Tuesday, September 16, 2008

திண்ணை.....

விஜய் திண்ணை பற்றி எழுத சொல்லி இருந்தார்.

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால திண்ணை
வீட்டில் இருந்த அனுபவம் இல்லை. ஆனால் மாம்பலத்தில்
எங்க பாட்டி வீட்டுல திண்ணை மாதிரி ஒரு அமைப்பு இருந்தது.
அதுல உட்கார்ந்து நான்,என் தங்கை,பெரியப்பா பசங்க எல்லாரும்,
எங்க பாட்டி சாதம் கையில் உருட்டி போட அதை வாங்கி
சாப்பிடுவோம்,மாம்பழ சீசன் வந்தால் அதுல தான் உக்காந்து
மாம்பழம் சாப்பிடுவோம்.அதெல்லாம் ஒரு சுகம்...

இன்னிக்கு நான் ஆபீஸ் கிளம்பும் போது தான் கவனிச்சேன்,
நாங்க இருக்கும் அபார்ட்மென்டில் திண்ணை இருக்கு.
அதில் தான் கேஷவ் ஸ்கூல் போறதுக்கு முன்னாடி
அவன் அம்மாவுடன் உக்காந்திருப்பான்..

அதனால ஒரு ஐடியா.அவன் கொஞ்சம் பெரியவனா
ஆன உடனே அவனையே திண்ணை அனுபவம்
எழுத சொல்லிடறேன் :-)

வர்ட்டா ....

Saturday, September 13, 2008

அவரு ரொம்ப நல்லவரு...

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்.....
நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன்... இது என்ன பெரிய
விஷயமான்னு கேக்கப்டாது.. மேல,சாரி கீழ படிக்கோணும்..

காலேஜ் கல்சுரல்ஸ் ஸ்பான்சர்ஷிப்காக ஏதோ எங்களால
(மூதேவிங்க மாதிரி மூதேவர்கள் என்னையும் சேர்த்து...)
முடிஞ்சத பண்ணலாம்னு ரெண்டு மூணு எடத்துல
ட்ரை பண்ணோம்.ஆனா ஒரு பய சிக்கலையே!!! கஷ்டப்பட்டு
ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில் பேசி 500 ரூபா தேத்திட்டோம்.
அதுக்காக அவங்க பான்னர் கல்லூரில வெக்கனும்னு சொன்னாங்க.
சரின்னு சொல்லி வாங்கிட்டோம். அதுக்கு அப்புறம்
அந்த அம்மா சொன்னத கேளுங்க...
எங்க பேர் எல்லாம் கேட்டுவிட்டு, இத ஒழுங்கா வெக்கணும்,
நான் வந்து பார்ப்பேன். ஒழுங்கா இத display பண்ணல,
நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.உங்க பேர்
எல்லாம் மறக்க மாட்டேன், அதுலயும் முகுந்தன்கிறது
என்னோட Husband பேரு அப்படின்னு சொல்லிட்டாங்க.
உடனே வெளில வந்ததும் பசங்க இந்த காசுல ஏதாவது
வாங்கி சாப்டா,முகுந்தன்க்கு ஆப்பு அப்படின்னு கலாய்க்க
ஆரம்பிச்சிட்டாங்க.அத ஒரு வழியா சமாளிச்சு(வேற வழி?)
நாங்க மூணு பேரும் கிளம்பிட்டோம்ல...

பஜாஜ் M-80யில் triples வந்தோம். அப்போ எதிராஜ் காலேஜ்
வாசல்ல ஒரு போலிஸ் மாமா புடிச்சிட்டாரு.triples வந்ததுக்கு
பைன் Rs200 கட்டுனு சொல்ல,எங்களுக்கு அள்ளு கழண்டுடுச்சு.
அந்த மூணு பேர்ல ஒருத்தன்,இது தான் முதல் தடவை
நாங்க ரொம்ப நல்லவங்க சார்னு சொன்னான்,

அதோட விட்டிருந்தா பரவா இல்லையே,கூடவே
என் பேர் பிரவீன்குமார்.We are from Loyola college,
please see my ID அப்படின்னு ஒரு படம் போட்டான்.

அதுக்கு அந்த போலிஸ் மாமா,I am Sadhasivam,
Circle inspector,do you want to see my ID?
அப்படின்னு கேட்டாரு. நாங்க உடனே,எங்க கிட்ட
அவ்வளோ காசில்ல சார்னு பம்மினதும்,
அம்பது ரூபா குடுத்துட்டு ஓடு அப்படின்னு சொன்னாரு.

அதுக்கப்புறம் அவரு ஒரு விஷயம் சொன்னாரு பாருங்க...
இப்போ மூணு பெரும் போங்க போற வழில யாரவது புடிச்சா,
circle inspector பாத்துட்டு வரோம்னு சொல்லுங்க விட்டுடுவாங்க
அப்படின்னு சொன்னாரு.நாங்க எஸ்கேப் ...

நீங்களே சொல்லுங்க அவரு ரொம்ப நல்லவரு தானே...

Monday, September 8, 2008

செல்போன்

என்னடா இவன் செல்போன் நன்மைகள்,தீமைகள் பற்றி
அறுக்க போரானானு யோசிக்காதீங்க.....மேலே படிங்க...

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்.....

எனக்கு செல் போன் பரிச்சயம் இல்லாத சமயம்,என்னுடன் வேலை
பார்த்த ஒரிசாவை சேர்ந்த நண்பன் ஒருவன் TATA Indicom mobile
வாங்கினான்.அதை எல்லோரிடமும் காட்டிகொண்டிருந்தான்.
அவன் முகத்தில் ஒரே பெருமை... எல்லோரும் அவனிடம்
ட்ரீட் கேட்க,குடுக்காமலே டபாய்த்து விட்டான்.சிறிது நேரத்திற்கு
பிறகு,சோகமாக உட்கார்ந்திருந்தான்.என்ன விஷயம் என்றால்,
செல் போன் வேலை செய்யவில்லை. நண்பர்கள் ஓரிருவர்
என்னவென்று பார்த்து கொண்டிருந்தனர்,யாருக்கும் ஒன்றும்
புரியவில்லை!!! எனக்கு எதுவும் தெரியாததால்,சும்மா இருப்பதே
அவனுக்கு செய்யும் உதவி என்று விட்டு விட்டேன்.
அப்பொழுது ஷிப்டில் வேலை பார்த்துகொண்டிருந்ததால்
ஆபீஸ் முடிந்து car drop உண்டு. காரில் போகும்போது
வேறு ஒரு நண்பரின் செல்லில் இருந்து TATA Indicom
ஆபீசுக்கு நண்பன் கால் செய்தான். அவர்களிடம் ஏதோ கேட்க,
அவர்கள் ஏதோ சொல்ல பையனுக்கு செம காண்டு.
இது தான் அவர்களிடம் அவன் சொன்னது,
"You dont know who I am , I will teach you a lesson.
If you dont replace my handset, I will sue you and make sure
that TATA Indicom closes the mobile division".
சொல்லிவிட்டு போன் கட் பண்ணிவிட்டான்.ஷோரூமை
நெருங்கிவிட்டோம்.ஆவேசமாக உள்ளே போய் அவர்களிடம் ஹிந்தியிலும்,ஆங்கிலத்திலும் சண்டை போட்டான்.
கடையில் இருந்தவர் அந்த போனை வாங்கி பார்த்து,
ஏதோ செய்தார்.போன் வேலை செய்ய ஆரம்பித்தது....
என்னவென்று நாங்கள் விழிக்க, கடைக்காரர் சொன்னது ......

"To use the mobile, you have to switch it on first"
நண்பன் முகம் போன போக்கை நான் சொல்லவேண்டுமா????

Monday, September 1, 2008

'நாயகன்' கேஷவ்

சென்னை வந்ததில் இருந்து கேஷவ் மீண்டும் ஸ்கூல்
போக ஆரம்பித்து விட்டான்...

நேற்று ஏதோ வாயில் மாட்டிகொண்டதால் தூ என்று துப்பினான்.
நான்,கேஷவ் இந்த மாதிரி பண்ண கூடாது.என்ன கெட்ட பழக்கம்?
பாத்ரூம்ல போய் துப்பு அப்படின்னு சொல்ல ...

கேஷவ்:நேத்து டிவில பாத்த படத்துல அப்படிதான் துப்பினார்
அந்த அங்கிள்

நான் : அதெல்லாம் சொல்லாதே , நீ அப்படி பண்ண கூடாது....

கேஷவ் : அவர நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் ...

எனக்கு நாயகன் BGM கேட்டது :-)*************************************************************

என் மனைவி கடைக்கு போக முடியாமல் என் மாமியாரிடம் காய்கறி
வாங்கி வர சொல்ல...

கேஷவ்:நீ மொதல்ல பாட்டி கிட்ட பைசா குடு. நம்ம கிட்ட
பைசாவா இல்ல?


*************************************************************
நான் : கேஷவ் அப்பா அடுத்த மாசம் திரும்ப வேற ஏதாவது
ஊருக்கு போகணும்.நீ அம்மாவ படுத்தாம சமத்தா ஸ்கூல்
போகணும்...

கேஷவ் : நீ ஊருக்கு போனா நான் அழுவேன்.

நான் : நான் சீக்ரம் வந்துடுவேன்.

கேஷவ் : நைட் நீ என் பக்கத்துல படுதுக்கலன்னா நான்
அந்த பக்கம் உருண்டு விழுந்துடுவேன் அப்பா,
ப்ளீஸ் நீ போகாதே...

நான் : ????

(இதை டைப் பண்ண கூட என்னால் முடியவில்லை. பல நேரம்
எதுவும் வேண்டாம் குழந்தையுடன் இருந்தால் போதும்
என்று இருக்கிறது... என்ன செய்ய ....)