Wednesday, June 25, 2008

என்ன கொடுமை?

தினமலரில் படித்த செய்தி- கலங்கி போனேன்.

வறுமை காரணமாக, பிறந்து சில நாட்களே ஆன
ஆண் குழந்தை ரூ. 40க்கு விற்கப்பட்ட அவலம்,
திருப்பூரில் நடந்தேறியது.
குழந்தையை விற்ற தாயை பொதுமக்கள் பிடித்து,
வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர்,பூலுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட
நெருப்பெரிச்சல்,அம்மன் நகர் பகுதியை
சேர்ந்தவர் செல்வி (35);கட்டட தொழிலாளி.
கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில்
குடியிருந்து வருகிறார்.இவருடன் கட்டட வேலை செய்பவர்
போயம்பாளையம் பகுதியை சேர்ந்த கலா(32);
பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை,
"என்னால் வளர்க்க முடியாது,யாராவது
வளர்ப்பவர்கள் இருந்தால் கொடுத்து விட முடிவு
செய்துள்ளேன்" என்று செல்வியிடம் கூறியுள்ளார்.
செல்வியும் "உன்னால் வளர்க்க முடியாவிட்டால்
நான் வளர்த்துக் கொள்கிறேன்'என்று கூறி,
ரூ40 கொடுத்து குழந்தையை வாங்கிக் கொண்டார்.
அதே பகுதியை சேர்ந்த சண்முகம்,சசிகலா
தம்பதியினர் அக்குழந்தையை தாங்கள் வளர்க்க
விரும்புவதாக தெரிவித்தனர்.
செல்வியும் குழந்தையை சண்முகத்திடம்
கொடுத்துவிட்டு,"குழந்தையின் தாய்
ரூ.10000 பணம் கேட்கிறார்,
கொடுத்து விடுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
பணம் கேட்டதும்,குழந்தை மருத்துவமனையில்
இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம்
என சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள்,
குழந்தையின் தாயை தேடிக் கண்டுபிடித்து
விசாரித்தனர்.பொதுமக்களிடம் கலா,
"கடந்த 20ம் தேதி பெரிச்சிபாளையம்
அரசு மருத்துவமனையில் எனக்கு இந்தக்குழந்தை
பிறந்தது' என்று தெரிவித்துள்ளார்.
தன்னால் குழந்தையை வளர்க்க முடியாததால்,
செல்வியிடம் கொடுத்ததாகக் கூறிய அவர்,
"குழந்தையை பெற்றுக் கொண்டு பணம்
கொடுத்தால் மறுக்க மாட்டேன்' எனவும் பதில்
அளித்துள்ளார்.பொதுமக்கள் இதுகுறித்து
ஆர்.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தனர்.
செல்வி,கலா ஆகியோர் பெருமாநல்லூர்
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

என்ன கொடுமை...?

2 comments:

விஜய் said...

ஒரு குழந்தையை வளர்க்க முடியது என்று தெரிந்தும் ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்?
நல்ல வேளை இக்குழந்தையை காசு வாங்கிக்கொண்டு பிச்சை எடுக்கவிடாமல் தடுத்தார்களே அதுவே ஒரு பெரிய ஆறுதல்.

முகுந்தன் said...

//ஒரு குழந்தையை வளர்க்க முடியது என்று தெரிந்தும் ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்?
//

ரொம்ப சரி.

பாய்ஸ் படத்தில் பஸ்சில் ஒருவன் இடித்தும் கதாநயகி ஒரு
கேள்வி கேட்பாள் அது
நினைவுக்கு வருகிறது...