நண்பர் விஜய் என்னைப்பற்றி எழுத அழைத்திருந்தார்...
என்னைப் பற்றின சில கேள்விகளும், அதன் பதில்களும்.....
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கு இந்த பெயரை வைத்தது என் பெரியப்பா.
எனக்கு இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சினிமாவில் ரொம்ப நெகிழ்ச்சியான காட்சிகள் வந்தாலே என்னை அறியாமல்
அழுதுவிடுவேன். கடைசியாக அழுதது அபியும் நானும் படத்தில்
அபி என் அம்மா சார் என்று குமாரவேல் சொல்லும் காட்சி..
இதை படித்து ரொம்ப கண் கலங்கிவிட்டேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என் signature எனக்கு பிடிக்காது அதை மாற்ற முயன்றேன் . டாகுமென்ட்ஸ்,பாஸ்போர்ட்,வங்கி என்று எல்லாவற்றிலும்
அதை உபயோகிதிருப்பதால் அதை மாற்ற சிரமமாக இருக்கிறது.
நான் எழுதும் கைஎழுத்து எனக்கு பிடிக்கும்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார், உருளைக்கிழங்கு ,தயிர் சாதம்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஆமாம் , ஒருவரை பார்த்து சில நிமிடங்களிலேயே அவருடன்
நட்பாகப் பேச முடியும். அவர் எப்படி பழகுகிறார் என்பதை பொருத்து நட்பு தொடரும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில். அதைவிட அதிகம் அமைதியான நீர்நிலையில் நீண்ட நேரம்
குளிக்க பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆண்களிடம் மீசை.பெண்களிடம் அவர்கள் தலைமுடி.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று நம்புவது.
பிடிக்காதது ரொம்ப கோபப்படுவது .ஆனால் அது வந்து பத்து நிமிடங்களில் பறந்துவிடும்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இது தான் வம்பான கேள்வி, எப்போதும் சமையல் அறையை சுத்த படுத்துவது.
பாத்திரம் தேய்ப்பது.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பாட்டி,எனக்கு வேலை கிடைத்து நான் நன்றாக இருப்பேன் என்று எப்போதும் சொல்வாள்.முதல் வேலை கிடைப்பதற்கு முன்பே போய் சேர்ந்துவிட்டாள்.
என் அப்பா,அம்மா சென்னையில் , நான் இங்கு சிங்கபூரில்.
அதுவும் கஷ்டமாக தான் இருக்கிறது.எனக்கு எப்போதும் அவர்களை
விட்டு இருக்க பிடிக்காது.நான் என் மனைவியை அடிக்கடி கேக்கும் கேள்வி
நீ உன் அப்பா,அம்மாவை விட்டு விட்டு எப்படி கல்யாணம் ஆன
உடனே எங்களோடு வந்து விட்டாய்?
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை ஷார்ட்ஸ் , கருப்பு பனியன்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அரை என் முன்னூற்று ஐந்தில் கடவுள். sun tv யில்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிங்க்.
14.பிடித்த மணம் ?
சாம்பார் / ரசம் கொதிக்கும் போது வரும் மணம். இந்த மணத்தை முகர்ந்தாலே பசி வந்துடும்.மழைக்கு முன்/பின் வரும் மண் வாசமும் பிடிக்கு :)
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஒருவர் ரொம்ப நகைச்சுவையாக எழுதுவார்,
ஒருவர் ரொம்ப அற்புதமான கதைகள் எழுதுவார்.
ஒருவர் ரொம்ப இயல்பாக எழுதுவார்.
ஒருவர் ரொம்ப கலகலன்னு எழுதுவார்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பிரபாகரன் - என் பார்வையில்
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்,முன்பு ரோடில் விளையாடுவேன். இப்போது (எல்லாம் தொப்பை உபயம் )
பற்றி நினைத்தாலே மூச்சு வாங்கிகிறது.
Carromboard
Tennis.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும். ரஜினி,கமல் படங்கள் அனைத்தும் பிடிக்கும்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்.
21.பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம் , அதுவும் அந்த மார்கழி மாதத்தில் இழுத்து போர்த்தி கொண்டு தூங்கும் அதிகாலை தூக்கம் ரொம்ப பிடிக்கும்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
Five point someone.ரொம்ப நாளாக படித்துகொண்டிருக்கிறேன் :(
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ரொம்ப போரடித்து விட்டால் மாற்றிவிடுவேன்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அனைத்து இசை மற்றும் இசை கருவிகளில் வரும் இதமான சத்தம்.
காது ஜவ்வு கிழியற மாதிரி சத்தம், சுத்தமாப் பிடிக்காது.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
Madrid.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அருண் ஐஸ் கிரீம் நடத்திய ஐஸ் கிரீம் மேளாவில் பத்தொன்பது
ஐஸ் கிரீம்கள் இருபது நிமிடங்களில் சாப்பிட்டேன். இப்போது முடியாது :(
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மற்றவர்களை கெடுத்து முன்னுக்கு வருவது.அடுத்தவரை பார்த்து பொறாமை படுவது.
நமக்கு என்ன கிடைக்குமோ அது கண்டிப்பாக கிடைக்கும்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு வரும் கோபம். கோபம் வந்தால், என்ன செய்கிறேன் என்றே தெரியாது.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போக நினைப்பது, இமய மலை. கொடைக்கானல்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எதை பற்றியும் கவலை படாமல் ஒரு குழந்தையை போல்.
ஆனால் முடியவில்லை:(
31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கணவனாக செய்ய விரும்புவது....
என்னால் முடிந்த அளவிற்கு அவள் வேலைகளில் பங்கெடுப்பதற்கு.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
என்ன தான் முட்டி மோதினாலும், உருண்டு புரண்டாலும் நடப்பது தான்
நடக்கும்.....
டிஸ்கி
**********
விஜயிடம் எனக்கு அவருடன் சில ஒற்றுமைகள் இருப்பதாக எழுதி இருந்தேன்.
அதனால் அவர் பற்றி எழுதிய சிலவற்றை அப்படியே விட்டிருக்கிறேன்.
23 comments:
சூப்பர் .....
கார்த்திக் யின் அந்த பதிவை படித்து நானும் கலங்கி விட்டேன்
"பெண்களிடம் அவர்கள் தலைமுடி."
நம்பிட்டேன் சார்
"வெள்ளை ஷார்ட்ஸ் , கருப்பு பனியன்."
நீங்க யூத் ஆ ?? இல்லை அங்கிள் ஆ ??
"அரை என் முன்னூற்று ஐந்தில் கடவுள். sun tv யில்."
நானும் .....
/"பெண்களிடம் அவர்கள் தலைமுடி."
நம்பிட்டேன் சார்
//
நெஜமா தலைமுடியை தான் பார்ப்பேன். அது என்னவோ எனக்கு தலைமுடி மேல் அப்படி ஒரு ஈர்ப்பு.
நீங்க யூத் ஆ ?? இல்லை அங்கிள் ஆ ??
யூத் , அங்கிள் எல்லாம் உடலுக்கு தான் . நான்
மனதளவில் இன்னும் யூத் கூட இல்லை, குழந்தை தான்.
அவ்வவ் ......
:-)
//பெண்களிடம் அவர்கள் தலைமுடி.
ஆகா... நல்லவேளை என் வீட்டுக்காரருக்கு இப்படி ஒரு ரசனை இல்லை.
//யூத் , அங்கிள் எல்லாம் உடலுக்கு தான் . நான்
மனதளவில் இன்னும் யூத் கூட இல்லை, குழந்தை தான்.
அவ்வவ் ......
கொஞ்சம் பெரிய குழந்தை.
ஆஹா முகுந்தன்.. இத்தனை நாளாய் அமைதியா இருந்துட்டீங்களே...
உங்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது..
//பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார், உருளைக்கிழங்கு ,தயிர் சாதம்.
//
நானும் இதே மெனு தான்.. :)
//பெண்களிடம் அவர்கள் தலைமுடி//
ஹி ஹி.. அடியேனும் தான்.. பெண்ணுக்கு அழகே கூந்தல் தான்
haa haa...niraiya vishayam sollitteengale...
//முகுந்தன் said...
நீங்க யூத் ஆ ?? இல்லை அங்கிள் ஆ ??
யூத் , அங்கிள் எல்லாம் உடலுக்கு தான் . நான்
மனதளவில் இன்னும் யூத் கூட இல்லை, குழந்தை தான்.
அவ்வவ் ......
//
:))
//இதை படித்து ரொம்ப கண் கலங்கிவிட்டேன்.
வாவ், தேங்க்ஸ். என்னோட அப்பாவும் உங்க மாதிரி ஒரு பெஸ்ட் அப்பாதான். அதான் உங்களுக்கு பிடிச்சிருக்குனு நினைக்கிறேன். தேங்கஸ் எகெய்ன். :)
கண்டிப்பா சீக்கிரம் எழுதுகிறேன். :)
நான் எழுதினதை எனக்கே ரிப்பீட் டெலிகாஸ்ட் செய்த மாதிரி இருந்தது. ஆனாலும் இவ்வளவு பொருத்தங்களா!! வாவ் :-)
//உங்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது..
Repeat!!
//கொஞ்சம் பெரிய குழந்தை.//
கொஞ்சம் இல்லை ரொம்ப ...
//உங்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது..
//
வாங்க உலக நாயகனே ....
நீங்களும் உங்களை பற்றி எழுதுங்களேன்.....
//நானும் இதே மெனு தான்.. :)//
அதன் ருசியே தனி .
//ஹி ஹி.. அடியேனும் தான்.. பெண்ணுக்கு அழகே கூந்தல் தான்
//
you are right!!
//haa haa...niraiya vishayam sollitteengale...
//
திவ்யப்ரியா,
சீக்கரமா நீங்களும் சொல்லுங்க..........
//வாவ், தேங்க்ஸ். என்னோட அப்பாவும் உங்க மாதிரி ஒரு பெஸ்ட் அப்பாதான். //
எங்கப்பா பெஸ்ட்... ஆனா நான் பெஸ்டா ? கேஷவ் தான் பெரியவனா ஆனப்புறம் சொல்லணும்.
//கண்டிப்பா சீக்கிரம் எழுதுகிறேன். :)
//
எழுதுங்க , எழுதுங்க
//நான் எழுதினதை எனக்கே ரிப்பீட் டெலிகாஸ்ட் செய்த மாதிரி இருந்தது. ஆனாலும் இவ்வளவு பொருத்தங்களா!! வாவ் :-)
//
விஜய்,
எனக்கு உங்க பதிவை படித்தும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
விஜய் tag பண்ணின போஸ்ட் நீங்க போட்டுட்டீங்களா??.........அச்சோ நான் தான் இன்னும் போடல:((
Sorry for my late attendence Mukundan:(
\\7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆண்களிடம் மீசை.பெண்களிடம் அவர்கள் தலைமுடி.\\
:))
எல்லா கேள்விகளுக்கும் தெளிவா பதில் சொல்லியிருக்கிறீங்க முகுந்தன்:))
விஜய்க்கும் உங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது ஆச்சரியமா இருக்கு.
//எல்லா கேள்விகளுக்கும் தெளிவா பதில் சொல்லியிருக்கிறீங்க முகுந்தன்:))//
நன்றி திவ்யா......
//விஜய்க்கும் உங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது ஆச்சரியமா இருக்கு.//.
எனக்கும் கூட ஆச்சரியமா இருக்கு
//விஜய் tag பண்ணின போஸ்ட் நீங்க போட்டுட்டீங்களா??.........அச்சோ நான் தான் இன்னும் போடல:((
Sorry for my late attendence Mukundan:(//
No problem :)
நான் கூட உங்கள் தொடரை படிக்கவே இல்லை, அடுத்தவாரம் தான் அஞ்சு பாகமும் படிக்கணும்
Post a Comment