Wednesday, July 9, 2008

பேர கேட்டாலே

இந்த பதிவை என் அருமை மகனின் ரஜினி வெறி!!பற்றி
எழுத வேண்டும் என்பதற்காக போடுகிறேன்.


கேஷவ் :அப்பா நான் ரஜினி மாதிரி இருக்கேனா?

நான் : எதுக்குடா அப்படி கேக்கற?

கேஷவ் : இல்ல ரஜினி அங்கிள் ஒரு படத்துல இப்படித்தான் கோட்
போட்டுண்டு வருவார்.நான் இத போட்டுண்டு ரஜினி
மாதிரியே என்ன படுதரவங்கள எலாம் அடிச்சிடுவேன்.

***********************************************

சில நாட்களுக்கு முன் (சிவாஜி ரிலீஸ் ஆன புதிதில் )

கேஷவ்: அப்பா என பேர மாத்தி வெச்சிடு

நான் : என்னடா சொல்ற

கேஷவ்: ஆமாம், என் பேர சிவாஜின்னு மாத்தி வெச்சிடு ,
இல்லனா ரஜினின்னு மாத்திடு.

நான் : எதுக்கு?

கேஷவ்: அப்போ தான் என் பேர கேட்டாலே அதிரும்

நான்: ???

***********************************************

நான்: ஒழுங்கா சாபிடு அப்போதான் உனக்கு ஹனுமான் மாதிரி கை பலமா இருக்கும்

கேஷவ்: இல்ல எனக்கு ரஜினி மாதிரி பலம் வேணும்

நான்: என்னடா?

கேஷவ் : ரஜினி தான் ஹனுமான விட power ஜாஸ்தி,
ஏன்னா ரஜினி அங்கிள் தான் ஒரே சமயத்துல நெறைய பேர அடிப்பார்.


என்னால முடியல :)))
***********************************************

9 comments:

Shwetha Robert said...

your son Keshav looks very smart & adorable:-)

Shwetha Robert said...

கேஷவ்: அப்போ தான் என் பேர கேட்டாலே அதிரும்
------------

:)))

such a crazy fan of Rajini??

முகுந்தன் said...

Shwetha,

Thanks for your compliments.
yes, he is too crazy of Rajini.
he was 3.5 years when he said this.

Kunthavai said...

Cute kid.

இப்போது உள்ள பிள்ளைகளின் கற்பனாசக்தியை நினைத்தால் ஆச்சரியமாகதான் இருக்கின்றது.

முகுந்தன் said...

//

Kunthavai said...
இப்போது உள்ள பிள்ளைகளின் கற்பனாசக்தியை நினைத்தால் ஆச்சரியமாகதான் இருக்கின்றது.

//

நன்றி குந்தவை.
ஆமாம் இந்த கால பிள்ளைகள் நிறைய பேசுகிறார்கள்.
அறிவுபூர்வமாக யோசிக்கிறார்கள். பல கேள்விகளுக்கு நம்மால்
பதில் சொல்ல முடிவதில்லை.

விஜய் said...

ஐயோ கேஷவ் சோ ச்வீட்.
என் அக்காவின் மகன் தனது அப்பாவிடம், எனக்கு ஏன் யுவராஜ் சிங்'னு பெயர் வைக்கலைன்னு கேட்டு அழுகிறானாம். இந்தத் தலைமுறை குட்டீஸெல்லாம் நம்மளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் :)

Classic example of how muh cinema has affected kids.

முகுந்தன் said...

நன்றி விஜய்,
நீங்கள் சொல்வது சரி, கொஞ்சம் அசந்தால் நம்மை சாப்பிட்டு விடுவார்கள்.

அனுஜன்யா said...

Rajini still rules. Keshav is cute. May be resembles his mom. :)

முகுந்தன் said...

//Rajini still rules. Keshav is cute. May be resembles his mom. :)//

Mix of both. but he is cute:))