Thursday, July 24, 2008

காதலிக்கு திருமணம்

இன்னொரு சின்ன முயற்சி...


உயிரே,
கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம்,
கடற்கரைக்கு ஒன்றாக சென்றோம்,
திரைப்படத்திற்கு ஒன்றாக சென்றோம்,
உணவகத்துக்கு ஒன்றாக சென்றோம்,
ஆனால் திருமணத்திற்கு, உன் திருமணத்திற்கு
என்னை விட்டு தனியே சென்றுவிட்டாயே...

9 comments:

Vijay said...

அய்ய கார்டு கொடுத்தான் வந்து துன்னணுமா? :)

Just joking.

Divyapriya said...

கவிதைல ஒரு முரளி நெடி அடிக்குதே...வீட்ல கவிதைய காட்டிடீங்களா? ;-) கவித சூப்பர்...

முகுந்தன் said...

//அய்ய கார்டு கொடுத்தான் வந்து துன்னணுமா? :)

Just joking.//

துன்னரதுன்னா கார்டு கீர்ட் எதுவும் வேண்டாம்.

முகுந்தன் said...

//கவித சூப்பர்...//

நன்றி

முகுந்தன் said...

ஐந்து வருடங்களுக்கு முன் நண்பனுக்கு இதுபோல நடந்தது...
அபூர்வ சகோதரர்களில்
வருவது போல :-(

Divya said...

கவிதை முயற்சி சூப்பர்...!!

Divya said...

\\ முகுந்தன் said...
ஐந்து வருடங்களுக்கு முன் நண்பனுக்கு இதுபோல நடந்தது...
அபூர்வ சகோதரர்களில்
வருவது போல :-(\\

அதன் பாதிப்பில் உருவான கவிதையா இது.....??

:(((

முகுந்தன் said...

//கவிதை முயற்சி சூப்பர்...!!//

நன்றி திவ்யா

//அதன் பாதிப்பில் உருவான கவிதையா இது.....??//

அந்த வருத்தம் ரொம்ப நாட்களுக்கு இருந்தது, அந்த பெண்ணிற்காக அவன் மதம்
மாறவும் முடிவு செய்து சர்ச்சில் ஏற்பாடுகளும் செய்திருந்தான்.
ஆனால் அதற்கு முன் அந்த பெண் அவர்கள் வீட்டில் முடிவு செய்த ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டாள். அவனை திருமணத்தன்று சர்ச்சிற்கு வர சொல்லி ,அங்கே தான் அவனுக்கு விஷயம் தெரியும். ஆனால் அவன் அமைதியாக திரும்பி விட்டான். சில நாட்கள் பித்து பிடித்தாற்போல் இருந்து பின்னர் அதிலிருந்து மீண்டான்.

இப்பொழுது நல்ல வேலையில் லண்டனில் இருக்கிறான் :-)
மறக்க முடியாத சம்பவம் அது.

anujanya said...

முகுந்த்,

கவிதை எழுதத் துவங்கியதில் மகிழ்ச்சி. என்னடா சோகக் கவிதை என்று நினைத்தேன். பின்னோட்டத்தில் நண்பனின் உண்மைக் கதை என்றறிந்து மனம் கனத்தது. நல்ல முயற்சி. மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா