Wednesday, July 23, 2008

தமாசு,தமாசு

**************************************************

ஒரு அரசியல்வாதி,ஒரு திருடன்,ஒரு ப்ரோக்ராம்மர் இறந்து
நரகத்துக்கு போகிறார்கள்.அவர்களுக்கு பூலோகத்தில் உள்ள
தங்கள் நண்பர்களுடன் பேச வேண்டும் என்று ஆசை.
அங்கிருக்கும் தொலைபேசியில் முதலில் அரசியல்வாதி
தன் கட்சி தலைவருடன் பத்து நிமிடம் பேசுகிறார் .
ரூபாய் இரண்டு லட்சம் பில் வருகிறது.
அடுத்து திருடன் தன் நண்பனுடன் ஐந்து நிமிடம் பேசுகிறான் .
ரூபாய் ஒரு லட்சம் பில் வருகிறது.
அடுத்து ப்ரோக்ராம்மர் தன் நண்பனுடன் ஐந்து மணி நேரம் பேசுகிறான் .
புதிய சாப்ட்வேர் பற்றி,வேலை வாய்ப்புகள் பற்றி, மேலும் பல விஷயங்கள்.
பில் எதுவும் கட்ட வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்.
ஏன் என்று கேட்டதற்கு நரகத்திலிருந்து நரகத்திற்கு பேச
கட்டணம் இல்லை என்று வருகிறது பதில்.

**************************************************
முதலாளி : போய் செடிக்கு தண்ணி விட்டுட்டு வா.
வேலையாள் : மழை பேயுதுங்களே.
முதலாளி : அதனால என்ன குடை எடுத்துட்டு போ....

**************************************************

ஆசிரியர்: எதுக்கு தம்பி வெளில உக்காந்து எக்ஸாம் எழுதற ?

மாணவன் : இது entrance exam தானே சார்

**************************************************

கணவன் : எதுக்கு அந்த ஆரஞ்சு ஜூஸ் டப்பாவையே பாத்துட்டு இருக்க?

மனைவி: அதுல concentrateனு எழுதி இருக்குங்க.

**************************************************

டாக்டர் ; நீங்க கண்ணாடி போட்டுக்கணும் , அப்போதான் கண்ணு நல்லா தெரியும் .

நோயாளி : டாக்டர் , கண்ணாடி போட்டா நல்லா எழுத படிக்க முடியுமா?

டாக்டர்: முடியுமே அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு ?

நோயாளி : எனக்கு எழுத படிக்க தெரியாது , அதான் கேட்டேன்

டாக்டர்: ஐயோ....

**************************************************

ராமு : என்னோட கம்ப்யூட்டர்ல 1GB hard hisk இருக்கு நான்
எவ்வளோ சுலபமா தூக்கறேன் ,ஆனா நீ 500MB hard disk
இருக்கற கம்ப்யூட்டர் தூக்க இவ்வளோ கஷ்டப்படற?

சோமு : உன் Hard disk empty, என் disk முழுக்க data இருக்கு...

**************************************************

வாண்டு 1: ஒரு பூனை ஒரு சாக்லேட் பாதி சாப்பிட்டு மீதி மண்ணுல
பொதச்சு வெச்சுடுது,அது என்ன சாக்லேட் சொல்லு?

வாண்டு 2: தெரியலையே ...

வாண்டு 1: கேட் பரிஸ் சாக்லேட்.

வாண்டு 2: ???

**************************************************

A villager had called an Englishman for lunch.
Seeing curd the guest asked how is it made?
Since he did not know proper English, He said,
"Milk sleeping in night, morning becomes tight."

**************************************************

5 comments:

Vijay said...

\\Milk sleeping in night, morning becomes tight\\
இது என்ன தசாவதாரம் பார்த்த எம்.எஸ்.பாஸ்கர் எஃபெக்டா??
ROTFL :)

Vijay said...

\\வாண்டு 1: கேட் பரிஸ் சாக்லேட்.\\
நிஜமாகவே வாண்டுகள் தான் இந்த மாதிரி ஜோக் அடிக்கும்.

நானும் ஒரு மொக்கை சொல்லறேன்,

ஆசிரியர்: முட்டை போடும் மூன்று உயிரினம் பெயர் சொல்லு.
மாணவன்: கோழி வாத்து வாத்தியார் :)

முகுந்தன் said...

//ஆசிரியர்: முட்டை போடும் மூன்று உயிரினம் பெயர் சொல்லு.
மாணவன்: கோழி வாத்து வாத்தியார் :)//


இதுல வாத்தியார் தான் நெறைய முட்டை போடுவார் :-)

anujanya said...

எல்லாம் கலக்கல்ஸ். software அவ்ளோவ் கஷ்டமாவா இருக்கு!

அனுஜன்யா

Divya said...

சிரிக்க வைத்தது ஜோக்ஸ்!!