Tuesday, July 8, 2008

சம்மர் ஆரம்பித்துவிட்டது....

மாட்ரிட்ல சம்மர் ஆரம்பித்துவிட்டது. அதிக பட்ச வெப்பநிலை 38 டிகிரி
(ஒரு சில நாட்கள் மட்டுமே), மீதி நாட்கள் 33-34 இருக்கிறது.
எல்லா வருடமும் இப்படித்தான் இருக்குமாம் .இதற்கே இவர்களால்
தாங்க முடியவில்லை. வேலை நேரம் இரண்டு மாதங்களுக்கு மாற்றி
அமைக்கபட்டு விட்டது.எல்லோரும் காலை எட்டு மணி முதல்
மாலை 3 மணி வரையிலேயே வேலை செய்கிறார்கள்.

நேற்று ஒருவர் என்னிடம் நீங்கள் எப்படி இந்த வெயிலை தாங்குகிறீர்கள்?
என்னால் முடியவில்லை என்று சொன்னார். நான் சிரித்து கொண்டே
இதெல்லாம் சென்னை வெயிலை பார்த்தல் ஜுஜுபீ என்று சொன்னதும்
அவர் முகம் போனதை பார்க்க வேண்டுமே.அவர் மேலும் கூறுகையில்
என்னால முடியலன்னு பொலம்பி விட்டு swimming pool
போக வேண்டும்,தண்ணீரில் (அட H2O தாங்க) மிதக்க வேண்டும்
என்று சொன்னார்.நான் மனதிற்குள் ,எங்க ஊரில் எல்லாம் எருமை (!!)
தான் தண்ணீரில் மிதக்கும் என்று நினைத்து கொண்டேன் :-))

பாதி ஊர் காலியாகி விட்டது, முக்கால்வாசி பேர் லீவுக்கு வெளியூர்
போய் விட்டனர் (அனுபவிக்கறாங்க!!).மொத்தத்தில்
ஜீன்ஸ் பட பாட்டு மாதிரி நடந்து கொள்கிறார்கள்
"சனி,ஞாயிறு காலம் சொன்னது என்னது,
மெஷின் எல்லாம் மனிதராக சொன்னது"
ஆனால் சில சமயம் வார நாட்களையே இப்படி ஆக்கி விடுகிறார்கள்.

இந்தியர்களும் இது போல (இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை)
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.ஏதோ நாமால் முடிந்தது அருகில்
இருக்கும் நம் சொந்தகாரர்கள் வீட்டிற்கோ அல்லது வேறு இடத்திற்கோ
சென்று சில நாட்கள் எல்லா வற்றையும் மறந்து நிம்மதியாக
இருந்துவிட்டு வரவேண்டும் .

அப்புறம் தான் இருக்கவே இருக்கிறது வேலை,பள்ளி,கல்லூரி,சமையலறை...

8 comments:

கார்த்திகா said...

நீங்க கூட சென்னைக்கு வர ஆசைப்படறீங்க-னு நினைக்கறேன்.

முகுந்தன் said...

அந்த ஆசை எப்பவுமே எனக்கு உண்டு :-))
நான் என்ன நினைக்கிறேன்னா எல்லாருமே நமக்காகவே
சில நாட்கள் எடுத்து கொண்டு எதை பற்றியும்
கவலை இல்லாமல் இருந்து விட்டு வர வேண்டும்.
இதற்காக வெளி நாட்டிற்கு அல்லது மலை பிரதேசதிற்கோ
போக வேண்டும் என்பது இல்லை.அவரவர் வசதிக்கேற்ப
எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

Vijay said...

\\எங்க ஊரில் எல்லாம் எருமை (!!)
தான் தண்ணீரில் மிதக்கும்\\
எனக்கு என் சிறு வயது அனுபவங்கள் தான் ஞாபகம் வருது. கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போயிடுவோம். நேயமுகில் கார்த்திகா இருக்கும் அம்பைக்கு முந்தின ஊர். காலையிலே ஆற்றங்கரைக்கு போனால், பதியம் தான் வீடு திரும்புவோம். அதுக்கு என் அம்மா சொல்லுவாள், "எருமை மாடு தான் இவ்வளவு நேரம் தண்ணீரிலே ஊரும்" என்று :)

முகுந்தன் said...

எனக்கு நீச்சல் தெரியாது, ஆனால் தண்ணீரில் ரொம்ப நேரம் இருக்க பிடிக்கும்.நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னையில்.ஆனால் என் மாமா
திருச்சியில் இருந்தபோது அவர் வீட்டிற்கு செல்வோம். அப்பொழுது காவிரியில்
ஓரிரு முறை இப்படி மிதந்திருக்கிறேன். அது ஒரு சுகம்.

Ramya Ramani said...

\\நான் சிரித்து கொண்டே
இதெல்லாம் சென்னை வெயிலை பார்த்தல் ஜுஜுபீ என்று சொன்னதும்
அவர் முகம் போனதை பார்க்க வேண்டுமே.அவர் மேலும் கூறுகையில்
என்னால முடியலன்னு பொலம்பி விட்டு swimming pool
போக வேண்டும்,தண்ணீரில் (அட H2O தாங்க) மிதக்க வேண்டும்
என்று சொன்னார்.நான் மனதிற்குள் ,எங்க ஊரில் எல்லாம் எருமை (!!)
தான் தண்ணீரில் மிதக்கும் என்று நினைத்து கொண்டேன் :-))
\\

ஆமாங்க முகுந்தன். சென்னைல வெயில் ரொம்ப ஜாஸ்தி ... ஆனாலும் நம்ம ஊர போல இருக்குமா?? சின்ன வயசுல திருச்சிக்கு போவோம்..அங்கே வீட்டு கிட்ட இருக்கற காவேரில போயிட்டு நல்லா குளிச்சிட்டு,துணி எல்லாம் துவச்சு அது காயரவரைக்கும் கதை பேசிக்கிடே இருந்தது,,இதெல்லாம் இப்ப நினைக்கும் போது இனிமையா இருக்கு..

முகுந்தன் said...

//அங்கே வீட்டு கிட்ட இருக்கற காவேரில போயிட்டு நல்லா குளிச்சிட்டு,துணி எல்லாம் துவச்சு அது காயரவரைக்கும் கதை பேசிக்கிடே இருந்தது,,இதெல்லாம் இப்ப நினைக்கும் போது இனிமையா இருக்கு..
//

ரம்யா,
நான் ரொம்பவே இதை எல்லாம் மிஸ் பண்ணுகிறேன்.
இந்தகால குழந்தைகளுக்கு இதெல்லாம் புது அனுபவமாக இருக்கும்.2 - 3 நாட்கள் இதுபோல் ஏதாவது ஒரு இடத்திற்கு போகவேண்டும் என்று இருக்கிறது.
பார்ப்போம் ....

இளையராஜா பாடிய
"சொர்கமே என்றாலும்"
தான் காதில் ஒலிக்கிறது

anujanya said...

ஹாய் முகுந்த்,

சாரி மேன், எப்போவும் லேட்டாதான் வரேன். மலரும், மிதக்கும் நினைவுகள்! You are right. Work-Life balance ought to be there. By the way, did you ever get to meet Vishy?

அனுஜன்யா

முகுந்தன் said...

அனுஜன்யா,

நான் இங்கு வந்ததும் சிலரை கேட்டு பார்த்தேன், யாருக்கும் including Indians) Vishy இங்கு இருப்பதாகவே தெரியவில்லை :))