Tuesday, July 29, 2008

சமைத்து பாருங்கள்

சாப்பாட்டு விஷயத்தில் ஆண்கள் பாவப்பட்டவர்கள்.
நான் ஏன் இப்படி சொல்றேன்? வீட்டில் பெண்கள்
(அம்மா,மனைவி,சகோதரி)யாராக இருந்தாலும்
அவர்கள் சமையலை நாம் எதுவும் குறை சொல்ல கூடாது.
அப்படி சொன்னால்? உன் பொண்டாட்டி வந்து சமைப்பா,
அப்போ பாக்கறேன் (அம்மா, அக்கா,தங்கை சொல்வது).
நீங்க வந்து சமைச்சு பார்த்தால் தான் தெரியும் (மனைவி சொல்வது).
இதை கேட்டு கேட்டு நான் ரொம்ப நொந்திருக்கிறேன்....

சில வருடங்களுக்கு முன் விளையாட்டாக சமையல்
கத்துக்கொள்ள ஆரம்பித்தேன்..இப்பொழுது அவர்கள்
என் சமையலை நன்றாக இருக்கிறது என்று (நெஜமா)
சொல்லும் அளவிற்கு சமைக்க தெரியும்.

ஏதோ எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
இதை செய்து பார்த்து,பாராட்டு கிடைத்தால் என்னிடம் சொல்லுங்கள்
(கிடைக்கலாம்)வேறு ஏதாவது கிடைத்தால் ? என்னை விட்டு விடுங்கள்...



இட்லி மஞ்சுரியன்
**************

தேவையானவை(2-3 பேர் சாப்பிட):
********************************

இட்லி : 8
குடைமிளகாய்: 1
வெங்காயம் : 1
சோயா சாஸ் : 3-4 teaspoon
சில்லி சாஸ் : 3-4 teaspoon
பச்சை மிளகாய் : 1 (தேவைக்கேற்ப சேர்க்கலாம்)
French onion : தேவையானால்
இஞ்சி : கொஞ்சம்
தக்காளி : 1
சால்ட் : கொஞ்சம்
கொத்தமல்லி : கொஞ்சம்
எண்ணெய் : இட்லி பொரிப்பதற்கு...
Ajinomotto : தேவையானால்

இட்லியை நன்றாக ஆறவிடவும்.பின்னர் சிறிதாக கட் செய்து கொள்ளவும்.
(ஆறாவிட்டால் இட்லி ஒட்டி கொள்ளும்)அடுப்பில் வாணலியை போட்டு
நன்றாக எண்ணெய் காயும் வரை காத்திருக்கவும்.
பின்னர் இட்லியை நன்றாக பொறித்து கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள காய்களை நறுக்கி,சால்ட் போட்டு நன்றாக
வதக்கவும்.பின்னர் சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து மேலும் வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் , பொறித்து வைத்த இட்லியை சேர்த்து
கிளர வேண்டும்.கொத்தமல்லியை அதன் மேல் தூவுங்கள்.
அவ்வளவு தான் : இட்லி மஞ்சுரியன் ரெடி...


பொரிச்ச ரசம்:
************

பெயர் காரணம் தெரியாது

தேவை:

கடலை பருப்பு : 3 tablespoon
உளுந்து : 1 tablespoon
சீரகம் : 2 tablespoon
மிளகு : 2 tablespoon
தேங்காய் துருவல் : 3 tablespoon
கடுகு : கொஞ்சம்
துவரம் பருப்பு : 1 கரண்டி
மஞ்சள் பொடி : சிறு துளி
எண்ணெய் : 3 tablespoon
காய்ந்த மிளகாய் : 1-2(தேவையானால்)
பெருங்காயம் : சிட்டிகை
தக்காளி : 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி


செய்முறை:

துவரம் பருப்பு,மஞ்சள் பொடி ஆகியவற்றை நிறைய தண்ணீர்
விட்டு குக்கரில் நன்றாக வேக விடவும்.வானலியில் எண்ணெய்
நன்றாக காய்ந்ததும் துவரம் பருப்பு,மஞ்சள் பொடி,பெருங்காயம்,
தக்காளி தவிர மற்றதை போட்டு நன்றாக வறுக்கவும்.
நன்றாக ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு கொஞ்சம் நறநறவென்று
அரைத்து கொள்ளுங்கள்.

வேகவைத்த தண்ணீரை(பருப்புடனோ அல்லது தண்ணீர் மட்டுமோ )
கொஞ்சம் உப்பு,தக்காளி,பெருங்காயம், போட்டு கொதிக்க விடவும்.
பின்னர் அரைத்து வைத்ததை இந்த பருப்பு நீருடன் சேர்த்து உப்பு போட்டு
நன்றாக கொதிக்க விடவும். பின்னர் கொஞ்சம் எண்ணையில் கறிவேப்பிலை,
கடுகு ஆகியவற்றை சிறிது வருத்து தாளிக்கவும்
கொத்தமல்லியை தூவவும்.

சூடான சுவையான ரசம் ரெடி.


சமைத்து பார்த்து சொல்லுங்கள்..

11 comments:

Divyapriya said...

//இப்பொழுது அவர்கள்
என் சமையலை நன்றாக இருக்கிறது என்று (நெஜமா)
சொல்லும் அளவிற்கு சமைக்க தெரியும்//

கலக்குங்க...கேசவனுக்கு அம்மா சமையல் பிடிக்குமா, அப்பா சமையல் பிடிக்குமா? அதை எழுதவே இல்லயே :-)

இட்லி மஞ்சூரியன் படிச்சாலே...ஹ்ம்ம்...Try பண்ணி பாக்கறேன்...

முகுந்தன் said...

divyapriya,
//கலக்குங்க...கேசவனுக்கு அம்மா சமையல் பிடிக்குமா, அப்பா சமையல் பிடிக்குமா? //

அவனுக்கு அம்மா சமையல் தான். நான் கொஞ்சம் காரமாக சமைப்பேன்...

//இட்லி மஞ்சூரியன் படிச்சாலே...ஹ்ம்ம்...Try பண்ணி பாக்கறேன்...//
அட .. ரிஸ்க் எடுக்க துனிஞ்சிட்டீங்க :-)
நன்றி ...

Ramya Ramani said...

அட கலக்கறீங்க...கண்டிப்பா இந்த வாரம் முயற்ச்சிக்கறேன் :))

நீங்க சொல்லும் பொரித்த ரசத்தை நான் மைசூர் ரசம்னு சொல்றேன் ..கொஞ்சம் மிள்கு சேர்த்து செய்வோம் :)

முகுந்தன் said...

Ramya,
//அட கலக்கறீங்க...//

Thank you.

விஜய் said...

அடங்கொக்கா மக்கா
பொண்ணுங்க தான் சமையல் குறிப்பாப் போட்டுத் தாக்குறாங்கன்னா, நீங்களுமா? நடத்துங்க நடத்துங்க :)
வெறும் முகுந்தன் நள முகுந்தன் ஆகிட்டிங்களா?

அப்போ தினமும் வீட்டுல நீங்க தான் சரக்கு மாஸ்டரா?

முகுந்தன் said...

//அப்போ தினமும் வீட்டுல நீங்க தான் சரக்கு மாஸ்டரா?//

அட நீங்க வேற விஜய், நான் சரக்கு மாஸ்டரா மாறிட்டா அப்புறம யாரு ஆபீஸ் போறது , ப்ளாக் எழுதறது சீ... வேலை செய்யறது :-)

Raghav said...

//Divyapriya said... இட்லி மஞ்சூரியன் படிச்சாலே...ஹ்ம்ம்...Try பண்ணி பாக்கறேன்...//

ஏனுங்க கஷ்டப்ப்டுறீங்க.. கோரமங்களா கிருஷ்ணா கஃபேல வியாழக் கிழமை கிடைக்கும். அத விட திங்கள், பொடி இட்லி, மல்லி இட்லி கிடைக்கும். போய் ஒரு வெட்டு வெட்டுங்க. இல்லைன்னா ஒரு ஜிம்பிள் வழி, முகுந்தன் சார் எல்லாருக்கும் பார்சல் அனுப்பினா புண்ணியமா போகும். உங்க பதிவு பக்குவம் தெரியும், அதே மாதிரி கைப்பக்குவமும் தெரிஞ்சுக்குறோம்

Raghav said...

////அப்போ தினமும் வீட்டுல நீங்க தான் சரக்கு மாஸ்டரா?//

ஹி ஹி, இப்புடி ஓப்பனா எல்லாம் கேக்கப்படாது. சுத்தி வளைச்சு இப்புடி கேக்கனும்.. "என்ன முகுந்தன் சார், தினமும் வீட்டுல நள பாகமோ"

முகுந்தன் said...

//ஹி ஹி, இப்புடி ஓப்பனா எல்லாம் கேக்கப்படாது. சுத்தி வளைச்சு இப்புடி கேக்கனும்.. "என்ன முகுந்தன் சார், தினமும் வீட்டுல நள பாகமோ"
//

நானே தான் எல்லாத்தையும் உளறிட்டேனா அவ்வ்வ்வ்.....

அனுஜன்யா said...

காபி போட்டு வைத்தால், கஷ்டப்பட்டு சுட வைத்து குடிப்பேன், நிறைய பிகு பண்ணிக்கொண்டு. இனிமேல் தனியாகத்தான் உன்னோட ப்ளாக் பார்க்கவேண்டும். மனைவி பார்த்தால், ஆறு மாதத்தில் நானும் சமையல் குறிப்பு எழுதவேண்டி வரும்.

ஆனால், படிக்கும்போதே சுவையாக இருக்கிறது. அவள் இல்லாதபோது ட்ரை பண்ண வேண்டும். ஆமாம், இட்லி செய்யும் முறை என்ன?

அனுஜன்யா

முகுந்தன் said...

//காபி போட்டு வைத்தால், கஷ்டப்பட்டு சுட வைத்து குடிப்பேன், //

காப்பியை அப்படியே சுட வைக்க வேண்டாம்.ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்து , அதில் காபி டம்ளரை சிறிது நேரம் வைத்தால் அந்த மனம் கெடாமல் இருக்கும்,

// மனைவி பார்த்தால், ஆறு மாதத்தில் நானும் சமையல்
குறிப்பு எழுதவேண்டி வரும். //

அது...

இட்லி செய்யும் முறை என்ன?

தேவையான பொருட்கள்
*********************

இட்லி/புழுங்கல் அரிசி - 2 கப்
உளுந்து - 1 கப்

அரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் அந்த தண்ணீரை கொட்டி விட்டு அரிசி/உளுந்து இரண்டையும் நன்றாக
2-3 முறை களையவும்/ அலம்பவும் .பின்னர் உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.. சும்மா சூப்பரா இருக்கணும் :-)
அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி விட்டு , அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இது உளுந்து அளவிற்கு அரைக்க வேண்டியதில்லை.

பின்னர் அந்த மாவை அரைத்து வைத்த உளுந்து மாவுடன் கொட்டி,
சிறிது கல் உப்பு போட்டு கலக்கு கலக்குங்கோ ....அந்த மாவை
இரவு முழுதும் ஒரு பாத்திரத்தில் வெளியே வைத்து விடுங்கள்.
காலையில் அந்த மாவை நன்றாக கலக்கி விட்டு இட்லி செய்யலாம்,
( இப்படி செய்வதால் அடியில் இருக்கும் மாவில் செய்யும் இட்லி கல் போல இருக்காது).அல்லது கலக்கிய பின் அந்த மாவை fridge ல் வைத்து விடவும்.தேவையான போது இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி
(இட்லி தட்டில் ஒட்டாமல் இருக்க) மாவை விட்டு பத்து முதல் பதினைந்து
நிமிடங்கள் வேக விடவும்.

சூடான இட்லி ரெடி.