Monday, August 25, 2008

பளார்

ரகுவிற்கு எப்பொழுதும் வெளி நாடு செல்ல வேண்டும் என்பதே ஆசை.
நிறைய ஊருக்கு போக வேண்டும்,அங்கு வாழும் மக்களின்
வாழ்க்கைதரம் இந்தியாவில் இருப்பதை விட எவ்வளவோ நன்றாக
இருக்கும் என்பதும் அங்கு இங்குள்ளது போல பிசைகாரர்களும்,
திருடர்களும் இருக்கமாட்டார்கள் என்பதும் அவன் எண்ணம்.
அவன் வேலை செய்யும் கம்பனியில் அவனை ஒரு வருடம்
பெல்ஜியம் போக சொன்னதும் துள்ளி குதித்தான்.

உடனே வீட்டில் இருந்த மனைவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.அவளுக்கும் மகிழ்ச்சி.ஆனால் அவர்களின் நான்கு வயது
மகள் அக்ஷயாவிற்கு ஒரே வருத்தம்.அப்பா நாம இங்கயே
இருக்கலாம்பா,அங்க போனா எனக்கு பிரெண்ட்ஸ் யாரும் இருக்க
மாட்டங்க அப்பா என்று கெஞ்சினாள்.அதற்கு ரகு,இல்லடா செல்லம்
நீ கவலை படாதே,அங்கே உனக்கு வெளிநாட்டு பிரெண்ட்ஸ்
கிடைப்பாங்க,நீ ரொம்ப ஜாலியா இருக்கலாம் என்று சொல்லி
சமாதானம் செய்தான்.

அவர்கள் ஊருக்கு போகும் நாள் வந்தது.அவர்கள் கிளம்பும்போது
வாசலில் ஒரு முதியவர் புல்லாங்குழல் ஊதிக்கொண்டே வந்தார்.
அவரை கண்டதும் அக்ஷயா, அப்பா அந்த தாத்தா பாவம்பா
அஞ்சு ரூபா குடுங்க என்று சொல்ல,ரகு எரிச்சலாக எல்லாம்
திருட்டு பசங்க,பைசா எதுவும் போட மாட்டேன்.இந்த பிச்சைகாரர்கள்
தொல்லை எல்லாம் பெல்ஜியம்ல இருக்காது என்று சொன்னான்.
குழந்தை முகம் வாடியது.சிறிது நேரத்தில் விமான நிலையம்
புறப்பட்டு சென்றார்கள்.பெல்ஜியம் விமான நிலையத்தில் தரை
இறங்கியதும் அவன் சோதனைகள் எல்லாம் முடித்து,பெட்டியை
எடுத்துக்கொண்டு டாக்ஸி டித்தான்.அவன் போக வேண்டிய
ஹோட்டலில் அவனை இறக்கி விட்ட டாக்ஸி டிரைவர் மீட்டரில்
காட்டியதை விட கூடுதலாக பணம் கேட்க ,வேறு வழியின்றி அதை
அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான் ரகு.இதை எல்லாம்
அக்ஷயா கவனித்து கொண்டிருந்தாள்.

அவர்கள் போய் மூன்று மாத காலம் ஆகியிருந்தது,ரகுவிற்கு
வேலை பளு அதிகமாகவே இருந்தது,அவன் மனைவிக்கு ரொம்ப
கஷ்டமாக இருந்தது.வீட்டில் இன்டர்நெட்டில் திரைக்கு வராத/வந்து
சிலநோடிகளே ஆன படங்களை பார்த்து கொண்டிருந்தாள்.அக்ஷயா
ஸ்கூல் போய் கொண்டிருந்தாள்.ஆனால் அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லை,எப்போதும் சோகமாகவே இருந்தாள்.

ஒரு நாள் ரகு அவர்களை அழைத்து கொண்டு அருகில் இருந்த
ஒரு ஹோட்டலுக்கு சென்றான்.அப்பொழுது வழியில்
சுமார் முப்பது வயது மதிக்க தக்க ஒருவர்,ஒரு கிடார்
வாசித்துக்கொண்டே பாடிகொண்டிருந்தார்.அதை பார்த்த பலர்
அவர் வைத்திருந்த தட்டில் சில்லறைகளையும்,கரென்சி
நோட்டுக்களையும் போட்டனர்.ரகுவும் தன் பங்குக்கு காசு போட்டான்.
போட்டு விட்டு திரும்பிய ரகுவின் பர்சை ஒரு திருடன்
பிடுங்கிக்கொண்டு ஓடினான்.அவனால் திருடனை பிடிக்க முடியவில்லை.

இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த அக்ஷயா,அப்பா
இங்கயும் திருடர்களும் பிச்சைகாரரர்களும் இருக்காங்களா?
கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க என்று சொல்ல ரகுவிற்கு
பளார் என்று செவிட்டில் அறைந்தது போல இருந்தது...

14 comments:

Ramya Ramani said...

நிமிஷக்கதை..நல்லா இருக்கு முகுந்தன்

முகுந்தன் said...

தொடர்ந்து முதல் கமென்ட் போடும் ரம்யாவுக்கு
ஒரு ஓ....

Vijay said...

தலை பின்னறீங்க.
இது சுயபுராணம் தானே?
வெளிநாட்டுல பிச்சைக்காரங்க இருக்க மாட்டங்களா? ஹய்யோ ஹய்யோ. அவிங்கள பார்த்தாலே எட்டடி தள்ளிதான் போவேன்.

முகுந்தன் said...

ரொம்ப நன்றிங்கோ :-)

நான் பார்த்த சில மனிதர்களின் எண்ணம் இது. எப்போதும் அவர்களுக்கு நம்ம ஊர் கேவலம், ஏதோ வெள்ளைக்காரன் என்றால் ரொம்ப ஒசத்தி.அவர்கள் மொழி என்றால் ஒசத்தி. என்னை பொறுத்த வரை எல்லா இடமும்
ஒன்றே.எல்லா இடத்திலும் இறக்கிறார்கள் பிச்சைகாரர்களும், திருடர்களும்.

நம்ம ஊரில் இருக்கும் ஊழல் குறைந்தால் போதும் இன்னும் சொர்கமாக இருக்கும் :-)

Divyapriya said...

சூப்பர் கதை...ஒரு பக்க கதை ன்னு குமுதம்ல வருமே, அந்த மாதிரி இருக்கு, பேசாம,அனுப்பி பாருங்களேன்?

anujanya said...

முகுந்த்,

நல்ல முன்னேற்றம். குமுதத்திற்கு அனுப்பிப் பாரேன். (சொந்த அனுபவத்தில் replace all madrid with belgium, mukund with raghu and keshav with akshya - கரீட்டா?) நிசமாலுவே நம்ம பதிவர்கள் கதை எல்லாம் குமுதம்/விகடன் கதைகள விட பன்மடங்கு மேல்.

அனுஜன்யா

முகுந்தன் said...

அனுஜன்யா,
நிச்சயமா இல்ல .
நான் அப்படி ஒரு போதும் நினைத்ததில்லை :-)

Karthik said...

சூப்பர் கதைங்க தல..!
:)

முகுந்தன் said...

Karthik,
Welcome to my blog and thanks for all your comments :-)

முகுந்தன் said...

// Divyapriya said...
சூப்பர் கதை...ஒரு பக்க கதை ன்னு குமுதம்ல வருமே, அந்த மாதிரி இருக்கு, பேசாம,அனுப்பி பாருங்களேன்?

August 26, 2008 12:41 PM

//

இப்படியே உசுப்பேத்தி தான் உடம்பெல்லாம் புன்னயிருக்கு ....
இன்னும் நல்லா எழுதும்போது அனுப்பறேன் :-)

Raghav said...

சிம்பிளான கதை முகுந்தன்.. எத்தனையோ முறை நினைத்தது தான்.. ஆனால் எனக்கு தெரிந்து வெளிநாடுகளில் பிச்சைக்காரர்கள் நம் முன்னே வந்து நின்று தொல்லை பண்ணி பிச்சை எடுப்பதில்லை.. அவர் ஒரு ஓரமாக அமர்ந்திருப்பார், விருப்பப்பட்டால் நீங்கள் கொடுக்கலாம்..

ஆனால் நமது ஊரில் நிலைமை அப்படியா.. ஏறத்தாழ அனைத்து கோவில்கள், பஸ்ஸ்டாப், ஹோட்டல் வாசல்களில் நம்மை தொட்டு கேட்டு வாங்குவார்கள். பிச்சைக்காரர்களாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு.

//நம்ம ஊரில் இருக்கும் ஊழல் குறைந்தால் போதும் இன்னும் சொர்கமாக இருக்கும் :-)//

எப்போ அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போறீங்க முகுந்தன் ? :)
பொருளாளர் பதவி மட்டும் எனக்கு கொடுத்துருங்க..

முகுந்தன் said...

//எப்போ அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போறீங்க முகுந்தன் ? :)
பொருளாளர் பதவி மட்டும் எனக்கு கொடுத்துருங்க..//

என்ன ராகவ் நான் என்ன பாவம் பண்ணினேன்?
எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த IT Industry விட்டு வெளியே போய்டனும்னு ஆசை. ஒரு சின்ன Fast food அல்லது பொட்டி கடை வைத்தாவது
பிழைத்த கொள்ளலாம் ஆனால் நாடோடி போல் திரிய வேண்டாம் என்று இருக்கிறது , அப்போது வேண்டுமானால் கல்லாவில் நீங்கள் உக்காருங்கள் :-)

Unknown said...

நல்லாருக்கு அண்ணா இந்த கதை..!! :)) சின்னதா இருந்தாலும் பொருள் பொதிந்த கதை..!! :))

முகுந்தன் said...

//நல்லாருக்கு அண்ணா இந்த கதை..!! :)) சின்னதா இருந்தாலும் பொருள் பொதிந்த கதை..!! :))
//

நன்றி ஸ்ரீ...