Saturday, February 7, 2009

பயணிகள்

சமீபத்தில் சென்னை வந்த போது விமானத்தில் சில பயணிகள்
நடந்துகொண்ட விதம் பற்றி தான் இந்த பதிவு....

சிங்கபூரில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏறினேன் (பட்ஜெட் ஏர்லைன்..) எனக்கு பின் வந்தார்கள்
நான்கைந்து பேர்.பார்பதற்கு மாணவர்கள் போல் இருந்தனர்.
ஏறியவுடன் அதில் ஒருவர் டேய் மச்சி இங்க பாருடா இந்த சீட்
நம்பர் அழிஞ்சு போச்சு பேனால எழுதி இருக்காங்கடா என்று சொல்ல
மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அடுத்து சிறிது நேரத்தில் ஒருவர்,
டேய் சீட் புஷ்பாக் வேலை செய்யலடா என்று சொல்ல, மற்றவர் ,
டேய் அதுக்கு தான் நாம எப்பவும் போகும்(??)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் போக வேண்டும் என்று சொன்னேன்
நீ கேட்கவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து உணவு கொடுத்தனர்.
அதில் ஜீரா ரைஸ்,சப்ஜி ,கேக், ஜூஸ் இருந்தது அதை பார்த்து
இது என்ன ? இதே வேற ஏர்லைன்ஸில் உணவு வேறு மாதிரி இருக்கும்.
இப்படியே ஏதோ பேசிக்கொண்டே வந்தனர். சென்னை வந்து இறங்கினோம் .
விமானத்தை விட்டு இறங்கி உள்ளே நுழைந்ததும் தரையில் உடைந்து
இருந்த ஒரு டைல்ஸை பார்த்ததும் ஒருவர். டேய் மாமா, இங்க பாருடா
இந்த டைல்ஸ் உடைஞ்சு இருக்கு இதே சாங்கி ஏர்போர்ட் எப்படி இருந்தது
என்று சொல்ல மீண்டும் சிரிப்பு.

இதன் பின் நடந்தது ரொம்ப காமெடி. அதில் ஒருவர். டேய் arrival card
fill பண்ணிட்டியா என்று கேட்க மற்றவர் அனைவரும் டேய் அது
வெளிநாட்டுகாரங்களுக்கு தான் நமிக்கில்லை என்று சொன்னதும் எனக்கு
ஒரு விஷயம் புரிந்து விட்டது, நான் சிரித்துக்கொண்டேன்,
எனக்கு பின்னால் இருந்தவர் கேட்டு விட்டார். ஏம்பா தம்பிங்களா
இது தான் உங்களுக்கு முதல் வெளிநாட்டு பயணமா?
அதுக்கே இவ்வளோ பேச்சா என்று கேட்க அவ்வளவு நேரம்
சிரித்துக்கொண்டு வந்தவர்களின் முகத்தில் ஈ ஆடவில்லை.

நான் சொல்ல வருவது.. நம் விமானங்கள்/ விமான நிலையம்
உலக தரம் இல்லாமல் இருக்கலாம். இன்னும் நிறைய முன்னேற
வேண்டி இருக்கலாம்.அதற்காக பொது இடத்தில் இப்படி பேச வேண்டுமா?
அவ்வளவு எதிர்பார்கிறவர்கள் 1000 டாலர்கள் கொடுத்து
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வந்து இருக்கலாம் எதற்காக
பட்ஜெட் ஏர்லைன்ஸில் வரவேண்டும்? இன்னும் ஒரு விஷயம்
சொல்ல வேண்டும்.இங்கிருந்து செல்லும் டைகர் ஏர்லைன்ஸில்
luggage கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
உணவும் கிடையாது..

நாம் எப்போதும் குறைகளையே பார்பதை விட அதில் இருக்கும்
ஒரு சில நல்ல விஷயங்களையும் பார்ப்போம்...

40 comments:

Divyapriya said...

பசங்க ரொம்ப சீன் போட்ருக்காங்க தான்!

Vijay said...

இதாவது பரவாயில்லை. நானும் என் நண்பனும், அமெரிக்கா போய், பொது இடங்களில், “என்னடா ஊரு இது. ஒரு ஊச்சா போகறதுக்குக் கூட ஒதுங்க இடம் இல்லையே”ன்னு அமெரிக்கால போயி அவிங்களுக்கே அல்வா கொடுத்துட்டு வந்தோம்லா :-))

Raghav said...

நல்லாருக்கீகளா முகுந்தன்...

ஒவ்வொருத்தருக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்.. :)

Raghav said...

//Divyapriya said...
பசங்க ரொம்ப சீன் போட்ருக்காங்க தான்!//

வாணாம்.. அப்புறம் நாங்களும் எடுத்து விட வேண்டி வரும் :))

நட்புடன் ஜமால் said...

இது தவறென்று அவர்களாகவே உணர்வார்கள்.

அ.மு.செய்யது said...

நல்ல பதிவு..அனுபவம்...

நகைச்சுவை கலந்து தந்திருக்கிறீர்கள்...

தாரணி பிரியா said...

வாங்க முதலாளி ஊருக்கு வந்துச்சா? நல்லா இருக்கிங்களா முதல் தடவை அப்படின்றதால அந்த ஊர் பெருமையை பேசி இருப்பாங்க.

//நாம் எப்போதும் குறைகளையே பார்பதை விட அதில் இருக்கும்
ஒரு சில நல்ல விஷயங்களையும் பார்ப்போம்... //

பின்பற்ற வேண்டிய‌ நல்ல கருத்துங்க. ஆனா இப்ப யாரு இப்படி இருக்கோம்.

முகுந்தன் said...

//
Divyapriya said...
பசங்க ரொம்ப சீன் போட்ருக்காங்க தான்!
//

தாங்க முடியாத அளவுக்கு சீன் :)

முகுந்தன் said...

//இதாவது பரவாயில்லை. நானும் என் நண்பனும், அமெரிக்கா போய், பொது இடங்களில், “என்னடா ஊரு இது. ஒரு ஊச்சா போகறதுக்குக் கூட ஒதுங்க இடம் இல்லையே”ன்னு அமெரிக்கால போயி அவிங்களுக்கே அல்வா கொடுத்துட்டு வந்தோம்லா :-))

//
அதுதான் விஜய் :)

முகுந்தன் said...

//நல்லாருக்கீகளா முகுந்தன்...

ஒவ்வொருத்தருக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்.. :)

//

நான் நல்லா இருக்கேன் ராகவ். ஒரே குறை கேஷவ் சென்னையில் நான் இங்கே தனியாக.. அடுத்த மாதம் முதல் கேஷவ்வும் இங்கே வந்து விடுவான் !!

முகுந்தன் said...

//நல்லாருக்கீகளா முகுந்தன்...

ஒவ்வொருத்தருக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்.. :)

//

நான் நல்லா இருக்கேன் ராகவ். ஒரே குறை கேஷவ் சென்னையில் நான் இங்கே தனியாக.. அடுத்த மாதம் முதல் கேஷவ்வும் இங்கே வந்து விடுவான் !!

முகுந்தன் said...

வாங்க ஜமால் , நீங்கள் சொல்வதை போல் அவர்களாகவே உணர்ந்தால் தான் உண்டு..

முகுந்தன் said...

வாங்க செய்யது,
முதலில் அவர்கள் செய்த அலம்பலில் சிரித்தேன்..
ஆனால் நெருடலாகவும் இருந்தது.

முகுந்தன் said...

தாரணி பிரியா,

முதல் தடவையே இப்படின்னா இன்னும் போக போக எப்படி இருக்குமோ.
பொது இடங்களில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.

Anonymous said...

ம்....சில பேர் ஊருக்கு வந்தபிறகு பண்ணும் அலம்பல் இருக்குதே..... அதனால் ஊரில் உள்ளவர்கள், வெளிநாட்டில் எல்லோரும் என்னமோ சொர்க்கத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள்.

மேவி... said...

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ; திருட்டை ஒழிக்க முடியாது "

பட்டுகோட்டை ஐயா அன்றே சொல்லிவிட்டார்.....

மேவி... said...

"Divyapriya said...
பசங்க ரொம்ப சீன் போட்ருக்காங்க தான்!"

repeatuuu......

மேவி... said...

"Raghav said...
ஒவ்வொருத்தருக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்.. :)"

ennakku niraiya anubavam irukku....

Karthik said...

ஸோ, இப்ப சென்னைல இருக்கீங்க? வெல்கம் பேக்!
:))

முகுந்தன் said...

//ம்....சில பேர் ஊருக்கு வந்தபிறகு பண்ணும் அலம்பல் இருக்குதே..... அதனால் ஊரில் உள்ளவர்கள், வெளிநாட்டில் எல்லோரும் என்னமோ சொர்க்கத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள்.
//

குந்தவை,
அது இன்னொரு கொடுமை. சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூர் வந்திருந்த போது
பரோட்டா கடையில் வேலை செய்யும் ஒருவர் சொன்னது ரொம்ப கொடுமை. அவர் சொன்னது :
நான் ஐந்து வருஷத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கே போக முடியும் அப்படி போகும்போது சொந்தகாரங்க செய்யும் இம்சை தாங்க முடியாது.. சிங்கபோரில் இருந்து இதை தான் வாங்க முடிந்ததா என்று கேட்கும்போது எனக்கு ஏன்டா ஊருக்கு வந்தோம் என்று இருக்கும், ஆனால் அம்மாவை பார்ப்பது தான் முக்கியம்,இவர்கள் பேசினால் பேசட்டும் என்று சொன்னார். நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

முகுந்தன் said...

//"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ; திருட்டை ஒழிக்க முடியாது "

பட்டுகோட்டை ஐயா அன்றே சொல்லிவிட்டார்.....//

Mayvee,

ரொம்ப சரியாக சொன்னீங்க :)

முகுந்தன் said...

//ஸோ, இப்ப சென்னைல இருக்கீங்க? வெல்கம் பேக்!
:))
//

கார்த்திக்,
நான் சிங்கபூருக்கு திரும்ப வந்துவிட்டேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் தான். மார்ச் வரை தனியாக தான் இருக்க வேண்டும் :(

Karthik said...

oh, i didnt see ur previous comments. so, keshav is going to join you next month? cool..!
:)

முகுந்தன் said...

//
oh, i didnt see ur previous comments. so, keshav is going to join you next month? cool..!
:)
//

Yes, just waiting for that day:)

கார்க்கிபவா said...

பொது இடமாச்சே.. கொஞ்சம் அம்க்கி வாசிச்சிருக்கலாமோ

முகுந்தன் said...

வாங்க கார்கி,

நீங்க சொல்றது ரொம்ப சரி... பொது இடத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது ரொம்ப நல்லது:-)

Divya said...

\\நாம் எப்போதும் குறைகளையே பார்பதை விட அதில் இருக்கும்
ஒரு சில நல்ல விஷயங்களையும் பார்ப்போம்...\\


Well said Mukunthan:))

Its good to get rid of....grumbling, murmuring and complaining attitudes.

Anonymous said...

Cute template.

முகுந்தன் said...

நன்றி குந்தவை.

Rajalakshmi Pakkirisamy said...

நல்ல பதிவு..

முகுந்தன் said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜலெட்சுமி.

Anonymous said...

என்ன முகுந்தன் உங்களை காணமுடிவதில்லை. பயங்கர வேலையா?
வீட்டில் அனைவரும் நலமா?

முகுந்தன் said...

//என்ன முகுந்தன் உங்களை காணமுடிவதில்லை. பயங்கர வேலையா?
வீட்டில் அனைவரும் நலமா?

//
ஆமாம் குந்தவை. வேலை ஜாஸ்தி. போனவாரம் மனைவியையும் கேஷவையும் ஊரில் இருந்து கூட்டிகொண்டு வந்து விட்டேன்.

Divya said...

romba naal aachu mukundan neenga post potu:(

still busy?

anujanya said...

Mukund,

All ok? Why no posts?

Love to Keshav.

Anujanya

முகுந்தன் said...

Divya,

Yes, too much work.Hope to start posting soon.

முகுந்தன் said...

Anujanya,

yes, All well. Thanks.
Too much work these days -
which is good at this time :) .
Hope to start posting soon.

Karthik said...

hi.. busy for long??

how are u doing? and keshav?

முகுந்தன் said...

Hi Karthik,

Keshav is fine.
Yes, lot of work.
will start writing soon.
Thanks...

*இயற்கை ராஜி* said...

:-)பொது இடங்களில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.