் எடுத்து அவர்கிட்ட குடுக்கலாம்னு எடுத்தேன், போனைத் தொட்டவுடனே shock அடிச்சுதுன்னு கீழ போட்டுட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது vibration effect அப்புடின்னு.

Raghav said...

//சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்.....
//

இந்த இடத்துல ஒரு கொசுவர்த்தி சுருள் போட்டோ இருந்ததுன்னா பொருத்தமா இருக்கும்.

Raghav said...

//சும்மா இருப்பதே
அவனுக்கு செய்யும் உதவி என்று விட்டு விட்டேன்.//

சூப்பர்.. அடியேனுக்கும் அதே கொள்கை தான்.

Raghav said...

// செம காண்டு//

அட அட.. எத்தனை நாள் ஆச்சு இந்த அழகான தமிழ் வார்த்தையக் கேட்டு.. :)

Raghav said...

முகுந்தன்.. இந்தியா வந்தாச்சு.. அடுத்து ஒரு வருஷம் எங்கயும் போறதா இல்லை. நீங்க எப்புடி. முடிஞ்சா பெங்களூர் வாங்களேன். இந்த வாரம் ரங்கநாதரை போய் ஸேவிச்சுட்டு வந்துரலாம்னு இருக்கேன்.

Unknown said...

அண்ணா நல்லா சிரிச்சேன்..!! :)) இப்பெல்லாம் ஸ்கூல் பசங்க கைல செல் இருக்கு..!! :))

முகுந்தன் said...

விஜய்,
நான் அவன் இல்லை....
எனக்கு போன்ல திட்டிட்டு போற அளவுக்கு பொறுமை அப்போ இல்லை.

முகுந்தன் said...

/அப்புறம் தான் தெரிஞ்சது அது vibration effect அப்புடின்னு.
//

சான்சே இல்லை

முகுந்தன் said...

//இந்த இடத்துல ஒரு கொசுவர்த்தி சுருள் போட்டோ இருந்ததுன்னா பொருத்தமா இருக்கும்.//

will do next time.

Divyapriya said...

Haa haa haa, hilarious :-D

எங்க வீட்ல இருந்து இப்ப கூட, “charge போய் mobile switch off ஆய்டுச்சு…charge பண்ணாலும் மறுபடியும் ஆன் ஆக மாடேங்குது…” இப்படி ஒரு ஃபோன் வரும் ;-)

முகுந்தன் said...

//சூப்பர்.. அடியேனுக்கும் அதே கொள்கை தான்.
//

நல்ல கொள்கை....

Divyapriya said...

@raghav
// போனைத் தொட்டவுடனே shock அடிச்சுதுன்னு கீழ போட்டுட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது vibration effect அப்புடின்னு.//

haa haa haa :-D

முகுந்தன் said...

//அட அட.. எத்தனை நாள் ஆச்சு இந்த அழகான தமிழ் வார்த்தையக் கேட்டு.. :)//

சென்னைக்கு வாங்க கலப்படமில்லா சென்னை தமிழ் கேக்கலாம்...

Divyapriya said...

Raghav
\\//சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்.....
//

இந்த இடத்துல ஒரு கொசுவர்த்தி சுருள் போட்டோ இருந்ததுன்னா பொருத்தமா இருக்கும்.\\

இந்த கமெண்ட்டெ என் ப்ளாக்ல போட்டுட்டீங்களா??? ஹா ஹா ஹா :-D எனக்கு mail வந்துடுச்சு...என்னடா இதுன்னு பாத்தா அப்புறம் delete ஆய்டுச்சு...
இன்னும் jet lag போகல போல இருக்கு? ;-)

முகுந்தன் said...

//முகுந்தன்.. இந்தியா வந்தாச்சு.. அடுத்து ஒரு வருஷம் எங்கயும் போறதா இல்லை. நீங்க எப்புடி. முடிஞ்சா பெங்களூர் வாங்களேன். இந்த வாரம் ரங்கநாதரை போய் ஸேவிச்சுட்டு வந்துரலாம்னு இருக்கேன்.//

நான் சனிக்கிழமை தான் திருமலையப்பனை சேவித்து விட்டு வந்தேன்...

முகுந்தன் said...

/எங்க வீட்ல இருந்து இப்ப கூட, “charge போய் mobile switch off ஆய்டுச்சு…charge பண்ணாலும் மறுபடியும் ஆன் ஆக மாடேங்குது…” இப்படி ஒரு ஃபோன் வரும் ;-)//

இது டாப்பு :))

முகுந்தன் said...

//இந்த கமெண்ட்டெ என் ப்ளாக்ல போட்டுட்டீங்களா??? ஹா ஹா ஹா :-D எனக்கு mail வந்துடுச்சு...என்னடா இதுன்னு பாத்தா அப்புறம் delete ஆய்டுச்சு...
இன்னும் jet lag போகல போல இருக்கு? ;-)
//

திவ்யப்ரியா,

நானும் கவனிச்சேன்... எல்லாம் jetlag செயல் :-)

Raghav said...

//இந்த கமெண்ட்டெ என் ப்ளாக்ல போட்டுட்டீங்களா??? ஹா ஹா ஹா :-D எனக்கு mail வந்துடுச்சு...என்னடா இதுன்னு பாத்தா அப்புறம் delete ஆய்டுச்சு...
இன்னும் jet lag போகல போல இருக்கு? ;-) //

ஹி ஹி.. ஆமாங்கா. செம தூக்கத்துல இருந்தேனா அதான்..

முகுந்தன் said...

//அண்ணா நல்லா சிரிச்சேன்..!! :)) இப்பெல்லாம் ஸ்கூல் பசங்க கைல செல் இருக்கு..!! :))
//

நன்றி ஸ்ரீ,

எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..

Raghav said...

//வேறொன்றும் அறியேன் பராபரமே//

பராபரம் னு திருமூலர் யாரை அல்லது எந்தக் கடவுளை குறிப்பிடுகிறார் முகுந்தன்?

Raghav said...

//நான் சனிக்கிழமை தான் திருமலையப்பனை சேவித்து விட்டு வந்தேன்...//

ரெண்டு லட்டு பார்சலேய்ய்ய்..

முகுந்தன் said...

////வேறொன்றும் அறியேன் பராபரமே//

சிவபெருமானை என்று நினைக்கிறேன், தவறாக இருந்தால் சொல்லுங்கள்...

முகுந்தன் said...

//வருஷம் எங்கயும் போறதா இல்லை. நீங்க எப்புடி.//

நான் சீக்கரம் தனியா ஊருக்கு போகணும்... எங்கேனு இன்னும் சரியா தெரியல...

ஹேமா said...

நாளைக்கு உங்க கதையை வச்சே வேலை களைப்பில்லாம ஓடிடும்.
தனியா நிறைய சிரிச்சிட்டேன்.

முகுந்தன் said...

நன்றி ஹேமா...

Divya said...

செம ஜோக்குங்க உங்க நண்பரோட[?]......:))

காலையிலேயே சிரிக்க வைச்சுட்டீங்க.....அதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் உங்க போஸ்ட்டுக்கு!!

முகுந்தன் said...

Divya,

சிரிங்க , சிரிங்க, சிரிச்சுகிட்டே இருங்க....

priyamudanprabu said...

என்ன கொடுமை சென்னை தமிழரெ!!!!!!!!!!!!!!!

Karthik said...

என்ன கொடுமை சார் இது!
:)

முகுந்தன் said...

@prabhu
//என்ன கொடுமை சென்னை தமிழரெ!!!!!!!!!!!!!!!//


@karthik
//என்ன கொடுமை சார் இது!
:)//

இந்த கொடுமைய பக்கத்துல இருந்து பாத்தேன்.அது தான் ரொம்ப கொடுமை :-)

Shwetha Robert said...

chacaeilla , remba sirichein mukunthan,hilarious post:)

முகுந்தன் said...

//chacaeilla , remba sirichein mukunthan,hilarious post:)//


ella pugalum nanban oruvanukke :-)

anujanya said...

முகுந்த்,

ஆம், ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவம் மொபைல் வந்த புதிதில். என்னோட பாஸ் மொபைல் தொலைத்து விட்டு முகம் தொங்க வந்தார். ஆளாளுக்கு யோசனை சொல்ல, நான் 'டேய் என்னங்கடா ஒண்ணும் தெரியாம இருக்கீங்க! பாஸ், சிம்பிள் பாஸ். மொபைல் நம்பருக்கு போன் பண்ணுங்க. ரிங் சத்தம் கேட்டு யாராவது எடுப்பாங்க. அவங்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு, நாம போய் வாங்கி வந்துவிடலாம்' என்றேன். எனக்கு அப்போ ஹண்ட்செட் வேறு, சிம் கார்டு வேறு என்றெல்லாம் தெரியாது. Almost சீட் கிழிஞ்சிருக்கும். ஹி ஹி.

அனுஜன்யா

முகுந்தன் said...

//நான் 'டேய் என்னங்கடா ஒண்ணும் தெரியாம இருக்கீங்க! பாஸ், சிம்பிள் பாஸ். மொபைல் நம்பருக்கு போன் பண்ணுங்க. ரிங் சத்தம் கேட்டு யாராவது எடுப்பாங்க. அவங்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு, நாம போய் வாங்கி வந்துவிடலாம்' //

என்னைவிட அப்பாவியா நீங்கள் ?

Ramya Ramani said...

ஹா ஹா ஹா :)