Monday, September 1, 2008

'நாயகன்' கேஷவ்

சென்னை வந்ததில் இருந்து கேஷவ் மீண்டும் ஸ்கூல்
போக ஆரம்பித்து விட்டான்...

நேற்று ஏதோ வாயில் மாட்டிகொண்டதால் தூ என்று துப்பினான்.
நான்,கேஷவ் இந்த மாதிரி பண்ண கூடாது.என்ன கெட்ட பழக்கம்?
பாத்ரூம்ல போய் துப்பு அப்படின்னு சொல்ல ...

கேஷவ்:நேத்து டிவில பாத்த படத்துல அப்படிதான் துப்பினார்
அந்த அங்கிள்

நான் : அதெல்லாம் சொல்லாதே , நீ அப்படி பண்ண கூடாது....

கேஷவ் : அவர நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் ...

எனக்கு நாயகன் BGM கேட்டது :-)



*************************************************************

என் மனைவி கடைக்கு போக முடியாமல் என் மாமியாரிடம் காய்கறி
வாங்கி வர சொல்ல...

கேஷவ்:நீ மொதல்ல பாட்டி கிட்ட பைசா குடு. நம்ம கிட்ட
பைசாவா இல்ல?


*************************************************************
நான் : கேஷவ் அப்பா அடுத்த மாசம் திரும்ப வேற ஏதாவது
ஊருக்கு போகணும்.நீ அம்மாவ படுத்தாம சமத்தா ஸ்கூல்
போகணும்...

கேஷவ் : நீ ஊருக்கு போனா நான் அழுவேன்.

நான் : நான் சீக்ரம் வந்துடுவேன்.

கேஷவ் : நைட் நீ என் பக்கத்துல படுதுக்கலன்னா நான்
அந்த பக்கம் உருண்டு விழுந்துடுவேன் அப்பா,
ப்ளீஸ் நீ போகாதே...

நான் : ????

(இதை டைப் பண்ண கூட என்னால் முடியவில்லை. பல நேரம்
எதுவும் வேண்டாம் குழந்தையுடன் இருந்தால் போதும்
என்று இருக்கிறது... என்ன செய்ய ....)

24 comments:

Ramya Ramani said...

குழந்தை நீங்க ஊர்ல இல்லாம ஏங்கிடுவான் போல இருக்கே!

ஹிம்ம் என் அப்ப நான் குட்டியா இருக்கும் போது அடிக்கடி டூர் போவாராம் அப்பல்லாம் எனக்கு ஜுரம் வந்திடுமாம்.

அப்பா வந்த உடனே பக்கதுல படுத்தா வேர்த்து கொட்டி ஜுரமும் போயே போச் தான். இன்னிக்கும் அம்மா சொல்லி சொல்லி காட்டுவாங்க..


\\பல நேரம்
எதுவும் வேண்டாம் குழந்தையுடன் இருந்தால் போதும்
என்று இருக்கிறது... என்ன செய்ய ....)\\

Reality Hurts :((

விஜய் said...

cho chweet :-)

kunthavai said...

//அவர நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் ...//
ஹா...ஹா..


//பல நேரம்
எதுவும் வேண்டாம் குழந்தையுடன் இருந்தால் போதும்
என்று இருக்கிறது... என்ன செய்ய ....)\\

தினமும் கண்மணியுடன் இரவு பெரிய ரகளையே நடக்கும். அதனால் என் வீட்டுகாரருக்கு சமீபத்தில் அமேரிக்கா போனப்ப தூக்கமே வரவில்லை என்று புலம்பித்தள்ளினார்.

Karthik said...

//இதை டைப் பண்ண கூட என்னால் முடியவில்லை. பல நேரம்
எதுவும் வேண்டாம் குழந்தையுடன் இருந்தால் போதும்
என்று இருக்கிறது... என்ன செய்ய ....

Its Difficult!
:(

Divyapriya said...

முதல்ல படித்த போது, அவனோட innocence பாத்து சிரிப்பு தான் வந்துச்சு...ச்சோ ச்வீட்...

//பல நேரம்
எதுவும் வேண்டாம் குழந்தையுடன் இருந்தால் போதும்
என்று இருக்கிறது... என்ன செய்ய ....)//

இத படிக்கும் போது தான் கஷ்டமா இருந்தது...என்ன பண்றது, எதுக்காகவோ, யாருக்காகவோ, எதை எதையோ, தேடி தேடியே தான வாழ்க்கை ஓடுது!!!

சேவியர் said...

// பல நேரம்
எதுவும் வேண்டாம் குழந்தையுடன் இருந்தால் போதும்
என்று இருக்கிறது//

கடந்த சில வருடங்களாக நான் வெளி நாடு பயணங்கள் அனைத்தையும் திட்டவட்டமாய் நிராகரித்ததற்கு இது ஒன்றே காரணம் :)

முகுந்தன் said...

//அப்பா வந்த உடனே பக்கதுல படுத்தா வேர்த்து கொட்டி ஜுரமும் போயே போச் தான். இன்னிக்கும் அம்மா சொல்லி சொல்லி காட்டுவாங்க..
//

ரொம்ப கஷ்ட பட்டிருப்பார் ரம்யா, உங்க அப்பா ...

முகுந்தன் said...

//cho chweet :-)//

விஜய்,

சில சமயம் ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசுவது கஷ்டமாக இருக்கு :)

முகுந்தன் said...

//வீட்டுகாரருக்கு சமீபத்தில் அமேரிக்கா போனப்ப தூக்கமே
வரவில்லை என்று புலம்பித்தள்ளினார்.//

குந்தவை, குழந்தைகளை விட்டு ஊருக்கு போவது ரொம்ப கொடுமை...

முகுந்தன் said...

//Its Difficult!:(//

Karthik,

yes, very difficult for me as he always asks me to comeback when ever i call from abroad :((

முகுந்தன் said...

@Divyapriya
//இத படிக்கும் போது தான் கஷ்டமா இருந்தது...என்ன பண்றது, எதுக்காகவோ, யாருக்காகவோ, எதை எதையோ, தேடி தேடியே தான வாழ்க்கை ஓடுது!!!
//

சேவியர்

//கடந்த சில வருடங்களாக நான் வெளி நாடு பயணங்கள் அனைத்தையும் திட்டவட்டமாய் நிராகரித்ததற்கு இது ஒன்றே காரணம் :)//

என்னால முடியல , இதனால் நான் இன்னும் கொஞ்ச நாட்களில் ,
IT விட்டு வெளிய வந்து ஏதாவது கடை வைத்து பிழைக்கலாம் என்று இருக்கிறேன்.

Divya said...

பாவம் கேஷவ்......நீங்க ஊருக்கு போய்ட்டா தவிச்சுப்போய்டுவான் போலிருக்கு:(


\
(இதை டைப் பண்ண கூட என்னால் முடியவில்லை\\


எழுதும் போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும்னு உணர முடியுது.

Raghav said...

ஆஹா.. "பதிவு நாயகன்" கேஷவ் கலக்குறார் போல. சூப்பர்.

"கவலையை விடுக..
கேஷவன் கைவண்ணம் காண்க.."

முகுந்தன் said...

Divya,

//பாவம் கேஷவ்......நீங்க ஊருக்கு போய்ட்டா தவிச்சுப்போய்டுவான் போலிருக்கு:(//

என்னையும் கூட்டிண்டு போ. நான் உன் கூட ஆபீஸ் வரேன்.
என்று சொல்கிறான் :(

//எழுதும் போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும்னு உணர முடியுது.//

சொல்ல வார்த்தைகளில்லை

ஹேமா said...

சென்னைத் தமிழன் முதல் வணக்கம்.கேஷவ் குட்டிக்கும் அன்பு வணக்கம்.வாழ்வின் அழகான நினைவுப் பதிவுகள்.குழந்தைகள் கவிதைப் பதிவுகள் போல.என்றும் எங்களுக்குள் பதிந்து கொள்ள வேண்டிய காவியச் செல்வங்கள்.

முகுந்தன் said...

ஹேமா,
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

Sri said...

Cho chweeeeeeeeeet Keshav..!! :)
Really he is a hero..!! :))

முகுந்தன் said...

Sri,
Welcome to my blog!! Thank you.

Shwetha Robert said...

howz keshav kutty??
convey my luv to him:)))

முகுந்தன் said...

Keshav is fine and enjoying a lot in chennai.

Thanks Shwetha,will pass on to Keshav.

அனுஜன்யா said...

முகுந்த்,

படிக்க கஷ்டமாதான் இருக்கு. நாம் எல்லோரும் sophisticated அன்றாடங்காய்ச்சிகள். ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் இருவருக்குமே மற்றவர் முற்றிலும் புதியவர் போலத் தெரியும். அந்தப் பருவம் திரும்ப வருமா! சாரி முகுந்த், உன்னை இது இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுத்தி இருக்கும். Lets hope you settle down in a permanent place atleast within the next 2 years. But, you aren't alone. Most of us are.

கேஷவுக்கு என் அன்பைச் சொல்.

அனுஜன்யா

முகுந்தன் said...

அனுஜன்யா,


//படிக்க கஷ்டமாதான் இருக்கு. நாம் எல்லோரும் sophisticated அன்றாடங்காய்ச்சிகள். //

ரொம்ப சரி.

//சாரி முகுந்த், உன்னை இது இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுத்தி இருக்கும். Lets hope you settle down in a permanent place atleast within the next 2 years. But, you aren't alone. Most of us are. //

No problem, thanks for your comments.

அனுஜன்யா said...

//குட்டிக் குழந்தை

4வயது குட்டிக் குழந்தை
மிகக்குட்டியான உடையை உடுத்துகிறது.
தன் குட்டியான பாதங்களால்
குட்டியான அடிகளை எடுத்து வைக்கிறது
இப்பிரபஞ்சத்தின் மீது
33வயது தந்தையின் மிகப்பெரிய
பூட்சுகளை அணிந்தபடி
பெரிய பெரிய அடிகளை எடுத்து வைக்க
முயல்கிறது.
தந்தையின் பெரிய கால்சராயை
அணிந்து கொள்கிறது.
இடுப்பில் நிற்காத அக்கால் சராய்
அவிழ்ந்து அவிழ்ந்து விழுகிறது
33 வயதிலிருந்து
4வயதிற்கு//

முகுந்த்,

இந்தக் கவிதை (நரன் எழுதியது) உயிர்மையில் படித்தேன். உன் மற்றும் கேஷவ் ஞாபகம் வந்தது. ரசிப்பாய் என்று நினைக்கிறேன்.

அனுஜன்யா

முகுந்தன் said...

அனுஜன்யா,

இதில் இருக்கும் எல்லாம் கேஷவ் செஞ்சிருக்கான்.நல்லவேளை, இதை நான் சென்னையில் இருக்கும்போது படித்தேன்,
இல்லனா ரொம்ப கஷ்டம்மா இருக்கும் :(