Saturday, June 14, 2008

இன்னும் கொஞ்சம் தத்துவம்

க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும்
ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?

இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்....
ஆனா நாளைக்கு தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

பஸ்ல கண்டக்டரே ஏறினாலும் முதல் சீட் டிரைவர்க்கு தான்....

சைக்கிள் காரியர்ல டிபின் எடுத்துட்டு போகலாம்
ஆனா... டிபின்காரியர்ல சைக்கிள் எடுத்துட்டு போக முடியாது.....

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனாஅது சினிமா தியேட்டர்
ஆனா உள்ள போய் டிக்கெட் வாங்கிட்டா அது ஆபரேஷன் தியேட்டர்......

என்னதான் மீனுக்கு நீஞ்ச தெரிஞ்சாலும்
அதால மீன் குழம்புல நீஞ்ச முடியாது

அயன் பாக்ஸ்ல அயன் பண்ண முடியும் ஆனா
பென்சில் பாக்ஸ்ல பென்சில் பண்ண முடியுமா?

ஒரு எறும்பு நெனச்சா 1000 யானைய கடிக்க முடியும்
ஆனா 1000 யானை நெனச்சாலும் ஒரு எரும்ப கடிக்க முடியாது...
எனக்கும் வலிக்குது:-))

ஆம்பளைங்களுக்கு அடிபட்டா ஆம்புலன்ஸ் வரும்
ஆனா பொம்பளைங்களுக்கு அடி பட்டா பொம்புலன்ஸ் வருமா.....

ஐயோ என்ன விட்டுடுங்க அடிக்காதீங்க........

2 comments:

விஜய் said...

தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிட முடியும்
ஆனா பொங்கல் அன்னிக்கு தீபாவளி சாபிட முடியுமா

கார்த்திகை மாசம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளை திருக்கார்த்திகைன்னு கொண்டாடுறோம்.
சித்திரை மாசம் சித்திரை நட்சத்திரம் வரும் நாளை திருச்சித்திரைன்னு ஏன் கொண்டாடறதில்லை

பஸ்ஸ பின்னால தள்ளினா பின் வளையுமா, இல்லை பஸ் பின்னாடி போகுமா இல்லை, நமக்குத் தான் பின்னடி வலிக்குமா?

வேட்டி மேல வேலி விழுந்தாலும் வேலி மேல வேட்டி விழுந்தாலும் கிழியப்போறது என்னவோ வேட்டி தான்.

முகுந்தன் said...

விஜய் ,

//பஸ்ஸ பின்னால தள்ளினா பின் வளையுமா, இல்லை பஸ் பின்னாடி போகுமா இல்லை, நமக்குத் தான் பின்னடி வலிக்குமா?//

நமக்குத் தான் பின்னடி வலிக்குமா?
இது நல்லா இருக்கு...