Saturday, July 5, 2008

பொடிப்பசங்க

சில கேள்விகள்...அனைத்து கேள்விகளும் கேட்டது
பொடி பசங்க. ஆனா பதில் தெரியாம முழிச்சது பெரியவங்க...

***********************************************

இடம் : திருவள்ளூர் கோவில்

என் மகன்: எதுக்குப்பா உம்மாச்சி கோவில்ல போலீஸ் இருக்கு?

நான் : கூட்டம் ஜாஸ்தி இருந்தால் யாரும் திருடன் வராம
இருக்கவும்,கோவில்ல எதுவும் எடுக்காம இருக்கவும்...

என் மகன் : அப்பா, உம்மாச்சி தான போலீசையும் காப்பத்தனும் போலீஸ்
எப்படி உம்மாச்சி கோவில்ல எதுவும் நடக்காம காப்பாத்த முடியும்?

நான் : ங்கே :-))

***********************************************

இடம் : திருவள்ளூர் கோவில்

என் மகன்: எதுக்குப்பா உம்மாச்சி இங்க மட்டும் படுத்துண்டு இருக்கு?

நான் : ஒவ்வொரு கோவில்ல ஒவ்வொரு மாதிரி இருக்கும்

என் மகன் : அப்படி இல்ல , எனக்கு தெரியும்...

நான் : என்ன சொல்லு?

என் மகன் : எல்லா கோவிலுக்கும் போயிட்டு இங்க வரும்போது
உம்மாச்சி tired ஆயிடுத்து , அதான் rest எதுக்க படுத்துண்டு இருக்கார்

நான்: ????

***********************************************

நண்பர் ஒருவர் Hardware Engineer ஆக இருக்கிறார்.

அவர் மகன்: அப்பா இந்த mouse கொஞ்சம் laptopல போட்டு குடுப்பா

நண்பர்: அது இந்த laptop ல போட முடியாதுடா...(சும்மா அவனுக்காக)

மகன்: (கஷ்டப்பட்டு போட்டுவிட்டு) நான் போட்டுட்டேன் பார், உனக்கு யார்
computerla வேலை கொடுத்தாங்களோ?

நண்பர்: என் நேரம்டா....

***********************************************

சொந்தகாரர் ஒருவரின் குழந்தை பேசியதை என்னால் மறக்கவே முடியாது...

அவர்கள் வெளி நாட்டில் வசிக்கிறார்கள். விடுமுறைக்கு ஒரு சமயம் இந்தியா வந்திருந்தனர்.அப்பொழுது அந்த குட்டி பையன்(4 வயது)
அவன் பிச்சைகாரனுக்கு போட பத்து ரூபாய் கேட்டிருக்கிறான்.
பாட்டி ஐம்பத்து பைசா தான் கொடுத்திருக்கிறார்.
உடனே அவன் இப்படி செய்யாதே,நீ வயதாகி,பிச்சை எடுக்கும் போது நான்
எட்டணா குடுத்தால் உனக்கு எவ்வளோ கஷ்டமாக இருக்கும்னு கேட்டானாம்????

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இன்னும் நிறைய இருக்கு ... ஞாபகம் வரும்போது எழுதுவேன்..


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

13 comments:

விஜய் said...

\\என் மகன் : அப்பா, உம்மாச்சி தான போலீசையும் காப்பத்தனும் போலீஸ்
எப்படி உம்மாச்சி கோவில்ல எதுவும் நடக்காம காப்பாத்த முடியும்?\\
முற்றிலும் உண்மை. இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்களோ ஆன்றோர்கள்?

\\என் மகன் : எல்லா கோவிலுக்கும் போயிட்டு இங்க வரும்போது
உம்மாச்சி tired ஆயிடுத்து , அதான் rest எதுக்க படுத்துண்டு இருக்கார்\\
உங்க பையன் பயங்கரமா மாற்றி யோசிக்கிறானே!

முகுந்தன் said...

ஆமாம் ரொம்பவே யோசிக்கறான்....

Kunthavai said...

எல்லாவற்றையும் ரசித்தேன்.
மழலைகளின் பேச்சில் மயங்காதவர்கள் யார்?

பிரேம்குமார் said...

என்னமா சிந்திக்கிறாங்கப்பா........... உங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் முகுந்தன்

Divya said...

கள்ளமில்லா மழலை பேச்சு, ரசித்தேன்:))

முகுந்தன் said...

வருகைக்கு நன்றி பிரேம்குமார்.
வாழ்த்துக்களை கண்டிப்பாக சொல்கிறேன்...

முகுந்தன் said...

//கள்ளமில்லா மழலை பேச்சு, ரசித்தேன்:))//

வருகைக்கு நன்றி திவ்யா.

நேற்று என் மனைவி சூடாக ஏதோ சாபிடும்போது என் மகன் கேட்கிறான்,

அம்மா நான் உன் வயத்துல இருக்கும்போதும் இப்படி தான் சூட சாபிட்டியா?
எனக்கு அப்போ சூடா இருந்துருக்குமா?

Shwetha Robert said...

cute kiddish talks, liked them:))

முகுந்தன் said...

//cute kiddish talks, liked them:))//

Thanks Shwetha. When you talk to children you will forget everything else and just enjoy :-))

முகுந்தன் said...

//எல்லாவற்றையும் ரசித்தேன்.
மழலைகளின் பேச்சில் மயங்காதவர்கள் யார்?//

Thanks for your comments Kunthavai.

அனுஜன்யா said...

குழந்தைகள் பேச்சு உண்மையிலேயே என் போன்ற (!) கவிஞர்களுக்கு (இது என்ன கொடுமை சார்) அப்படியே copy-paste பண்ணக்கூடிய அளவு கவித்துவம் நிரம்பியது.

அனுஜன்யா

முகுந்தன் said...

//என் போன்ற (!) கவிஞர்களுக்கு (இது என்ன கொடுமை சார்) //

என்னங்க உங்களமாதிரி நல்லா எழுதரவன்களே இப்படி சொல்லலாமா?

Divyapriya said...

//(கஷ்டப்பட்டு போட்டுவிட்டு) நான் போட்டுட்டேன் பார், உனக்கு யார்
computerla வேலை கொடுத்தாங்களோ? //

:-D