Thursday, June 26, 2008

வாய் விட்டு சிரியுங்கள்

கே: ஒரு எறும்ப அறுத்தா என்ன ஆகும்?
ப: (கட்)டெறும்பு ஆகும்...
**************************************************

ஆசிரியர்: ஏம்பா இப்படி சிகரெட் பிடிக்கறே ?
மாணவன் : இப்படி தான் பிடிக்கணும்.. திருப்பி புடிச்சா கை சுடும்...

**************************************************

ஆசிரியர்: இப்படி சிகரெட் பிடிச்சா கான்செர் வரும்
மாணவன் : இல்ல சார் , இங்க புகை தான் வரும்...

**************************************************

அப்பா: உனக்கு எந்த வாசனை புடிக்கும்?
மகள்: பக்கத்து வீட்டு ஸ்ரீனிவாசனை

**************************************************

மாணவன் : பெண்குவீன் எதிர்பதம் என்ன?
ஆசிரயர்: தெரியாது.
மாணவன்: ஆண்கிங் ... ஹா ஹா ஹா

**************************************************

கே : புறா கிட்டயும் அணில் கிட்டயும் லெட்டர் குடுத்து அனுப்பினா எது சரியா குடுக்கும்?
ப: அணில், ஏன்னா அது கிட்டதான் பின் கோடு இருக்கே?

**************************************************

(தேர்விலிருந்து வரும் போது)
முதல் மாணவன் : வாடா டீ குடிக்கலாம்
அடுத்தவன் : இப்போதானடா காப்பி அடிச்ச?

**************************************************

சாப்பிட வந்தவர்: என்னபா சாப்பாடுல ஒரே ஐம்பது பைசாவா இருக்கு?
சர்வர்: நீங்க தானே சார் நேத்து சொன்னீங்க, சாப்பாடுல change வேணும்னு..

**************************************************

(இது ரொம்ப பழசு)
கே: பெண் spin bowlerஐ எப்படி கூப்டுவாங்க?

ப: பால திருப்புற சுந்தரி ...

**************************************************

மனைவி : எதுக்கு இட்லியை தலைல வெக்கறீங்க?
கணவன் : நீ தானே சொன்ன, இட்லி பூ மாதிரி இருக்குன்னு.

**************************************************

கே: independence dayக்கும் republic dayக்கும் என்ன வித்தியாசம்?
ப: சுமார் அஞ்சரை மாசம்

**************************************************

6 comments:

விஜய் said...

ஐயோ என்னால கடி தாங்க முடியலியே

முகுந்தன் said...

யாம் பெற்ற இ/துன்பம் பெருக இவ்வையகம் :-)

Shwetha Robert said...

Good good:)))

Kunthavai said...

idly joke is good.

முகுந்தன் said...

நீங்க செய்யற இட்லி இப்படி தான் இருக்குமா :-))

kunthavai said...

நான் அந்த மாதிரி (இட்லியா மல்லிகை பூவான்னு குழம்புற) கஷ்டத்தை எல்லாம் என்னோட வீட்டுகாரருக்கு தரமாட்டேன்.