Thursday, July 10, 2008

குழந்தை மனம்

இன்று சாப்பாடு டப்பா எடுத்து வர மறந்து விட்டேன்.
என் மனைவியிடம் போன் செய்து சொன்னதும் ,
என் மகன் போனை பிடுங்கி கொண்டான்

கேஷவ்: இன்னிக்கு நீ டிபின் மறந்து போய்ட்டியா?

நான் : ஆமாம்டா கண்ணா.அவசரத்துல மறந்து போயிட்டேன்

கேஷவ் : இனிமே மறக்க கூடாது சரியா?

நான் : சரிடா செல்லம்.

கேஷவ் : உனக்கு பசிச்சா என்ன பண்ணுவ?

நான்: bread வாங்கிக்கறேன், nesquik வாங்கிக்கறேன்

கேஷவ்: நீயே nesquik கலந்து சாபிடுவியா? அங்க முடியுமா?

நான் : இல்லடா கண்ணா கடைல வாங்கிக்கறேன்.

கேஷவ்: சரி வேற ஏதாவது கூட சாப்பிடு , உனக்கு ரொம்ப பசிக்கும்.

நான் : Thank you செல்லம்.


I am blessed!!!


எதற்கு இதை எழுதுகிறேன் என்றால் , குழந்தைகளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது,நாம் அவர்களிடம் அன்பாக பழகினாலே அவர்கள் ஒழுங்காக வளருவார்கள், எல்லோரிடமும் அன்புடன் இருப்பார்கள்.

19 comments:

விஜய் said...

உங்க பையனுக்கு உங்க மேல தான் எவ்வளவு அக்கரை. உங்களுக்குக் கூட குழந்தை மனம் தான். இல்லைன்ன மறந்து போய் சாப்பாடு டப்பாவை வீட்டுல விட்டுட்டு வருவீங்களா? :)

முகுந்தன் said...

விஜய்,

அவனுக்கு எல்லோரிடமும் ரொம்ப அக்கறை ஜாஸ்தி.

குழந்தை மனம் இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்.
எந்த கவலையும் இல்லாமல்,எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல்....

இங்க சாப்பாடு கொண்டு வரலேன்னா ரொம்ப கஷ்டம்,
பிரட் வெச்சு ஓட்ட வேண்டியது தான்.இவர்களிடம் வெஜிடேரியன்
என்று சொல்லி புரிய வைப்பதற்கு பதில் ஒரு ஜூஸ் வாங்கி குடித்து விடலாம்...

அனுஜன்யா said...

Very touching. குழந்தைகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து கண்ணாடிபோல் பிரதிபலிக்கவும் செய்கிறார்கள். நாம்பதான் நல்லா நடந்துக்கணும் (கண்ணாடி முன்னாலாவது).

ஷப்பா, முகுந்தா, மூச்சு வாங்குது. ஒரே நாள்ள மூணு-நாலு பின்னூட்டம். ஒழுங்கா மருவாதையா, அல்லா கவிதைக்கும் 'சுபராகீது நைனா'னு ஒரு பின்னூட்டம் போட்றது. அம், வர்ட்டா.

அனுஜன்யா

முகுந்தன் said...

எல்லா கவிதைக்கும் சேர்த்து ஒரு கமெண்ட் போட்டுட்டேன் :-)

அனுஜன்யா said...

அது! ஆனா மானத்த வாங்காதபா. அல்லாரும் நான் எதோ மிரட்டித்தான் பின்னூட்டம் வாங்கறதா நினைப்பாங்க. நான் சொன்னது இந்த ஹைக்கூ கீல ஒரு மண்ட காயுற கவித இல்ல. அத்த்த சொன்னேன். பரவாயில்ல பா. ரொம்ப தாங்க்ஸ்

அனுஜன்யா

முகுந்தன் said...

மானத்த எல்லாம் வங்கலீங்கன்னா , அந்த கமெண்ட எடுத்துட்டேன்.

ஆனா நெஜமாகவே உங்க கவிதைகள் நல்லா இருக்கு.

அனுஜன்யா said...

முகுந்த்,

செம்ம காமெடி. நான் நீ delete பண்ணியது தெரியாமல் உன்கிட்டயே மனாப்பு கேட்டிருக்கேன். ரூம் போட்டு யோசிச்சாலும் இத்தன காமெடி வராது.

அனுஜன்யா

முகுந்தன் said...

:-)

kunthavai said...

/குழந்தைகளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது,நாம் அவர்களிடம் அன்பாக பழகினாலே அவர்கள் ஒழுங்காக வளருவார்கள், எல்லோரிடமும் அன்புடன் இருப்பார்கள்.
/

it is true.

Karthika said...

Cute Keshav, How sweet and affectionate he is to say like that? :)

முகுந்தன் said...

Thank you Karthika,

Yes, he is very affectionate.

After this incident he daily asks me before i leave if i have taken the lunch box :-)

Divyapriya said...

//கேஷவ்: சரி வேற ஏதாவது கூட சாப்பிடு , உனக்கு ரொம்ப பசிக்கும். //

Too cute :))
paasakaara payyan :)

முகுந்தன் said...

//paasakaara payyan :)//

:))

விஜய் said...

enna mukundan,
vacation'la poyitteengalaa?

Vijay

முகுந்தன் said...

விஜய்,

எழுதுவதற்கு எதுவும் புதிதாக இல்லை.

இங்க வேலை செய்யறதே இப்போ vacation மாதிரி தான் இருக்கு. அடுத்த ஆகஸ்ட் கடைசி வரை அப்படிதான் இருக்குமாம் :-)


btw, உங்க கதை சூப்பர்...

Divya said...

வாவ்.......எத்தனை பாசமும் அக்கறையும் இந்த சிறுவயதிலியே!!!

நிஜம்மாகவே நீங்க கொடுத்து வைச்ச 'அப்பா':))))

முகுந்தன் said...

Thanks Divya,

ஆமாம் ரொம்ப கொடுத்து வைத்திருக்கிறேன்.

Ramya Ramani said...

அட எவ்வளோ சமத்தா பேசறான் குழந்தை...ஒரு ஆயிரம் முத்தம் தரலாம் இப்படிப்பட்ட குழ்ந்தைக்கு:))
என்னைப்பொருத்தவரை மழலை செல்வம் தான் சிறந்த செல்வம்.

\\கேஷவ்: சரி வேற ஏதாவது கூட சாப்பிடு , உனக்கு ரொம்ப பசிக்கும்.

நான் : Thank you செல்லம்.


I am blessed!!!
\\

100% you are blessed with such a good family..Indeed kesav is also :))

முகுந்தன் said...

//100% you are blessed with such a good family..Indeed kesav is also :))//

Thank you Ramya.