Thursday, July 31, 2008

பந்தயம்- சின்ன கதை

அசோக்கும்,குமாரும் பால்ய நண்பர்கள்.இருவரும் வசதியானவர்கள்.
ஒரு நாள் அவர்கள் இருவரும் தொலைக்காட்சியில் இந்தியா,இலங்கை
இடையே நடைபெற்ற கிரிக்கெட் மேட்ச் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது குமாரிடம் அசோக் ,இன்று இந்தியா வெற்றி என்று சொல்ல ,
அதற்கு குமார் இல்லடா அசோக் ,இலங்கை விளையாடறத பாத்தா
அவங்க தான் ஜெயிப்பங்கனு தோணுது என்றான்.

இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.இருவரும் சேர்ந்து
ஒரு முடிவுக்கு வந்தனர்.இந்தியா தோற்றால் குமாருக்கு
அசோக் விலை உயர்ந்த கார் வாங்கி தரவேண்டும் என்றும்,
இலங்கை தோற்றால் அசோக்கிற்கு குமார் உலகை சுற்றி
காண்பிக்க வேண்டும் என்றும் முடிவானது.

போட்டி விருவிருப்பாக நடந்தது. இலங்கை 50 ஓவர்களில்
350 ரன்கள் எடுத்தது.இரண்டாவதாக ஆட வந்த
இந்திய அணியில் சச்சின் பொறுமையாக ஆட,
மறுபுறம் சேவாக் விளாசினார்.சிறிது நேரத்திற்கு பின்
சேவாக் ஆட்டமிழக்க ,ஒவ்வொரு விக்கெட்டாக விழ ஆரம்பித்தது .

கடைசி ஓவரில் இந்தியா 330 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருந்தது.
இன்னும் 6 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க வேண்டும்,முரளிதரன்
பந்து வீச சச்சின் மளமளவென்று 5 பந்துகளை பௌண்டரிக்கு
விரட்டினார். கடைசி பந்தையும் சச்சின் பௌண்டரிக்கு விரட்டினார்.
மைதானம் எங்கும் கரவொலி, சிரிப்பொலி,ஆட்டம்,பாட்டம்.

குமார் அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்தான்,பந்தயத்தில்
தோற்று விட்டோமே என்ற வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது .
இதை கவனித்த அசோக்,டேய் குமார் கவலை படாதே டா.
நானே உனக்கு உலகை சுற்றி காண்பிக்கறேன் என்று சொல்லி
அவனையும் அழைத்து கொண்டு கிளம்பினான்.அசோக் தன் வீட்டில்
இருந்த உலக உருண்டையை சுற்றி காண்பிக்க ,அதை சந்தோஷமாக
பார்த்து மகிழ்ந்தனர் நான்காவது படிக்கும் குமாரும்,அசோக்கும்.

17 comments:

Divyapriya said...

ஜாலி கதை…கலக்குங்க :))

முகுந்தன் said...

//ஜாலி கதை…கலக்குங்க :))//

நன்றி Divyapriya

Vijay said...

More than the story I liked the match :)
intha maathiri kathaikaLil thaan India Sri Lanka'vai thORkadikka mudiyum :(

முகுந்தன் said...

//intha maathiri kathaikaLil thaan India Sri Lanka'vai thORkadikka mudiyum :(//

Vijay, you are right.

தாரணி பிரியா said...

விடுங்க முகுந்தன் & விஜய் ‍ 2 வது மேட்சுல நிஜமாவே நாம ஜெயிச்சுடுவோம் பாருங்க‌

ஆனா அதுக்கும் அடுத்த மேட்சுல தோத்திடுவோம்.

ஒரு வெற்றி ஒரு தோல்வி இதுதான் நம்ம இந்திய டீமோட தாரக மந்திரம்

முகுந்தன் said...

தாரணி பிரியா said...
//ஒரு வெற்றி ஒரு தோல்வி இதுதான் நம்ம இந்திய டீமோட தாரக மந்திரம்//

சிறு திருத்தம் , ஒரு வெற்றி பல தோல்விகள் ,
இதுதான் நம்ம இந்திய டீமோட தாரக மந்திரம்..

மேட்ச் இருக்கட்டும் ,
கதை எப்படி?
இப்போ படிச்சா
எனக்கு என்னமோ குமுதம் பாதிப்பு இருக்குன்னு தோனுது

Raghav said...

நல்ல கதை முகுந்தன். எனக்கும் குமுதத்தில் வரும் ஒரு பக்கக் கதை போன்றே உள்ளது. குமுதத்துக்கே அனுப்பி வைங்களேன்.

முகுந்தன் said...

//நல்ல கதை முகுந்தன். //

Thanks Raghav

தாரணி பிரியா said...

ஜாலி கதைதான் முகுந்தன்,

அப்புறம் இந்த மாதிரி ஒரு பக்க அரை பக்க கதைன்னா அதில கொஞ்சமாவது விகடன் , குமுதம் பாதிப்பு இருக்கும்.

குமுதம் புக்ல பப்ளிஷ் செய்யற அளவுக்கு நம்மளும் எழுதறோமுன்னு சந்தோஷம் படுங்க‌

முகுந்தன் said...

//ஜாலி கதைதான் முகுந்தன்,//


நன்றி தாரணி பிரியா

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

ஜியா said...

:))

முகுந்தன் said...

விக்கி,

ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள் . நன்றி

முகுந்தன் said...

ஜி,
உங்கள் முதல் வருகைக்கு நன்றி...

anujanya said...

ஜாலி கதைதான். கொஞ்சம் முயன்றால், குமுதத்தின் ஒரு,அரை,கால், அரைக்கால் பக்கக் கதைகளைவிட பன்மடங்கு நன்றாக பதிவர்கள் எல்லாருமே எழுதலாம். மேலும் எழுதுங்கள் முகுந்த்.

அனுஜன்யா

anujanya said...

ஜாலி கதைதான். கொஞ்சம் முயன்றால், குமுதத்தின் ஒரு,அரை,கால், அரைக்கால் பக்கக் கதைகளைவிட பன்மடங்கு நன்றாக பதிவர்கள் எல்லாருமே எழுதலாம். மேலும் எழுதுங்கள் முகுந்த்.

அனுஜன்யா

Karthik said...

நான் ஏதோ Sci-Fic போலன்னு படித்தேன்.
:)