Monday, August 25, 2008

பளார்

ரகுவிற்கு எப்பொழுதும் வெளி நாடு செல்ல வேண்டும் என்பதே ஆசை.
நிறைய ஊருக்கு போக வேண்டும்,அங்கு வாழும் மக்களின்
வாழ்க்கைதரம் இந்தியாவில் இருப்பதை விட எவ்வளவோ நன்றாக
இருக்கும் என்பதும் அங்கு இங்குள்ளது போல பிசைகாரர்களும்,
திருடர்களும் இருக்கமாட்டார்கள் என்பதும் அவன் எண்ணம்.
அவன் வேலை செய்யும் கம்பனியில் அவனை ஒரு வருடம்
பெல்ஜியம் போக சொன்னதும் துள்ளி குதித்தான்.

உடனே வீட்டில் இருந்த மனைவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.அவளுக்கும் மகிழ்ச்சி.ஆனால் அவர்களின் நான்கு வயது
மகள் அக்ஷயாவிற்கு ஒரே வருத்தம்.அப்பா நாம இங்கயே
இருக்கலாம்பா,அங்க போனா எனக்கு பிரெண்ட்ஸ் யாரும் இருக்க
மாட்டங்க அப்பா என்று கெஞ்சினாள்.அதற்கு ரகு,இல்லடா செல்லம்
நீ கவலை படாதே,அங்கே உனக்கு வெளிநாட்டு பிரெண்ட்ஸ்
கிடைப்பாங்க,நீ ரொம்ப ஜாலியா இருக்கலாம் என்று சொல்லி
சமாதானம் செய்தான்.

அவர்கள் ஊருக்கு போகும் நாள் வந்தது.அவர்கள் கிளம்பும்போது
வாசலில் ஒரு முதியவர் புல்லாங்குழல் ஊதிக்கொண்டே வந்தார்.
அவரை கண்டதும் அக்ஷயா, அப்பா அந்த தாத்தா பாவம்பா
அஞ்சு ரூபா குடுங்க என்று சொல்ல,ரகு எரிச்சலாக எல்லாம்
திருட்டு பசங்க,பைசா எதுவும் போட மாட்டேன்.இந்த பிச்சைகாரர்கள்
தொல்லை எல்லாம் பெல்ஜியம்ல இருக்காது என்று சொன்னான்.
குழந்தை முகம் வாடியது.சிறிது நேரத்தில் விமான நிலையம்
புறப்பட்டு சென்றார்கள்.பெல்ஜியம் விமான நிலையத்தில் தரை
இறங்கியதும் அவன் சோதனைகள் எல்லாம் முடித்து,பெட்டியை
எடுத்துக்கொண்டு டாக்ஸி டித்தான்.அவன் போக வேண்டிய
ஹோட்டலில் அவனை இறக்கி விட்ட டாக்ஸி டிரைவர் மீட்டரில்
காட்டியதை விட கூடுதலாக பணம் கேட்க ,வேறு வழியின்றி அதை
அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான் ரகு.இதை எல்லாம்
அக்ஷயா கவனித்து கொண்டிருந்தாள்.

அவர்கள் போய் மூன்று மாத காலம் ஆகியிருந்தது,ரகுவிற்கு
வேலை பளு அதிகமாகவே இருந்தது,அவன் மனைவிக்கு ரொம்ப
கஷ்டமாக இருந்தது.வீட்டில் இன்டர்நெட்டில் திரைக்கு வராத/வந்து
சிலநோடிகளே ஆன படங்களை பார்த்து கொண்டிருந்தாள்.அக்ஷயா
ஸ்கூல் போய் கொண்டிருந்தாள்.ஆனால் அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லை,எப்போதும் சோகமாகவே இருந்தாள்.

ஒரு நாள் ரகு அவர்களை அழைத்து கொண்டு அருகில் இருந்த
ஒரு ஹோட்டலுக்கு சென்றான்.அப்பொழுது வழியில்
சுமார் முப்பது வயது மதிக்க தக்க ஒருவர்,ஒரு கிடார்
வாசித்துக்கொண்டே பாடிகொண்டிருந்தார்.அதை பார்த்த பலர்
அவர் வைத்திருந்த தட்டில் சில்லறைகளையும்,கரென்சி
நோட்டுக்களையும் போட்டனர்.ரகுவும் தன் பங்குக்கு காசு போட்டான்.
போட்டு விட்டு திரும்பிய ரகுவின் பர்சை ஒரு திருடன்
பிடுங்கிக்கொண்டு ஓடினான்.அவனால் திருடனை பிடிக்க முடியவில்லை.

இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த அக்ஷயா,அப்பா
இங்கயும் திருடர்களும் பிச்சைகாரரர்களும் இருக்காங்களா?
கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க என்று சொல்ல ரகுவிற்கு
பளார் என்று செவிட்டில் அறைந்தது போல இருந்தது...

Friday, August 22, 2008

Blogging Friends forever Awardஎனக்கு ஒரு அவார்ட் கொடுத்து,
என்னை நெகிழ வைத்த அனுஜன்யா விற்கு நன்றி....

என் வலையுலக நண்பர்கள் இதோ... என்னால் ஐந்து பேரை
மட்டும் சொல்ல முடியவில்லை....

1) விஜய் - நான் இந்தியா திரும்புகிறேன் என்றதும் என்னை
பெங்களூர் வரும்படி அன்புடன் அழைத்த நண்பர்....

2) ஷ்வேதா - நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து என்னை
ஊக்கப்படுத்தும் ஒருவர்.. தற்சமயம் படிப்பில் மூழ்கியுள்ள
மொக்கை உலகின் ராணி...

3) divyapriya - என்னை தன் வலையுலக நண்பர்களுள்
ஒருவனாக ஏற்று கொண்ட அற்புதமான கதாசிரியர் ..

4) தாரணி பிரியா - கதையா ? கவிதையா?
கலக்கி கொண்டிருக்கும் எழுத்தாளர்.

5) ராகவ் - எப்பொழுதும் கண்ணன் நினைவாகவே இருக்கும் பக்தர்

6) சேவியர் - வலையுலகின் மிக அற்புதமான கவிஞர்

7) திவ்யா - கதை,கவிதை எல்லாவற்றிலும் தனக்கென
ஒரு இடம் பிடித்திருக்கும் மிக அற்புதமான எழுத்தாளர்....

8) ரம்யா ரமணி - கலக்கல் எழுத்துக்களுக்கு சொந்தகாரர்

9) குந்தவை - யதார்த்த எழுத்தாளர்....

இந்த அவார்டை நீங்கள் எத்தனை பேருக்கு முடியுமோ
அத்தனை பேருக்கும் தாருங்கள்...

A for Apple

என்னை இதில் கோர்த்து விட்டவர் divyapriya

A
abdulkalam - அப்துல் கலாம் அவர்களின் வலை பக்கம்

B
bluemountain - வாழ்த்து அட்டைகள்

C
chennaionline

D
dhool - அருமையான பாடல்கள்

E
experts-exchange - Technical forum

F
foodsafety-Ministry of health

G
gitapress

H
howstuffworks -Information on how different things work

I
isro - Indian Space Research


J
jokes

K
kids

L
lords - Cricket

M
motherteresa

N
bbc

O
oppiliappan

P
positivemindwealth

Q
quest

R
ramanuja

S
spanish - Learning Spanish

T
thesecret

U
usefulsites

V
vedamantram

W
weightlossforall

X
xe- online Currency converter

Y
yogainstitute

Z
zindagi


நான் இதில் கோர்த்து விடுவது
1) அனுஜன்யா
2) தாரணி பிரியா
3) குந்தவை

Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.

Monday, August 18, 2008

பயணிகள் கவனத்திற்கு...

ஆகஸ்ட் 14 ம் தேதி சென்னை வந்து சேர்ந்தோம்.16 மணி நேர பயண
களைப்பால் வீட்டிற்கு வந்ததும் தூங்கி விட்டோம்.இரண்டு நாட்கள்
கழித்து நான் சும்மா எங்கள் பாஸ்போர்ட் எடுத்து பார்த்து
கொண்டிருந்த போது, எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
என மனைவியின் பாஸ்போர்ட்டில் Arrival stamp இல்லை...
இதை பார்த்த எனக்கு ஒரே டென்ஷன். உடனே என் மனைவியை
அழைத்து கொண்டு எங்கள் பாஸ்போர்ட்டையும், boarding passஐயும்
எடுத்து கொண்டு ஏர்போர்ட் விரைந்தோம்.

அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் அல்லாதவரை
உள்ளே விட முடியாது என்று கூறி விட்டனர்.சிறிது நேரத்திற்கு
பின் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி Jet Airways
(நாங்கள் அதில் தான் வந்தோம்) ஊழியர் ஒருவரை அழைத்து
வந்தால் உள்ளே சென்று ஏர்போர்ட் மானஜெரை பார்க்கலாம்
என்று சொன்னார்.உடனே சென்று Jet Airways ஊழியர் ஒருவரை
கூட்டி கொண்டு வந்தோம்.உள்ளே சென்று ஏர்போர்ட் மானஜெரை
பார்த்து விஷயத்தை சொன்னோம் .மனிதர் பொறுமையாக
எல்லாவற்றையும் கேட்டு விட்டு immigrationல் இருப்பவர்கள்
தான் எதுவும் செய்ய முடியும் என்று கூறி , அவர்கள் போன்
நம்பர் கொடுத்தார்.அந்த நம்பரில் கூப்பிட்டால்,இந்த தவறு
நடந்தது வேறு ஷிபிட்டில்,அதனால் நான் எதுவும் செய்ய முடியாது
என்று சொல்லி ,departure இல் இருக்கும் immigration officer
உடன் பேசுங்கள் என்று கூறிவிட்டார்.ஏர்போர்ட் மானஜெர் உடனே
அந்த immigration officer உடன் பேச நம்பர் போட்டு கொடுத்தார்.
(ஏர்போர்ட் மானஜெர் இல்லாவிட்டால் எங்களுக்கு சங்கு தான் :-)).
அந்த ஆபிசர் என்னிடம் இதை ஏன் இரண்டு நாட்கள் பார்க்கவில்லை
என்று கடிந்து கொண்டார்.ஏதோ காரணம் சொல்லி அவரை
சமாதனம் செய்தேன்.ஏர்போர்ட் மானஜெர் உடனே என் மனைவியையும்
Jet Airways Staffயையும்,immigration ஆபீசரிடம் கூட்டி கொண்டு
சென்றார்.ஆனால் உள்ளே இருந்த செக்யூரிட்டி என் மனைவியை
விட முடியாது என்று கூற , ஏர்போர்ட் மானஜெர் அவரிடம் பேசி
என் மனைவியும் Jet Airways Staffயையும் உள்ளே அனுப்பி வைத்தார்.
அங்கு போனதும் immigration ஆபிசர் என் மனைவியிடம் உங்களை
யார் வெளியில் விட்டார்கள், எப்படி stamp இல்லாமல் வந்தீர்கள்
என்று கேட்க,என் தர்மபத்தினிக்கு உடல் வியர்த்து விட்டது :-)
பின்னர் Passenger list செக் செய்து பாஸ்போர்டில் "This passenger
has arrived on 14-Aug-08 by Aircraft xx as per our records"
என்று எழுதி கைஎழுத்து போட்டு கொடுத்தார்.

இதனால் சகலமானவர்களுக்கும் என்ன சொல்கிறேன் என்றால்,
நம்ம ஊருக்கு வந்து விட்டோம் என்று சற்று அலட்சியமாக
இல்லாமல் எல்லாவற்றையும் சரி பார்த்த பின்னரே counter
விட்டு நகரவும்.இல்லாவிட்டால் மிகவும் கஷ்டம்.

எங்களுக்கு பேருதவி செய்த அந்த மானஜெர் பல்லாண்டு வாழ்க.

இதையும் படியுங்கள்.....(இது கதையல்ல உண்மை...)

நான் வெளியில் என் மனைவிக்காக காத்திருந்த போது, ஒரு தம்பதி
தங்கள் குழந்தையுடன் வந்தனர். அவர்கள் செக்யூரிட்டி இடம்
சொன்னதை கேட்டதும் எனக்கு தலை சுற்றியது.......

அவர் சொன்னது.. ஐயா நானும் என் மனைவியும் குழந்தையுடன்
சிங்கபூரில் இருந்து இன்று காலை வந்தோம் ... வீட்டிற்கு
சென்று பார்த்தால் என் குழந்தையின் பாஸ்போர்ட்டில்
Arrival stamp இல்லை...


எனக்கு வடிவேலு சொல்லும் கிளம்பிட்டாங்கய்யா ஞாபகம் வந்தது....

Saturday, August 16, 2008

சென்னையில்..

சென்னையில் இருக்கிறேன்..
will be back soon with an very important information for
all travellers regarding immigration and passport.

Monday, August 11, 2008

சொர்க்கமே என்றாலும் ....

சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? சத்தியமாக வராது!!!
என்னடா இவன் திரும்ப பொலம்பரான்னு யோசிக்கறீங்க இல்ல?
நான் என்ன சொல்லவறேன்னா...அது வந்து....வந்து....
சரி என்னை திட்டாதீங்க.... சொல்லிடறேன்....

நான் ஆக் 13 தேதி .....சென்னைக்கு கிளம்பறேன்....
ஒரு வழியா இங்க வேலை முடிஞ்சு நம்மூருக்கு கிளம்பரோம்னதும்
ஏதோ பெருசா சாதிச்ச ஒரு பீலிங்க்ஸ்....
இத்தனை நாளா இழந்த ஏதோ கிடைக்க போகுதுன்னு ஒரு சந்தோஷம்..


"There are somethings that money cannot buy" அப்படின்னு
Master card விளம்பரத்துல வருமே , அதுல இது மாதிரி சந்தோஷம் முக்கியமானது....

Thursday, August 7, 2008

நாங்களும் படம் பாத்தாச்சு...

குசேலன் படம் பாத்தாச்சு...

ரஜினி ஒருபுறம் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டது/வருத்தம்
தெரிவித்தது அவர்களும் படம் பார்த்து சாவட்டும் என்பதற்காக
என்று நினைக்கிறேன்...

எனக்கு ரஜினி பிடிக்கும்,கேஷவ் ரஜினியின் மிக பெரிய!!! விசிறி
என்பதை சொல்லி இருக்கிறேன் அவன் படம் பார்த்துவிட்டு கேட்டது....

அப்பா, நீ இது ரஜினி படம்னு எதுக்கு பொய் சொன்ன?

Wednesday, August 6, 2008

நடப்பது நடந்தே தீரும்

நான் முன்பெல்லாம் சின்ன விஷயத்திற்கு கூட கவலை படுவேன்.
ஏதேனும் பிரச்சனை என்றால் மிகவும் வருந்துவேன்.இப்பொழுதெல்லாம்
மாறிவிட்டேன். நான் சொல்வது என்னவென்றால் ஏதேனும்
பிரச்சனை என்றால் , உங்களால் அதை தீர்க்க முடியுமா என்று
பாருங்கள்.உங்களால் தீர்க்க முடியாத பட்சத்தில் அதை நினைத்தே
கவலை பட்டு கொண்டிருக்காமல் , நடப்பது நடந்தே தீரும்,நம்மால்
எதுவும் செய்ய முடியாது என்று அதை ஏற்று கொள்ளுங்கள்.நான் இப்படி
சொல்வதால் ஏதோ வருவதை எல்லாம் ஒப்புக்கொள்ள சொல்வதாக
நினைக்க வேண்டாம்.அது யாராலும் முடியாது.அதை நினைத்து
உடலை/மனதை வருத்தி BP,Depression போன்ற உடல் நல குறைவு
ஏற்படாமல் இருக்க தவிர்ப்போம்.