Wednesday, August 6, 2008

நடப்பது நடந்தே தீரும்

நான் முன்பெல்லாம் சின்ன விஷயத்திற்கு கூட கவலை படுவேன்.
ஏதேனும் பிரச்சனை என்றால் மிகவும் வருந்துவேன்.இப்பொழுதெல்லாம்
மாறிவிட்டேன். நான் சொல்வது என்னவென்றால் ஏதேனும்
பிரச்சனை என்றால் , உங்களால் அதை தீர்க்க முடியுமா என்று
பாருங்கள்.உங்களால் தீர்க்க முடியாத பட்சத்தில் அதை நினைத்தே
கவலை பட்டு கொண்டிருக்காமல் , நடப்பது நடந்தே தீரும்,நம்மால்
எதுவும் செய்ய முடியாது என்று அதை ஏற்று கொள்ளுங்கள்.நான் இப்படி
சொல்வதால் ஏதோ வருவதை எல்லாம் ஒப்புக்கொள்ள சொல்வதாக
நினைக்க வேண்டாம்.அது யாராலும் முடியாது.அதை நினைத்து
உடலை/மனதை வருத்தி BP,Depression போன்ற உடல் நல குறைவு
ஏற்படாமல் இருக்க தவிர்ப்போம்.

12 comments:

Raghav said...

ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்களே முகுந்தன், நம்மால் முடியாவிட்டாலும் நாரணனால் முடியுமே. சரணாகதி அடைந்து விட்டால் அவன் பார்த்துக் கொள்வான். இது என் அனுபவம்.

Raghav said...

உங்கள் இஷ்ட தெய்வத்தின் முன் நின்று உண்மையான பக்தியுடன் அனைத்தையும் சொல்லி விடுங்கள். நடப்பவை நல்லதாகவே நடக்கும். மாம் ஏகம் சரணம் விரஜ என்று தன் ஒப்பார் இல் அப்பன், மணிய்யப்பன், முத்தப்பன்ன், பொன்னப்பன், நம் ஒப்பில்லா அப்பன் அருளியுள்ளானே அதை நினைவில் கொள்ளுங்கள்.

முகுந்தன் said...

//ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்களே முகுந்தன், நம்மால் முடியாவிட்டாலும் நாரணனால் முடியுமே. சரணாகதி அடைந்து விட்டால் அவன் பார்த்துக் கொள்வான். இது என் அனுபவம்.
//

ரொம்ப சரியாக சொன்னீர்கள் ராகவ்...

"The will of God will never take you where the Grace of God will not protect you."

முகுந்தன் said...

//சரணாகதி அடைந்து விட்டால் அவன் பார்த்துக் கொள்வான். இது என் அனுபவம்.
//

என் அனுபவமும் இது தான்....

முகுந்தன் said...

Raghav,

check this....

http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=vaishnavam

Vijay said...

நடக்கணும் என்றிருப்பது
நடக்காமல் இருக்காது

நடக்காது என்றிருப்பது
நடக்கவே நடக்காது

இதெப்படி இருக்கு?

முகுந்தன் said...

//இதெப்படி இருக்கு?//

sooooper

Raghav said...

//Raghav,

check this....

http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=vaishnavam

//

ஏற்கனவே பார்த்துள்ளேன் முகுந்தன். தேசிகன் மிக அருமையாக எழுதுவார். இப்போது அவ்வளவாக எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

anujanya said...

முகுந்த்,

நல்ல வரைடி வரத் தொடங்கியுள்ளது உங்கள் எழுத்தில். வாழ்த்துக்கள். கொஞ்சம் நிஜ வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் கலந்து கொடுத்தால், சுவையாக இருக்கும். எளிதில் relate செய்து கொள்ள முடியும். For example, பேருந்தில் முதல் சீட்டில் உட்கார்ந்துகொண்டு ஓட்டுனர் ஓட்டுவதை மிகுந்த அச்சத்துடன் தூங்காமல் பார்த்து, டென்ஷன் அடையும் பார்ட்டிகள் உண்டு. பேசாமல், ஒரு i-Pod இல் நல்ல பாட்டுகளை, கண்ணை மூடிக்கொண்டு கேட்டு வந்தால், சுகம். நல்ல தூக்கமும் வரும். நோ டென்ஷன். இந்த மாதிரி ஏதாவது கலந்து அடியுங்கள்.

அனுஜன்யா

முகுந்தன் said...

அனுஜன்யா,

பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பா நிஜ வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன்
கலந்து கொடுக்க முயற்சி செய்கிறேன்...

Karthik said...

Well, Someone getting philosophical!
:)