சமீபத்தில் ஏற்பட்ட சீன பூகம்பத்தை பற்றி சில செய்திகள் நெஞ்சை உருக்கியது.அதில் ஒன்று,
சுமார் 3-4 மாதங்கள் இருக்கும் ஒரு குழந்தை 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கபட்டது.அதன் தாய் குழந்தைக்கு எதுவும் ஆகாமல் இருக்க தனது தலையையும் கைகளையும் நிலத்தில் பட்தித்து, அவன் மீது எதுவும் விழாமல் பார்த்து கொண்டு அதே நேரம் குழந்தைக்கு பால் கொடுத்தாளாம். அவள் இறந்து விட்டாள். அவள் சட்டைபையில் இருந்த mobileஇல் இருந்த வாசகம் ...
"அன்பு மகனே, ஒருவேளை நீ பிழைத்தால் உன் தாய் உன்னை என்றுமே நேசிப்பவள் என்பதை மறந்துவிடாதே"
என் கண்கள் நனைந்துவிட்டது.
உன்னிடம் என்ன இல்லை என்றால் எதுவுமே இல்லை, என்ன இருக்கிறது என்றால் எல்லாமே இருக்கிறது.
Thursday, May 29, 2008
Friday, May 23, 2008
பக்தனுக்காக காத்திருந்த கடவுள்
கொஞ்ச நாளைக்கு முன் ஆந்த்ராவில் இருக்கும் அஹோபிலம் போயிருந்தோம்.கரடு முரடான மலை.அதுல 9 நரசிம்மர் கோயில் இருக்கு. அந்த இடத்தில் தான் நரசிம்மவதாரம் நடந்ததாக ஐதீகம். கோவிலுக்கு போய்ட்டு வரும்போது ஒரு வயசான அம்மாவாய் பாத்தோம். அவங்க அந்த கோயில பத்தி ஒரு விஷயம் சொன்னாங்க. சாதரணமா பக்தன் தான் கடவுளுக்காக காத்து இருப்பான், ஆனா இந்த இடத்தில மகா விஷ்ணுவே பக்தன் ப்ரகாலத்கனுக்காக காத்து இருந்ததாக சொன்னாங்க. அதாவது, ப்ரகாலதன் அவங்க அப்பா கிட்ட எந்த தூன காட்டுவனோனு எல்லா இடத்துலயும் காதிருந்தராம். ஏன்னா அவன் ஒரு எடத்த காட்டி அங்க அவர் இல்லன்னா தன் பக்தன் சொன்னது பொய்யாக கூடாதுன்னு நெனச்சு எல்லா இடத்திலும் இருந்தாராம்.உண்மையான பக்தினா இது தானோ?
Thursday, May 22, 2008
Wednesday, May 7, 2008
சும்மா
நண்பன் ஒருவனின் வலை பக்கத்தை பார்த்தேன் http://iblogblahblah.blogspot.com/
நாமும் எதாவது எழுதலாமே என்று விளையாட்டாக ஆரம்பித்தது தான் இந்த பக்கம்.
மார்ச்சில் இருந்து மேட்ரிடில்(spain) வசிக்கிறோம். சென்னையிலேயே மனம் உள்ளது. இளையராஜா பாடியது சத்தியம். சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? சத்தியமாக வராது!!!
இங்கு இந்தியர்களே இல்லையோ என்று நினைக்க தோன்றுகிறது. ஒரு சில இந்தியர்களே உள்ளனர். இங்கு உள்ள மக்களுக்கு ஆங்கிலமே தெரியாது.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஸ்பானிஷ் மட்டுமே.நாம் எதாவது கேட்டால், நீ ஸ்பானிஷ் கற்றுக்கொள் மிகவும் அவசியம் என்று சொல்கின்றனர்.
அசைவ பிரியர்களுக்கான ஊர் இது. என்னை போன்றவர்கள் ரொம்ப கஷ்ட படுவார்கள்.இங்கு ஒரு சில இந்திய கடைகள் உள்ளன.
டிவியிலும் ஸ்பானிஷ் மட்டுமே. ஒரு சேனல் CNN . மீதி அனைத்தும் ஸ்பானிஷ்.இன்டர்நெட்டில் தமிழ் படங்கள் பார்பதோடு சரி.
ஒரு இந்திய கோயில் உள்ளது.ஞாயிற்று கிழமை அங்கு போயிருந்தோம். அங்கு சில இந்தியர்களை சந்தித்தேன்.அதில் ஒரு தமிழரை பார்த்தும் அவ்வளவு சந்தோஷம். இன்னும் சில தமிழர்கள்/இந்தியர்கள் கோவிலுக்கு வருவார்களாம்.சனிக்கிழமைகளில் cricket விளையாடுவதாகவும் கேள்விபட்டேன்.அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
தொடருவேன்..........

Subscribe to:
Posts (Atom)