Thursday, July 24, 2008

மறப்போம் மன்னிப்போம்

ஆயிரம் கவலைகள் இருந்தாலும்
உன் முகம் பார்த்தால் பறந்து போகும்
எவ்வளவு கோபம் வந்தாலும்
உன் புன்சிரிப்பு எதையும் மறக்க வைக்கும்

எவ்வளவு திட்டினாலும், என்னதான் அடித்தாலும்
அடுத்த நிமிடமே வந்து கட்டிக்கொண்டு
என் முகத்தில் முத்தமிட்டு
நான் அப்பா செல்லம் என்று சொல்லும்
உன்னிடம் கற்று கொள்ள வேண்டுமடா
மறப்பதற்கும் மன்னிப்பதற்கும்....

15 comments:

Ramya Ramani said...

முகுந்தன்..கலக்கரீங்க...ஹிம்ம்ம்ம் எங்க அப்பா நியாபகம் வந்திருச்சு....

முகுந்தன் said...

உங்கள் பாராட்டுக்கு ரொம்ப
நன்றி ரம்யா...

Vijay said...

Really Amazing :)

Vijay said...

kathai kelu part - 3 released

Divyapriya said...

i am able to imagine the scene from ur lines...just awesome....

முகுந்தன் said...

//Really Amazing :)//

நன்றி கதாசிரியரே ...

முகுந்தன் said...

//i am able to imagine the scene from ur lines...just awesome...
//

Thanks for ur comments.

Divya said...

கலக்கல்ஸ் முகுந்தன்.......ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க!!

முகுந்தன் said...

ரொம்ப நன்றி திவ்யா .
யதார்த்தங்களை கவிதை (மாதிரி) வடிவில் எழுத முயற்சி செய்துள்ளேன்.

Anonymous said...

நல்லாயிருக்கு முகுந்தன்.
நாம் அவர்களிடமிருந்து படிக்க நிறைய இருக்கின்றது.

முகுந்தன் said...

நன்றி குந்தவை. நீங்கள் சொல்வது ரொம்ப சரி.

Raghav said...

//நான் அப்பா செல்லம் என்று சொல்லும்
உன்னிடம் கற்று கொள்ள வேண்டுமடா//

தகப்பனுக்கு பாடம் சொன்ன, அழகன் முருகன் தான் ஞாபகத்துக்கு வர்றார்.
"கண்ணன் கேஷவன்" என்று தான் அழைக்கத் தோன்றுகிறது.

உங்க பதிவுகளை எல்லாம் படிக்கனும். படிச்சுட்டு வரேன்.

anujanya said...

'தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்'

இப்படி ஒரு கவிதை ஹரன் பிரசன்னா எழுதி இருக்கிறார். குழந்தைகள் கடவுளின் தூதர்கள் அல்லது குட்டிக் கடவுள்கள். நாம்தான் தவறான values கற்பித்து கேவலம் அவர்களை மனிதர்களாக மாற்றிவிடுகிறோம். நல்ல கருத்து. மேலும் எழுதுங்கள் முகுந்த்.

அனுஜன்யா

முகுந்தன் said...

//தகப்பனுக்கு பாடம் சொன்ன, அழகன் முருகன் தான் ஞாபகத்துக்கு வர்றார்.
"கண்ணன் கேஷவன்" என்று தான் அழைக்கத் தோன்றுகிறது.
//

ரொம்ப நன்றி ராகவ்.

முகுந்தன் said...

//நாம்தான் தவறான values கற்பித்து கேவலம் அவர்களை மனிதர்களாக மாற்றிவிடுகிறோம். //

ரொம்ப நல்லா சொன்னீங்க.

//நல்ல கருத்து. மேலும் எழுதுங்கள் முகுந்த். //

மிக்க நன்றி அனுஜன்யா ...