Wednesday, June 11, 2008

ஏக்கம்

எப்பொழுதும் எதற்காகவோ ஏங்கிக்கொண்டே இருக்கிறோம்,
சிறு வயதில் மிட்டாய்கள் மற்றும் பொம்மைகள்,
சிறிது வளர்ந்தபின் வேறு சில விளையாட்டு சாமான்கள்,
இன்னும் கொஞ்ச நாட்களில் சைக்கிள்,பைக்...
விடலை பருவத்திலிருந்து காதலுக்காக...

நல்ல வேலை,நல்ல சம்பளம் வேண்டுமென்று,
ஒரு நல்ல நல்ல வாழ்க்கை துணை வேண்டுமென்று,
ஒரு குழந்தை வேண்டுமென்று,

வீடு வாங்க வேண்டுமென்று.....
வீட்டிற்கு தேவையான அனைத்த்த்த்த்த்தும் வேண்டுமென்று,
எது கண்ணில் பட்டாலும் வாங்க கிரெடிட் கார்டு வேண்டுமென்று,
கிரெடிட் கார்டு வாங்கியதும் கடன் வேண்டுமென்று,
கடன் வாங்கியதும் கடன் அடைக்க வேண்டுமென்று,

பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்று,
அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று,
நல்ல இடத்தில் மணமுடிக்க வேண்டுமென்று,
அவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று,
அவர்கள் வீடு வாங்க வேண்டுமென்று....
வயதானதும் அவர்கள் நம்மை கவனிக்க வேண்டுமென்று...


எப்பொழுதுமே ஏங்கி கொண்டே இருப்பது தான் வாழ்க்கையா?
என்ன கொடுமை ஆண்டவா இது.... போதும் .... போதும் ....

எங்கள் ஏக்கத்தை போக்கிவிட்டு எங்களுக்கு தேவையானதை
(வேண்டியதை இல்லை) மட்டும் தர வேண்டுமென்று,
ஒரு நாளேனும் நீ ஏங்கிப்பார்......



12 comments:

Karthika said...

Nice concept. But the introduction about urself is very contrast to this concept. Isn't it? :)

முகுந்தன் said...

karthika,

Thanks for your comments.
Are you referring to my first post or something mentioned in my profile?

Shwetha Robert said...

yekkam ileena.....life aimless aa poidunga:)))

greedy aa iruka venam.....but motivation & goal to achieve kandippa irukanum.

முகுந்தன் said...

//yekkam ileena.....life aimless aa poidunga:)))//

You may be right.Goals are different but there should not be too much expectation on anything and everything.

விஜய் said...

Concept நல்லாத்தான் இருக்கு. ஆனால், இந்த ஏக்கமும் தேடலும் இல்லையென்றால் வாழ்வில் சுகம் இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயம்.

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருகும்;
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் (துள்ளாத மனமும் துள்ளும் பாடல் வரிகள்)
உங்கள் ஏக்கங்கள் நிறைவேற எனது வாழ்த்துக்கள்.
நீங்கள் ஏங்கும் விஷயங்கள் அதிகரிக்கவும் எனது வாழ்த்துக்கள் :)
அன்புடன்,
விஜய்

முகுந்தன் said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி விஜய்,
இப்போ என்னோட ஒரே ஏக்கம் இனிமே எல்லாத்துக்கும் ஏங்க கூடாதுன்னு தான்....

ஆனால் போகிற போக்கில் ஏக்கம் அதிகமாக வாழ்த்துக்கள்னு சொல்லி
என்ன சபிச்சிடீங்களே :-)

Shwetha Robert said...

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருகும்;
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
---------------

Nice lines, isnt it Mukunthan:)))

முகுந்தன் said...

//Nice lines, isnt it Mukunthan:)))//

Yes. This is one of my favourite songs :-))

I am not against aiming for something in life,but for content in life :)

Karthika said...

Mukundh, I refer ur introduction about urself in ur profile. That is "என்னடா இவன் சென்னை தமிழன்னு பேர் வெச்சிருக்கான்னு யோசிக்காதீங்க. எப்பவும் சென்னை ஞாபகமாகவே இருக்கு". I think u r longing for Chennai. So I told like that. Anyway thank u for ur comments in my blog.

முகுந்தன் said...

Karthika ,
You are right.
I really dont want to be like that but somehow feel everyone including me is longing for atleast one of the things mentioned and
I want to come out of
that:-)

Ramya Ramani said...

\\எப்பொழுதும் எதற்காகவோ ஏங்கிக்கொண்டே இருக்கிறோம்\\

அது மனித இயல்பு இல்லியா..

\\எங்கள் ஏக்கத்தை போக்கிவிட்டு எங்களுக்கு தேவையானதை
(வேண்டியதை இல்லை) மட்டும் தர வேண்டுமென்று,
ஒரு நாளேனும் நீ ஏங்கிப்பார்......\\

கேக்க நல்லா இருக்கு ஆனா, நடப்பு நிலையில் அதுவே சாத்தியம் இல்லை தானே?

என்னை பொருத்தவரை, ஒரு Want இருந்தால் தான் அதை அடைய நாம் உழைத்து வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை கொண்டு வருகிறோம்.

முகுந்தன் said...

ரம்யா,

//அது மனித இயல்பு இல்லியா..//

அது மனித இயல்பு தான் . ஆனால் என் கருத்து என்னவென்றால்
நாம் ஏங்கிக்கொண்டே இருக்கிறோமே தவிர கிடைத்ததை
சந்தோஷமாக அனுபவிப்பதில்லை...


//கேக்க நல்லா இருக்கு ஆனா,
நடப்பு நிலையில் அதுவே சாத்தியம் இல்லை தானே?//

நீங்கள் சொன்னது சரிதான் .ஏன் என்றால் //தேவையானதை
(வேண்டியதை இல்லை) மட்டும் தர வேண்டுமென்று,
ஒரு நாளேனும் நீ ஏங்கிப்பார்.// என்பதே ஒரு ஏக்கம் தானே :-))

உங்கள் கருத்துக்கு நன்றி...

முகுந்தன்