Monday, August 18, 2008

பயணிகள் கவனத்திற்கு...

ஆகஸ்ட் 14 ம் தேதி சென்னை வந்து சேர்ந்தோம்.16 மணி நேர பயண
களைப்பால் வீட்டிற்கு வந்ததும் தூங்கி விட்டோம்.இரண்டு நாட்கள்
கழித்து நான் சும்மா எங்கள் பாஸ்போர்ட் எடுத்து பார்த்து
கொண்டிருந்த போது, எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
என மனைவியின் பாஸ்போர்ட்டில் Arrival stamp இல்லை...
இதை பார்த்த எனக்கு ஒரே டென்ஷன். உடனே என் மனைவியை
அழைத்து கொண்டு எங்கள் பாஸ்போர்ட்டையும், boarding passஐயும்
எடுத்து கொண்டு ஏர்போர்ட் விரைந்தோம்.

அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் அல்லாதவரை
உள்ளே விட முடியாது என்று கூறி விட்டனர்.சிறிது நேரத்திற்கு
பின் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி Jet Airways
(நாங்கள் அதில் தான் வந்தோம்) ஊழியர் ஒருவரை அழைத்து
வந்தால் உள்ளே சென்று ஏர்போர்ட் மானஜெரை பார்க்கலாம்
என்று சொன்னார்.உடனே சென்று Jet Airways ஊழியர் ஒருவரை
கூட்டி கொண்டு வந்தோம்.உள்ளே சென்று ஏர்போர்ட் மானஜெரை
பார்த்து விஷயத்தை சொன்னோம் .மனிதர் பொறுமையாக
எல்லாவற்றையும் கேட்டு விட்டு immigrationல் இருப்பவர்கள்
தான் எதுவும் செய்ய முடியும் என்று கூறி , அவர்கள் போன்
நம்பர் கொடுத்தார்.அந்த நம்பரில் கூப்பிட்டால்,இந்த தவறு
நடந்தது வேறு ஷிபிட்டில்,அதனால் நான் எதுவும் செய்ய முடியாது
என்று சொல்லி ,departure இல் இருக்கும் immigration officer
உடன் பேசுங்கள் என்று கூறிவிட்டார்.ஏர்போர்ட் மானஜெர் உடனே
அந்த immigration officer உடன் பேச நம்பர் போட்டு கொடுத்தார்.
(ஏர்போர்ட் மானஜெர் இல்லாவிட்டால் எங்களுக்கு சங்கு தான் :-)).
அந்த ஆபிசர் என்னிடம் இதை ஏன் இரண்டு நாட்கள் பார்க்கவில்லை
என்று கடிந்து கொண்டார்.ஏதோ காரணம் சொல்லி அவரை
சமாதனம் செய்தேன்.ஏர்போர்ட் மானஜெர் உடனே என் மனைவியையும்
Jet Airways Staffயையும்,immigration ஆபீசரிடம் கூட்டி கொண்டு
சென்றார்.ஆனால் உள்ளே இருந்த செக்யூரிட்டி என் மனைவியை
விட முடியாது என்று கூற , ஏர்போர்ட் மானஜெர் அவரிடம் பேசி
என் மனைவியும் Jet Airways Staffயையும் உள்ளே அனுப்பி வைத்தார்.
அங்கு போனதும் immigration ஆபிசர் என் மனைவியிடம் உங்களை
யார் வெளியில் விட்டார்கள், எப்படி stamp இல்லாமல் வந்தீர்கள்
என்று கேட்க,என் தர்மபத்தினிக்கு உடல் வியர்த்து விட்டது :-)
பின்னர் Passenger list செக் செய்து பாஸ்போர்டில் "This passenger
has arrived on 14-Aug-08 by Aircraft xx as per our records"
என்று எழுதி கைஎழுத்து போட்டு கொடுத்தார்.

இதனால் சகலமானவர்களுக்கும் என்ன சொல்கிறேன் என்றால்,
நம்ம ஊருக்கு வந்து விட்டோம் என்று சற்று அலட்சியமாக
இல்லாமல் எல்லாவற்றையும் சரி பார்த்த பின்னரே counter
விட்டு நகரவும்.இல்லாவிட்டால் மிகவும் கஷ்டம்.

எங்களுக்கு பேருதவி செய்த அந்த மானஜெர் பல்லாண்டு வாழ்க.

இதையும் படியுங்கள்.....(இது கதையல்ல உண்மை...)

நான் வெளியில் என் மனைவிக்காக காத்திருந்த போது, ஒரு தம்பதி
தங்கள் குழந்தையுடன் வந்தனர். அவர்கள் செக்யூரிட்டி இடம்
சொன்னதை கேட்டதும் எனக்கு தலை சுற்றியது.......

அவர் சொன்னது.. ஐயா நானும் என் மனைவியும் குழந்தையுடன்
சிங்கபூரில் இருந்து இன்று காலை வந்தோம் ... வீட்டிற்கு
சென்று பார்த்தால் என் குழந்தையின் பாஸ்போர்ட்டில்
Arrival stamp இல்லை...


எனக்கு வடிவேலு சொல்லும் கிளம்பிட்டாங்கய்யா ஞாபகம் வந்தது....

13 comments:

Ramya Ramani said...

இதே போல் பாஸ்போர்ட் பேஜஸ் கூட கிழிக்கறாங்க.. நான் நம்ம ஊரு பழக்கத்தில இங்கேயும் அவங்க பாஸ்போர்ட் திரும்பி தரும்வரை பாத்திட்டே இருந்தேனா.."மேடம் வீ வில் கிவ் யுவர் பாஸ்போர்ட் சேவ்லி.ப்ளீஸ் ஸ்டான்ட் தேர்னு சொல்லி மானத்த வாங்கிட்டாங்க" :(

தகவலுக்கு நன்றி முகுந்தன்

BTW How is Keshav??

முகுந்தன் said...

ஆமாம் ரம்யா, நான் கூட கேள்விபட்டேன். மும்பையில் அடிக்கடி நடக்கிறதாம். அதை சரிபார்க்க தான் பாஸ்போர்டை எடுத்தேன். கிணறு வெட்ட பூதம்
கிளம்பியது.

கேஷவ் ஜாலியாக இருக்கிறான். அடுத்தவாரத்தில் இருந்து தான் ஸ்கூல்.

Anonymous said...

எனக்கும் இது மாதிரி ஒரு அனுபவம் குவைத்தில் ஏற்பட்டது. எனக்கு பாஷை தெரியாததால் ஒய்யாரமாக ஒதுங்கி விட்டேன். என் கூட வேலை பார்க்கும் ஒரு மேஜர் தான் பாவம் அவர்களுடன் மல்லுக்கட்டி ஸ்டாம்ப் பண்ணவைத்தார்.

Vijay said...

Actually you can't blame the immigration officers for this. As this is a monotonous job, they have to do a lot of checking, given the increased amount of terrorist threats as well. So it is upto us to ensure that the arrival departure stamp has been done properly. But what the immigration department can do is to accept their mistake and take responsibility in undoign the wrong thing, done by their department. But they show no accountability.
Anyway, all is well that ends well.
Now I have to go home and see, wehther the arrival and departure stamps are done properly in my passport :)

முகுந்தன் said...

Vijay,

You are right. It is first the responsibility of the individual,
but the way they treat the issue
looks like as if we have done some crime. As you said they should accept their mistake and rectify the same.

Anyway with the Airport manager's help we were able to sort this out. without him , it would have taken atleast 2-3 days.

முகுந்தன் said...

//எனக்கும் இது மாதிரி ஒரு அனுபவம் குவைத்தில் ஏற்பட்டது.//

I guess you are lucky to get this sorted out in Kuwait. If samething had happened to me in Madrid I would have gone mad as
I donot know Spanish.

anujanya said...

முகுந்தா முகுந்தா

வரந்தா வரந்தா என்பதற்கு பதில், இனிமேல் Immigration guys வரான்டா வரான்டா என்று பாடுவார்கள். Jokes apart, it really is scary. Agree with Vijay and you that it is primarily our responsibility. ஒரு வேளை மசி (இங்க்) பற்றாக்குறையோ என்னவோ. இரண்டு ஸ்டாம்ப் அடித்தால் ஒன்று இலவசமாய் விட்டுவிடுவார்கள் போல.

If the same had happened in Madrid, not only would you have gone 'Mad' but also would have been tough to get 'rid' of the city.

அனுஜன்யா

முகுந்தன் said...

//If the same had happened in Madrid, not only would you have gone 'Mad' but also would have been tough to get 'rid' of the city.
//

good one :-)

anujanya said...

ஹாய் முகுந்த்,

என் வலைப்பூவில் உனக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருக்கு. வந்து பார்க்கவும்
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)

அனுஜன்யா

தங்க முகுந்தன் said...

இன்று தான் உங்கள் வலைப்பதிவை அதுவும் எனது பெயரும் முகுந்தன் என்பதால் பார்க்க விரும்பினேன். பயணிகள் கவனத்திற்கு கட்டுரையை வாசித்தபின் எனக்கு கடந்த 20 வருடங்களுக்கு முதல் ஏற்பட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. உங்களுடன் தொடர்பை ஆரம்பிப்பதுடன் சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

1988 தை மாதம் 5ஆம் திகதி முதன் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட என்னை வழியனுப்பி வைத்தவர் என்னடைய நண்பரொருவர். அவரே தனது நண்பரொருவரை (Immigration Officer) அழைத்துவந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் என்னைக் அழைத்துச் சென்று தானே சகல கருமங்களையும் ஆற்றி என்னை வழியனுப்பி வைத்தார். அதன்பின் சென்னையில் விமானத்திலேயே வந்து சில அதிகாரிகள் என்னை அழைத்தச் சென்று விருந்தினர் பகுதியில் காத்திருந்த எனது பெரிய தந்தையாருடன் இருக்கவிட்டுவிட்டு எனது கடவுச் சீட்டை வாங்கித் தாமே எல்லாம் செய்தபின் கொண்டுவந்த ஒப்படைத்தனர். அதன்பின் 1989 மாசியில் நான் மீண்டும் இலங்கைக்கு திரும்பியபோதும் குறிப்பிட்ட அதிகாரிகளே என்னை சென்னையில் வழியனுப்பி வைத்தனர். பிரச்சனை எனக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தது. நான் 1988 தை மாதம் கொழும்பை விட்டுப் புறப்படும்போது வெளியேறியதற்கான முத்திரை (Depature Stamp)குத்தப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டு தடுத்து வைத்திருந்தனர். முதல் முறை விமானம் ஏறி பின் இறங்கிய பயத்தினால் எனக்கு அழுகைதான் வந்தது. ஓரளவு மும்மொழிகளும் தெரிந்தபடியால் நான் விபரமாக தெரிவித்தேன் இந்த விமான நிலையத்தினூடாகத்தான் சென்றேன். இதோ சென்ற போது இதே விமான நிலையத்தியல் வழங்கிய அனுமதி அட்டை (Boarding Card)என்னிடமுள்ளது. போனபோது பாவித்த விமானச் சீட்டின் அடிக்கட்டை இருக்கிறது என்று சகல ஆவணங்களையும் ஏதோ எனது கைப்பையில் இருந்தபடியால் கொடுத்து சுமார் 2 மணிநேரப் போராட்டத்தின் பின் வெளியேறினேன்.

அதன்பிறகு ஒவ்வொரு தடவையும் சரியாக முத்திரை பதியப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்த பின்பே மறுவேலை.

தகவலுக்கு நன்றி

முகுந்தன் said...

வாங்க தங்க முகுந்தன் ...
நம்ம ஊர்லேயே கஷ்டம்னு சொன்னேன் ,
உங்க கதை ரொம்ப
கொடுமையா இருக்கு :(

Karthik said...

Call me crazy but life is so interesting becoz of incidents like these...
:))

முகுந்தன் said...

Beleive me you will go mad and not feel it interesting when you have these issues :(